search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கடலூரில் கல்லூரி மாணவி, பள்ளி மாணவன் மாயம்
    X

    கடலூரில் கல்லூரி மாணவி, பள்ளி மாணவன் மாயம்

    • கல்லூரி மாணவி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
    • கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே கேப்பர்மலையைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி தேவனாம்பட்டினம் அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாணவியை தேடினர். ஆனால் எங்கு தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    இதேபோல் கடலூர் புதுநகரை சேர்ந்த 16 வயது மாணவன் கடலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளி மாணவன் டியூஷனுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளி மாணவனை தேடினர். ஆனால் எங்கு தேடியும் மாணவன் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×