search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் விவசாயிகள் பயன்பெற கால்நடை வளர்போருக்கு ரூ.9.6 லட்சம் நிதி ஒதுக்கீடு: கலெக்டர் தகவல்
    X

    கடலூரில் விவசாயிகள் பயன்பெற கால்நடை வளர்போருக்கு ரூ.9.6 லட்சம் நிதி ஒதுக்கீடு: கலெக்டர் தகவல்

    • தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2023-2024 ஆம் ஆண்டு ரூ.10.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • கடந்த பத்து வருடங்களில் இத்திட்டத்தில் பயன் பெற்றிருக்க கூடாது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- விவசாயிகள் வாழ்க்கை தரத்தினை சீராக மேம்படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2023-2024 ஆம் ஆண்டு ரூ.10.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசு மானியத்துடன் கூடிய தீவனம் பயிர் அபிவிருத்தி மற்றும் அதன் பயன்பாட்டு மேலாண்மை குறித்து கீழ்க்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. கடலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 50 சதவீதம் மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள் 60 எண்ணிக்கை சிறு, குறு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்போருக்கு ரூ. 9.6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தீவன விரயத்தை 30-40 சதவீதம் குறைக்கலாம். இத்திட்ட த்தின் கீழ் இரண்டு குதிரை திறன் கொண்ட மின்சா ரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்படும்.

    இந்த திட்ட த்தில் பயன்பெற குறைந்த பட்சம் 2 கால்நடைகள் அல்லது 2 கால்நடை அலகுகள் மற்றும் 0.5 ஏக்கர் நிலத்தில் அதிக மகசூல் தரும் பசுந்தீவனம் வைத்திருக்க வேண்டும். கடந்த பத்து வருடங்களில் இத்திட்டத்தில் பயன் பெற்றிருக்க கூடாது. சிறு, குறு மகளிர், எஸ்.சி, எஸ்.டி விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் இதன் கீழ் 20 ஏக்கர் நிலப்பரப்பில் பசுந்தீவன புற்களை தோட்டங்களில் ஊடுபயிராக வளர்க்க ஏக்கருக்கு ரூ. 3000 வீதம் மானியம் வழங்க ரூ. 60,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பயன்பெற விவசாயிகள் சொந்தமாக கால்நடைகளும் குறைந்த பட்சம் 0.50 ஏக்கர் தீவனம் ஊடுபயிராக பயிர் செய்ய இடமும் வைத்திருக்க வேண்டும். அதிக பட்சமாக ஒரு ஹெக்டேர் வரை மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற சிறு, குறு, மகளிர், எஸ்.சி, எஸ்.டி விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதில் பயன்பெறும் விவசாயிகள் முறையாக நீர் சேகரிப்பு மேலாண்மை செயல்படுத்த வேண்டும். அதிகமாக மகசூல் செய்யப்படும் தீவனங்களை ஊறுகாய் புல்லாக மாற்றி சேகரிக்கலாம். அதை அருகில் உள்ள விவசாயிகள் விற்பனை செய்யலாம். இந்த திட்டங்களில் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை நிலையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×