என் மலர்
கடலூர்
- நிலை தடுமாறி சாலையில் மயங்கி விழுந்த ராமசந்திரன் இறந்தார்.
- ராமசந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
விழுப்புரம் மாவட்டம் பிடாகம் நத்தபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன் (வயது 66) ஓய்வு பெற்ற கோர்ட்டு ஊழியர். இந்நிலையில் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் பண்ருட்டி அருகே பைத்தாம்பாடி வழியாக சென்றார். அப்போது திடீரென அவருக்கு வழிப்பு ஏற்பட்டது. இதில் நிலை தடுமாறி சாலையில் மயங்கி விழுந்த ராமசந்திரன் இறந்தார்.
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமசந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மது குடித்து தடுமாறியபடி மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார்.
- வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்த ஜெயக்குமாரை அதிரடியாக கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சி க்குட்பட்ட கூத்தன்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 36). கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இரவு திட்டக்குடி டாஸ்மாக்கில் அளவுக்கு அதிகமாக மது குடித்து தடுமாறியபடி மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். திட்டக்குடி - ராமநத்தம் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டி ருந்தனர். அந்த வழியாக வந்த ஜெயக்குமாரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் குடித்து விட்டு வந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனைதொடர்ந்து அவரால் மோட்டார் சைக்கிளை இயக்க முடியாது என்பதால், ஜெயக்குமாரின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். நாளை காலை போலீஸ் நிலையத்திற்கு வந்து மோட்டார் சைக்கிளை எடுத்து செல்ல கூறி அனுப்பி வைத்தனர்.
அப்போது போதையில் ஜெயக்குமார், திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே மரவாடியில் இருந்த மரங்களை எடுத்து சாலையில் குறுக்கே வைத்தார். மரவாடியில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து வந்து நடுரோட்டில் போட்டு அமர்ந்தார். அவ்வழியே வந்த வாகனங்கள், இந்த சாலையில் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தினார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சாலையில் இருந்த மரங்களை அப்புறப்படுத்தினர். மேலும் இதுபற்றி திட்டக்குடி கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரன் கொடுத்து புகாரின் பேரில் திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தலைக்கேறிய போதையில் சாலையில் மரக்கட்டகளை போட்டு வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்த ஜெயக்குமாரை அதிரடியாக கைது செய்தனர்.
- வீரட்டானேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
- ஆனி மாத முதல் சோமவார தினமான திங்களன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது வீரட்டானேஸ்வரர் கோவில். இது மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தமிழ் மாத முதல் சோமவார தினத்தன்று அறுபத்தி மூவர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதேபோல ஆனி மாத முதல் சோமவார தினமான திங்களன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு பால், தயிர்,சந்தனம், பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு மூலிகை திரவிய ங்களால்சிறப்பு அபிஷேகம்,ஆராத னை விசேஷ பூஜை சிறப்பு மலர் அலங்காரம், ஆகியவை நடைபெற்றது பின்னர் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமானவர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இங்கு சமயக்குரவ ர்களான அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகியோர் ஸ்தல நாயகர் திரிபுர சம்காரமூர்த்தி யை வணங்கிய நிலையில் எழுந்தருளி சேவை சாதிக்கி ன்றனர் என்பது மிகவும் சிறப்பாகும்.
- மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.
- தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஜூன் மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 23-ந்தேதி வெள்ளிக் கிழமை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும். கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணி முதல் 10.05 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம். இக்குறைகளுக்கு சம்மந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரி யபதில் அளிக்கவும் மேலும் தொடர் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பினை கடலூர் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் உலக யோகா தின விழா நடைபெற்றது.
- வடலூரில் அமைந்துள்ள சத்ய ஞான சபைக்கு செல்லும் கவர்னர், வள்ளலாரின் 200-வது ஆண்டு விழாவில் பங்கேற்று பேசுகிறார்.
சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உலக யோகா தின விழா இன்று நடைபெற்றது.
இதனை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார். இதற்காக சென்னையில் இருந்து கார் மூலம் புதுவை வழியாக நேற்று இரவு 7.45 மணிக்கு சிதம்பரம் வந்தார்.
அவரை கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், பல்கலைக்கழக துணைவேந்தர் ராம. கதிரேசன் பதிவாளர் சிங்காரவேலு ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
நேற்று இரவு அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் கவர்னர் தங்கினார். இன்று (புதன்கிழமை) காலை அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் உலக யோகா தின விழா நடைபெற்றது.
இதில் கவர்னர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு யோகா செய்து தொடங்கி வைத்தார். கவர்னர் மனைவி லட்சுமி ரவியும் பங்கேற்று யோகா செய்தார். மேலும் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.
பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் கவர்னர் ஓய்வு எடுத்தார்.
இன்று மதியம் 3.30 மணியளவில் அங்கிருந்து காரில் புறப்பட்டு வள்ளலார் பிறந்த மருதூர் கிராமத்துக்கு செல்கிறார். அதனை தொடர்ந்து வள்ளலார் வாழ்ந்த கருங்குழி கிராமத்துக்கு சென்று அவரது இல்லத்தை பார்வையிடுகிறார்.
அதன் பின்னர் வடலூரில் அமைந்துள்ள சத்ய ஞான சபைக்கு செல்லும் கவர்னர் அங்கு நடைபெறும் வள்ளலாரின் 200-வது ஆண்டு விழாவில் பங்கேற்று பேசுகிறார்.
அதன் பின்னர் காரில் புறப்பட்டு கடலூர், புதுவை வழியாக சென்னை செல்கிறார்.
- யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி
- மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஐ.என்.ஸ். விக்ராந்த் கப்பலில் அதிகாரிகளுடன் யோகா செய்தார்
சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 9-வது சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்த யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யோகா செய்தார்.
அதேபோல் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், ஸ்மிரிதி இரானி, ராஜ்நாத் சிங், அனுராக் தாகூர் ஆகியோர் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யோகா செய்தனர்.
உத்தரகாண்டில் யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், உத்தரகாண்ட் முதலமைச்சர் கலந்து கொண்டார்.
ராணுவ வீரர்களும் லடாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் யோகா செய்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினர்.
- கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது.
- 91 பேர் லேசான மற்றும் பலத்த காயங்களுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
கடலூர்:
பண்ருட்டியில் இருந்து புறப்பட்ட தனியார் பஸ் கடலூர் நோக்கி நேற்று காலை 9 மணியளவில் வந்து கொண்டிருந்தது. இதேபோல கடலூரில் இருந்து மற்றொரு தனியார் பஸ் பண்ருட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால் வேலை செல்பவர்கள், பள்ளிக்கு செல்பவர்கள் என ஏராளமான பயணிகள் பஸ்களில் சென்றனர்.
இதில் கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரில் கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 2 பஸ்களில் சென்ற 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்றொருவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. மேலும், 91 பேர் லேசான மற்றும் பலத்த காயங்களுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து மேல்சிக்சைக்காக புதுவை ஜிப்மர் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்து புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கடலூர் ஆலப்பாக்கத்தை சேர்ந்த துரை (68) சிகிச்சை பலனின்றி இன்று நண்பகலில் இறந்தார். மேலும், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
- பாதுகாப்போர் நல சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் கடலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
- இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆளவந்தார் தலைமை தாங்கினார்.
கடலூர்:
கடலூர் தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் சார்பில் இலவச மனை பட்டா வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம் இன்று காலை நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நல சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் கடலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
கடலூர் வட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி நலத்துறையின் அறிவிப்புக்கிணங்க மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் தாசில்தார் அலுவலகத்தில் மனுஅளித்தனர் இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆளவந்தார் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் வீரமணி, அரிநாராயணன், ரவி, ஜெயபால், சுந்தரபாண்டியன் கனகராஜ், அப்துல் ஹமீத், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனா..
- கனிமொழியை புதுவை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தனர்.
- சிகிச்சை பலன் அளிக்காமல் அங்கு அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த அங்கு செட்டிபாளையத்தை சேர்ந்தவர் கனிமொழி (30) இவர் நெய்வேலி மகளிர் போலீஸ்நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த கனிமொழிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரசவ வலிஏற்பட்டு புதுவை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தனர்.அங்கு அவருக்குஅழகான பெண் குழந்தைபிறந்தது.
தாயும் சேயும் நலமாக வீடு திரும்பினர்.நேற்று மாலை கனிமொழிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக புதுவைராஜீவ்காந்தி ஆஸ்பத்திரிக்குகொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அங்கு அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இது பற்றி புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.
- நெல்லிக்குப்பம் அருகே மேல் பட்டாம் பாக்கத்தில் நடந்த கோர விபத்தில் 5 பேர் பலியாகினர்.
- எம்.சி.சம்பத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
கடலூர்:
நெல்லிக்குப்பம் அருகே மேல் பட்டாம் பாக்கத்தில் நடந்த கோர விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 91 பேர் காயம் அடைந்து கடலூர் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் நேரில் சந்தித்து பழங்கள், பிஸ்கட், பிரட் ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினர். அப்போது மாவட்ட அவைத் தலைவர் சேவல்குமார், ஒன்றிய செயலாளர் காசிநாதன், பகுதி செயலாளர்கள் கந்தன், வெங்கட்ராமன், இலக்கிய அணி ஏழுமலை, ஒன்றிய கவுன்சிலர்கள் வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- தம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உலக யோகா தின விழா நாளை நடைபெற உள்ளது.
- வள்ளலார் வாழ்ந்த கருங்குழி கிராமத்துக்கு சென்று அவரது வீட்டை பார்வையிடுகிறார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உலக யோகா தின விழா நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சென்னையிலிருந்து புதுச்சேரி வழியாக காரில் இன்று இரவு 7.30 மணிக்கு சிதம்பரம் வருகிறார். இன்று இரவு அண்ணாமலை பல்கலைக் கழ க விருந்தினர் விடுதியில் தங்குகிறார். நாளை (புதன்கிழமை) பல்கலைக் கழக விளையாட்டு மைதா னத்தில் நடைபெறும் உலக யோகா தின விழாவில் கவர்னர் ஆர்.என். ரவி பங்கேற்கிறார்.
நாளை மதியம் 3.30 மணியளவில் அங்கிருந்து காரில் புறப்பட்டு வள்ளலார் பிறந்த இடமான மருதூர் செல்கிறார். அதனை தொடர்ந்து வள்ளலார் வாழ்ந்த கருங்குழி கிராமத்துக்கு சென்று அவரது வீட்டை பார்வையிடுகிறார். இதனை தொடர்ந்து வடலூரில அநை்துள்ள வள்ளலாரின் சத்திய ஞான சபைக்கு சென்று வழிபடுகிறார். பின்னர் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
- கோர விபத்தில் 5 பேர் பலியாகியும், 91 பேர் காயமடைந்தனர்.
- அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ. கணேசன் வழங்கி ஆறுதல்
கடலூர்:
நெல்லிக்குப்பம் அருகே மேல்பட்டாம்பாக்கத்தில் 2 பஸ் நேருக்கு நேர் மோதி நடந்த கோர விபத்தில் 5 பேர் பலியாகியும், 91 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆகியோர் நேரில் பார்வை யிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய தோடு உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்களுக்கு அறிவுறுத்தினர்.
பின்னர் விபத்தில் இறந்த குடும்பத்திற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் நிவாரண உதவி அறிவித்ததை தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய்க்காண காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார்கள். கடலூர் மற்றும் புதுச்சேரி மருத்துவமனையில் விபத்தில் காயம் அடைந்து அனுமதிக்கப்பட்ட நபர்க ளை அமைச்சர்கள் எம். ஆர்.கே பன்னீர்செல்வம், சி.வெ. கணேசன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
அப்போது கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மாநகர தி.மு.க செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாள ர்கள் சுப்பிரமணி, தன ஞ்ஜெயன், விஜய சுந்தரம், பகுதி செயலா ளர்கள் சலீம், நடராஜன் , மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழி ல்நுட்ப அணி ஒருங்கிணை ப்பாளர் கார்த்திக், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்த தாரர் ராஜசேகர், மாநகர துணை செயலாளர் சுந்தர மூர்த்தி, மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, சங்கீதா, கவுன்சிலர்கள் பார்வதி, சாய்த்துனிஷா சலீம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






