search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Court servant"

    • நிலை தடுமாறி சாலையில் மயங்கி விழுந்த ராமசந்திரன் இறந்தார்.
    • ராமசந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் பிடாகம் நத்தபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன் (வயது 66) ஓய்வு பெற்ற கோர்ட்டு ஊழியர். இந்நிலையில் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் பண்ருட்டி அருகே பைத்தாம்பாடி வழியாக சென்றார். அப்போது திடீரென அவருக்கு வழிப்பு ஏற்பட்டது. இதில் நிலை தடுமாறி சாலையில் மயங்கி விழுந்த ராமசந்திரன் இறந்தார்.

    இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமசந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாலதி திண்டிவனம் கோர்ட்டில் தட்டச்சு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
    • மர்ம நபர்கள் மாலதியின் தங்கச் செயினை பறிக்க மீண்டும் முயற்சி செய்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் மாலதி,அவரது சகோதரி மனோ சித்ரா. மாலதி திண்டிவனம் கோர்ட்டில் தட்டச்சு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.இவரது சகோதரி மனோ சித்ரா குழந்தைகள் நல அலுவலராக உள்ளார்.இந்த நிலையில் 2 பேரும் பணியை முடித்துவிட்டு இரவு 8.30 மணி அளவில் திண்டிவனம் மேம்பாலம் கீழ்ப்பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் கோபாலபுரம் சென்று கொண்டிருந்தனர். 

    அப்பொழுது இவர்களை மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் திண்டிவனம் தீயணைப்பு நிலையம் அருகே வரும்போது மாலதி அணிந்திருந்த தங்கச் செயினை பறிக்க முயற்சி செய்தனர்.மாலதி மற்றும் மனோ சித்ரா 2 பேரும் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர். தொடர்ந்து மர்ம நபர்கள் மாலதியின் தங்கச் செயினை பறிக்க மீண்டும் முயற்சி செய்தனர்.மாலதி தங்கச் செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் இவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். அப்போது அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். இதில் மாலதிக்கு காயம் ஏற்பட்டது.

    இது குறித்து திண்டிவனம் போலீஸ் நிலையம் மற்றும் 108 ஆம்புலன்ஸ்க்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவம் நடந்து அரை மணி நேரம் கழித்து தாமதமாக வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.திண்டிவனம் பகுதியில் தொடர்ந்து வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    ×