என் மலர்
கடலூர்
- மோட்டார் சைக்கிள்களை பொது மக்கள் நிறுத்தி செல்கின்றனர்.
- கயிறு பதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம், ஜூன்.25-
விருத்தாசலத்தில் நாளுக்கு நாள் போக்கு வரத்து நெரிசல் பெருகி க்கொண்டே செல்கிறது. சாலையோரம் போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள்களை பொது மக்கள் நிறுத்தி செல்கின்றனர்.
இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்படி, விருத்தாசலம் துணை சூப்பிரண்டு ஆரோக்கி யராஜ் அறிவுறுத்தலின்படி, இன்ஸ்பெக்டர் முருகேசன் கண்காணிப்பில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் பாலக்கரை, கடைவீதி, விருத்தகிரீஸ்வரர் கோவில் மாடவீதிகள் உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் கயிறு பதிக்கும் பணியில் ஈடுபட்டனர். விதிகளை மீறி சாலையோர கயிற்றுக்கு வெளியே நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
- ஆனி மாதம், இறைவழி பாட்டிற்கு உகந்த மாதம்.
- ஆனிதிருமஞ்சனம் முக்கியமான திருவிழா வாகும்.
கடலூர்:
தேவர்களின் சந்தியா காலமாக விளங்கும் ஆனி மாதம், இறைவழி பாட்டிற்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் உத்திர நட்சத்திர நாளில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதுவே ஆனித்திருமஞ்சனம் என்று போற்றப்படும். இந்த ஆனித்திருமஞ்சனம் திருவதிகை வீரட்டா னேசுவரர் கோவிலில் இன்று மாலை நடக்கிறது. திருவதிகை வீரட்டானேசு வரர் கோவில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவில்ஆகும்.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இங்கு நடராஜர், சிவகாமசுந்தரி சாமிக்கு ஆண்டுக்கு 6 அபிஷேகம் நடக்கிறது. இதில் ஆனிதிருமஞ்சனம் முக்கியமான திருவிழா வாகும். விழாவையொட்டி இன்று மாலை உற்சவர் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சாமிக்கு 11 வகையான மூலிகை திரவியங்களில் மகா அபிஷேகம் நடக்கிறது. பின்னர் உற்சவர் நடராஜர், சிவகாம சுந்தரியுடன் மாடவீதி உலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், உற்சவதாரர், சிவ தொண்டர்கள், கோவில் குருக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
- சுத்தமாகவும் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அகற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- அனைத்து போஸ்டர்களையும் அகற்றினர்.
கடலூர்:
தமிழகத்தில் சாலைகளில் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் , கடலூர் மாநகரம் அனைவரும் பாராட்டக்கூடிய வகையில் சுத்தமாகவும் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அகற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.
இந்நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் கவுன்சிலர்கள், ஊழியர்கள் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தடுப்புக்கட்டையில் ஒட்டப்பட்டு இருந்த அனைத்து போஸ்டர்களையும் அகற்றினார்கள்.
- கும்பாபிஷேகம் முன்னாள் எம்.பி பி.ஆர்.எஸ். வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ பி.கே.என். கணேசமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது.
- சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் மற்றும் சாமி வீதியுலா நடைபெறுகிறது.
கடலூர்:
கடலூர் அருகே பூண்டியாங்குப்பத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சமேத புனிதவேல் திருமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நாளை ஞாயிற்றுக்கிழமை 25-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் முன்னாள் எம்.பி பி.ஆர்.எஸ். வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ பி.கே.என். கணேசமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து இன்று காலை கணபதி ஹோமத்துடன், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜைகள் மற்றும் பூர்ணாஹிதி நடைபெறுகிறது. பின்னர் சிகர விழாவான கும்பாபிஷேக விழா 25-ந்தேதி காலை கோ பூஜை , 2-ம் கால யாகசாலை பூஜை மற்றும் ஹோமங்கள் நடைபெறுகிறது. தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கடம் புறப்பாடாகி காலை 10.10 மணிக்கு புனித வேல் திருமுருகன் ராஜகோபுரம், கொடிமரம் மற்றும் பரிவார மூர்த்திகள் கோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடை பெறுகிறது. பின்னர் மாலை சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் மற்றும் சாமி வீதியுலா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம தலைவர் அன்பழகன், அறங்காவலர் பரமாநந்தம், திருப்பணிக்குழு தலைவர் துரைராஜ், செயலாளர் குணசேகர், ஆடிட்டர் செந்தில்குமார், திருப்பணிக்குழு துணைத் தலைவர்கள் சம்பத்குமார், சாம்பசிவம் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், கிராம வாசிகள், இளைஞர்கள் செய்து வருகின்றனர்.
- பத்மாவதி மற்றும் அவரது கணவர், குழந்தைகள், உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
- குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக கையில் பெட்ரோல் கேனை கொண்டு வந்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி. கர்ப்பிணியான பத்மாவதிக்கு, கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 19.9.2022 அன்று அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சிகிச்சை முடிந்ததும் பத்மாவதி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அதன் பிறகு பத்மாவதிக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 3 நாட்களாக எவ்வித சிகிச்சையும் அளிக்காததால், உறவினர்கள் அவரை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் பத்மாவதியை பரிசோதனை செய்ததில் பிரசவத்தின் போது குடல் பகுதியையும், கர்ப்பப்பை பகுதியையும் சேர்த்து தையல் போட்டுள்ளதும், அதனால் தான் வயிறு வலி ஏற்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட பத்மாவதி, சிகிச்சை முடிந்ததும் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல முறை புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவ குழு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு, எவ்வித அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை என தெரிகிறது. இதனால் பத்மாவதி மற்றும் அவரது குடும்பத்தினர் கலெக்டரிடம் தொடர்ந்து புகார் அளித்தும் பதில் ஏதும் இல்லை. இது தொடர்பாக பத்மாவதியின் உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியின் முன்பாக ஏற்கனவே போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை பத்மாவதி மற்றும் அவரது கணவர், குழந்தைகள், உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் அங்கு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக கையில் பெட்ரோல் கேனை கொண்டு வந்தனர். இதனை பார்த்த போலீசார் அவர்களிடமிருந்து பெட்ரோல் கேனை வலுக்கட்டாயமாக பிடுங்கினர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுவரையில் மூன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேல் எங்களால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது. எனவே, நாங்கள் அனைவரும் உயிரை மாய்த்துக்கொண்டு எங்களுடைய உடல் உறுப்புகளை தானமாக வழங்குகின்றோம் என்று கூறி ஆஸ்பத்திரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பத்மாவதி உறவினர்கள் சமாதானப்படுத்தி வருகின்றனர். தவறான சிகிச்சை செய்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடலூர் அரசு ஆஸ்பத்திரி வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.
- என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகாசன தினம் கொண்டாடப்பட்டது.
- பள்ளி மாணவிகளுக்கு யோகாசனத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
கடலூர்:
நெய்வேலி புதுநகர் 11-வது வட்டம் என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகாசன தினம் கொண்டாடப்பட்டது. நெய்வேலிஎன்.எல்.சி. பள்ளிகளின் கல்வித் துறை செயலாளரும்,பொது மேலாளருமான நாகராஜன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். என்எல்சி பொது மருத்து வமனையின் முதன்மை பொது கண்காணிப்பாளர் டாக்டர் தாரணி மவுலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு யோகாசனத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் உடல் நலனை பேணுவதில் யோகா சனத்தின் முக்கியத்துவம் குறித்தும் மாணவிகளுக்கு கூறினார். நெய்வேலி அறிவு திருக்கோவில் அணியின் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு யோகாசன பயிற்சிகள் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், மாணவிகள் யோகாசனப் பயிற்சிகளை செய்தனர்.
- சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு பயிரில் அதிகளவில் செவ்வழுகல் நோய் தாக்குதல் காணப்பட்டது.
- பாதிக்கப்பட்ட கரும்பை பிளந்து பார்த்தால் ஆங்காங்கே சிவப்பு நிறமாகவும், வெள்ளை நிறமாகவும் கலந்து திட்டு திட்டாக காணப்படும்.
கடலூர்:
பண்ருட்டி வட்டாரம் சிறுவத்தூர் ஏரி பாளையம் போன்ற கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு பயிரில் அதிகளவில் செவ்வழுகல் நோய் தாக்குதல் காணப்பட்டது. இதனை பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குனர் டாக்டர் பார்த்தசாரதி ஆய்வு செய்தார். ஆய்வின் போது பாரி சர்க்கரை ஆலை நிறுவன அலுவலர் சுந்தர் கணேஷ், வேளாண்மை துணை அலுவலர் ராஜ்குமார், வேளாண்மை உதவி அலுவலர் சவுந்தரமேரி, முன்னோடி விவசாயி சசிகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். அதன் பின்னர் பார்த்த சாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
பண்ருட்டி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு பயிரில் ஒருவித பூஞ்சானம் உருவாக்கக்கூடிய செவ்வழுகல் நோய் ஆங்காங்கே பரவலாக காணப்படுகிறது. இந்த நோய் தாக்கப்பட்ட வயல்களில் கரும்பு பயிரின் இலைகளானது மஞ்சள் நிறமாக மாறி பின் கீழிருந்து மேல் நோக்கி காய்ந்து விடும். மேலும் இலைகளின் நடு நரம்புகள் சிவப்பு நிறமாக மாறிவிடுகிறது. பாதிக்கப்பட்ட கரும்பை பிளந்து பார்த்தால் ஆங்காங்கே சிவப்பு நிறமாகவும், வெள்ளை நிறமாகவும் கலந்து திட்டு திட்டாக காணப்படும். இதனால் கரும்பு அழுகிய சாராய வாடை வீசும்.
இந்த நோயை கட்டுப்படுத்த கரும்பு நடவு செய்வதற்கு முன் கரும்பு கரணைகளை கார்பெண்டசிம் 50 நனையம் தூள் என்ற பூஞ்சானக் கொல்லியினை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் கலந்து அதனுடன் 2.5 கிலோ யூரியாவை கலந்து அதில் கரும்பு கரணைகளை நனைத்து பின் நடவு செய்யலாம். இந்த நோய்க்கு மிதமான எதிர்ப்பு உள்ள CO 86032, CO 86249, COSI 95071, COG 93076, COC 22, COSI 6, COG 5 போன்ற ரகங்களை சாகுபடி செய்யலாம். அதிகம் பாதிக்கப்பட்ட வயல்களில் இருந்து பாதிக்கப்பட்ட கரும்பு குற்றுகளை அகற்றிய பின் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் தயோபெனைட் மீத்தைல் அல்லது ஒரு கிராம் கார்பன்டசிம் போன்ற பூஞ்சானக்கொல்லி மருந்துகளை கரைத்து மண்ணில் ஊற்றி இந்த நோயின் தீவிரத்தையும் பரவுதலையும் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- அந்த பகுதியில் உள்ள விவசாய விளைநிலத்தில் 10-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
- அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே பொண்ணங்குப்பத்தில் நேற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள விவசாய விளைநிலத்தில் 10-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த தென்னை மரத்தை இடி தாக்கியது. தனால் தென்னை மரம் தீ பற்றி எரிந்தது. இதனை தொடர்ந்து மேலும் ஒரு இடி விழுந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மகாதேவன் (வயது 49) படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- சிதம்பரம் அருகே சமைக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மூதாட்டி பலியானார்.
- மருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குபதிவு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
சிதம்பரம் அருகே மருதூர் பகுதியை சேர்ந்தவர் யசோதா மூதாட்டி. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் சமைத்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று இவரது சேலையில் எதிர்பாராத விதமாக தீ பிடித்தது. இதனால் மூதாட்டி படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்கு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி யசோதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குபதிவு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிதம்பரம் அருகே மது குடித்ததை மனைவி திட்டியதால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கண்ணன் வீட்டிலிருந்த பணத்தை ராஜலட்சுமிக்கு தெரியாமல் எடுத்து மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
கடலூர்:
சிதம்பரம் மணவாளி அருகே அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 55) விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (45). இந்நிலையில் முன்னதாக கண்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கண்ணன் மனைவி ராஜலட்சுமியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு ராஜலட்சுமி தர மறுத்துள்ளார். இதனையடுத்து கண்ணன் வீட்டிலிருந்த பணத்தை ராஜலட்சுமிக்கு தெரியாமல் எடுத்து மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
இதைபார்த்து ஆத்திரமடைந்த ராஜலட்சுமி கண்ணனை திட்டியுள்ளார். இதனால் மன உளச்சலில் இருந்த கண்ணன் தனது வீட்டின் பின்புறத்தில் இருந்த மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பஸ் சாலை யை விட்டு கீழே இறங்கி பள்ளத்தில் சிக்கியது.
- வந்தபின் பார்ப்போம் அல்லது வந்தால் பார்ப்போம் என்பது சமீபகால ஆட்சியா ளர்களின் செயல்பாடாக உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பட்டா ம்பாக்கத்தில் எதிரெதிரே வந்த பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இது வரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராள மானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நாளில் நெல்லிக்குப்பத்தில் டிராக்டர் மீது தனியார் பஸ் மோதி விபத்துக்கு ள்ளானது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பஸ் சாலை யை விட்டு கீழே இறங்கி பள்ளத்தில் சிக்கியது. இந்நிலையில் நேற்று நெல்லிக்குப்பத்தில் இருந்து வந்த தனியார் பஸ்சின் கியர் ராடு உடைந்து பஸ் தாறுமாறாக ஓடியது. நேருக்கு நேர் பஸ்கள் மோதிய விபத்தை தவிர்த்து மற்றவைகளில் உயிரிழப்பு ஏதும் இல்லை.
இந்த பஸ்கள் விபத்துக்கு ள்ளானதற்கு பஸ்சில் பணி செய்பவர்களை மட்டும் குறை கூறுவது சரியல்ல. பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தபடும் பஸ், லாரி போன்ற வாகனங்கள் ஆண்டுக்கு ஒரு முறை எப்.சி. எடுக்கப்படுகிறது. அதாவது, இந்த வாகனங்கள் பொது மக்களை ஏற்றிச் செல்வதற்கு உகந்தது என போக்குவரத்து அதிகாரிகள் சான்று அளிக்கின்றனர். அதன் பின்னரே இந்த வாகனங்கள் இயக்கப்படுகிறது. ஆனாலும், தனியார் பஸ்களில் திடீரென டயர் வெடிக்கிறது. கியர் ராடு உடைகிறது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழக்கிறது. இதில் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்.
ஹெவி லைசன்ஸ் இல்லாதவர்கள் பஸ் போன்ற கனரக வாகனங்களை இயக்குவது, செலவினங்களை குறைக்க தரமற்ற அல்லது பழைய பொருட்கள் விற்கும் கடைகளில் வாங்கப்பட்ட உதிரி பாகங்களை பஸ்சுக்கு பயன்படுத்துவது, ஒரிஜினல் டயரை வாங்காமல், பழைய டயர்களை வாங்கி ரீ டிரேட் செய்து பஸ்களுக்கு பொறுத்துவது போன்றவைகளே இது போன்ற விபத்துக்களுக்கு காரணமாகும். இதனை கண்காணிக்கும் பொறுப்பு போக்குவரத்து துறைக்கு உள்ளதென்பது மறுக்க முடியாத உண்மையாகும். சமீபத்தில் கடலூர் போக்குவரத்து துறையில் நடைபெற்ற கூட்டத்தில், கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி பேசிய வீடியோ சமூக வலைத ளங்களில் வைரலாக பரவியது. பொதுமக்கள் எளிதில் அணுகமுடியாத துறையாக போக்குவரத்து துறை உள்ளது. புரோக்க ர்கள் இல்லாமல் இங்கு எந்த பணியும் நடப்பதில்லை.
லஞ்சம் வாங்குவதற்கு பதிலாக பிச்சை எடுத்து வாழலாம் என்றும், கடலூர் மாவட்டத்தில் லஞ்ச ஓழிப்பு துறைக்கு வரும் புகார்களில் அதிகளவில் போக்குவரத்து துறையை பற்றிதான் புகார்கள் வருகின்றன என்று பேசினார். இந்நிலையில்தான் கடலூர் மாவட்டத்தில் தனியார் பஸ்கள் தொடர் விபத்துக்குள்ளாகி வருகின்றன. இதனை கண்காணிக்கும் பொறுப்பி லிருந்து போக்குவரத்து துறை அதிகாரிகள் ஏன் விலகுகிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வரும் முன் காப்போம் என்பது ஆன்றோர் சொல். வந்தபின் பார்ப்போம் அல்லது வந்தால் பார்ப்போம் என்பது சமீபகால ஆட்சியா ளர்களின் செயல்பாடாக உள்ளது. ஒரு சம்பவம் நடந்த பிறகு அதைச் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அந்தவகையில் கூட தனியார் பஸ்களின் தொடர் விபத்து தொடர்பாக எந்த நடவடிக்கையையும், மாவட்ட நிர்வாகமும், போ க்குவரத்து துறையினரும் எடுக்க வில்லை என்பதே நிதர்ச னமான உண்மையாகும்.
- சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவ பக்தரை தீட்சிதர்கள் தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
- கார்வர்ணனை தள்ளி நிற்குமாறு கூறி உள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிவபுரியை சேர்ந்தவர் கார் வண்ணன் (வயது 61). சிவ பக்தர்.
இவர் தினமும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். அது போல் நேற்று சாமி தரிசனம் செய்ய நடராஜர் கோவிலுக்கு வந்தார்.
அப்போது அவர் சுவாமி முன் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை நடராஜர் கோவிலில் தீட்சிதர்களாக உள்ள கனக சபாபதி, அவரது மகன் ஸ்ரீவர்ஷன் ஆகியோர் கண்டித்துள்ளனர்.
கார்வர்ணனை தள்ளி நிற்குமாறு கூறி உள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கனகசபாபதி அவரது மகள் ஸ்ரீவர்ஷன் ஆகியோர் சிவபக்தர் கார்வண்ணன் கன்னத்தில் தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த கார்வண்ணன் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்து அவர் சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து தீட்சிதர்கள் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






