என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
வடலூரில் டிப்பர் லாரி மோதி மெக்கானிக் பலி: மூதாட்டி உள்பட 3 பேர் படுகாயம்
- வடலூர் ரெயில் நிலையம் அருகில் நடந்து சென்ற போது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியது.
- மயக்க நிலையில் இருந்த மூதாட்டி யார் என்பது தெரியவில்லை.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூரில் மெக்கானிக் சங்க கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த மெக்கானிக்குகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற 3 பேர் டீ குடிக்க கூட்ட அரங்கை விட்டு வெளியில் வந்தனர். இவர்கள் வடலூர் ரெயில் நிலையம் அருகில் நடந்து சென்ற போது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேேய உடல் நசுங்கி உயிரிழந்தார். மீதமுள்ள 2 பேர் பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்தனர். இதேபோல சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி மீதும் டிப்பர் லாரி மோதியது. அவரும் பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வடலூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த மோட்டார் சைக்கிள் மெக்கானிக் பாரி (வயது 30) என்பது தெரியவந்தது. மேலும், பலத்த காயமடைந்தவர்கள் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த கே.சுரேஷ், இ.சுரேஷ் என்பதும் தெரியவந்தது. மயக்க நிலையில் இருந்த மூதாட்டி யார் என்பது தெரியவில்லை. பலத்த காயமடைந்த மூதாட்டி உள்ளிட்ட 3 பேரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான பாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மெக்கானிக் கூட்டத்திற்கு வந்தவர் லாரி மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.