என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லிக்குப்பத்தில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது: 2 லட்சம் மதிப்பிலான நகை- பணம் சேதம்
- காமராஜ் குடும்பத்துடன் கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
- 1.20 லட்சம் பணம், 2 பவுன் நகை மற்றும் ஆவணங்கள் ,பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது.
கடலூர்:
நெல்லிக்குப்பம் பெரிய சோழவல்லியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 38). இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காமராஜ் தனது குடும்பத்துடன் அலறி அடித்துக் கொண்டு வெளியில் வந்து பார்த்தபோது, கூரை வீடு முழுவதும் எரிந்து கொண்டிருந்தது. காமராஜ் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர்.
இதில் காமராஜுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த 1.20 லட்சம் பணம், 2 பவுன் நகை மற்றும் ஆவணங்கள் ,பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு 2 லட்சம் ஆகும். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






