என் மலர்
கோயம்புத்தூர்
- 20 வயது வாலிபர் சிங்காநல்லூரில் உள்ள லாட்ஜில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
- லாட்ஜ் ஊழியர் அந்த வாலிபரிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார் .
கோவை,
கோவை வரதராஜ புரத்தை சேர்ந்தவர் 20 வயது வாலிபர். இவர் சிங்காநல்லூரில் உள்ள லாட்ஜில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகினர். இந்தநிலையில், ஓரின சேர்க்கையாளரான லாட்ஜ் ஊழியர் அந்த வாலிபரிடம் நாம் இருவரும் தனிமையில் ஜாலியாக இருக்கலாம் என கூறி அழைத்தார்.
அவர்கள் நீலிகோணாம்பாளையம் ரெயில்வே கேட் அருகே சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி லாட்ஜ் ஊழியர் அங்கு சென்று வாலிபரின் வருகைக்காக காத்திருந்தார்.
சிறிது நேரத்தில் அங்கு அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான அந்த வாலிபர் வந்தார். இருவரும் பேசி கொண்டிருந்தனர்.
அப்போது லாட்ஜ் ஊழியர் அந்த வாலிபரிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார் . இதனால் அந்த வாலிபர் அவரது நண்பர்கள் 2 பேரை அங்கு வரவழைத்தார்.
அங்கு வந்த அவரது நண்பர்கள் லாட்ஜ் ஊழியரின் நடவடிக்கையை கண்டித்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி பீர்பாட்டிலால் லாட்ஜ் ஊழியரை தாக்கி மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பி சென்றனர்.
இதில் காயமடைந்த லாட்ஜ் ஊழியரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாட்ஜ் ஊழியரை தாக்கிய சிங்காநல்லூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஆலன் சாயா(19), நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்த மோகனசுந்தர்(22), மற்றும் வரதராஜபுரத்தை சேர்ந்த கங்காதரன்(21) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- போலீசார் ராஜேஷின் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
- போலீசார் ராஜேஷின் மனைவிக்கு பணம் கொடுத்த ஆசிரியரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை வடவள்ளி வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது34). என்ஜினீயர்.
இவரது மனைவி லக்ஷயா (29). பட்டதாரி. இவர் பிரெஞ்சு மொழியில் பட்டம் பெற்று உள்ளார். இவர்களுக்கு யக்சிதா (10) என்ற மகள் உள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர்களுடன் ராஜேஷின் தாய் பிரேமா (74) என்ப வரும் வசித்து வந்தார். 6 மாதங்களுக்கு முன்பு தான் இவர் குடும்பத்துடன் இங்கு வந்து குடியேறினார்.
கடந்த 3 நாட்களுக்கும் மேலாக ராஜேசின் வீடு பூட்டப்பட்டு கிடந்தது. நேற்று மாலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ராஜேஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும், லக்ஷயா, யக்சிதா, பிரேமா ஆகியோர் விஷம் குடித்த நிலையிலும் இறந்து கிடந்தனர்.
போலீசார் ராஜேஷின் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அறையில் என்ஜினீயர் ராஜேஷ் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கைப்பட எழுதிய ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
என்ஜினீயர் ராஜேஷின் மனைவி லக்ஷயாவுக்கு, சின்மயா நகரை சேர்ந்த ஆசிரியரின் நட்பு கிடைத்தது. 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்நிலையில் அந்த ஆசிரியரிடம் தனது தேவைக்காக லக்ஷயா பணம் கேட்டுள்ளார். அவர் அடிக்கடி அவருக்கு பணம் கொடுத்துள்ளார். மேலும் தன்னிடம் இருந்த பணம் மட்டுமின்றி தனது நண்பர் ஒருவரிடம் இருந்தும் பணத்தை வாங்கி லக்ஷயாவுக்கு கொடுத்தார். இதுவரை ரூ.31 லட்சம் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே ஆசிரியருக்கு பணம் கொடுத்த அவரது நண்பர் பணம் கேட்கவே, 2 பேரும் லக்ஷயாவிடம் சென்று பணத்தை கேட்டுள்ளனர். அவர் சரியான பதில் சொல்லவில்லை என தெரிகிறது. இதையடுத்து 2 பேரும் லக்ஷயாவின் கணவர் ராஜேசை சந்தித்து, உனது மனைவிக்கு நாங்கள் பணம் கொடுத்துள்ளோம். அதற்கான ஆதாரம் என பணம் அனுப்பியதற்கான வங்கி பரிவர்த்தணையை காண்பித்தனர்.
இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் பணம் கொடுத்தவர்கள், அதனை கேட்டு தொந்தரவு கொடுக்கவே, ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ராஜேஷின் மனைவிக்கு பணம் கொடுத்த ஆசிரியரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆசிரியரின் நண்பரையும் விசாரிப்பதற்காக அவரையும் தேடி வருகின்றனர்.
- பயணிகள் சிலர் பஸ்சுக்காக காத்திருந்து இரவு நேரத்தில் நடைபாதையில் தூங்குகின்றனர்.
- பயணியின் அருகே நைசாக டீ டம்ளருடன் டீ குடிப்பது போல் அமர்ந்தார்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டு ப்பாளையம் பஸ் நிலையத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மற்றும் தென் மாவட்ட மக்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள்.
அப்படி வரும் பயணிகள் சிலர் பஸ்சுக்காக காத்திருந்து இரவு நேரத்தில் நடைபாதையில் தூங்கவும் செய்கின்றனர். அப்படி வந்த பயணி ஒருவர் மேட்டுப்பாளையம் பஸ் நிலைய த்தில் நடை மேடையில் படுத்து உறங்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர மர்மநபர் ஒருவர் ஏற்கனவே படுத்து உறங்கி கொண்டு இருந்த பயணியின் அருகே நைசாக டீ டம்ளருடன் அமர்ந்து டீ குடிப்பது போல் அமர்ந்து பின்னர் அங்கேயே தூங்குவது போல் நடித்து கொண்டு இருந்தார்.
சற்று நேரத்தில் பயணி நன்கு ஆழ்ந்த தூங்கிவிட அருகில் இருந்த மர்ம நபர் அவர் சட்டை பையில் வைத்து இருந்த பணத்தை எடுத்து தனது சட்டை பையில் வைத்து கொண்டு மீண்டும் தூங்குவது போல் நடிக்க ஆரம்பித்து பின்னர் அங்கு இருந்து தப்பி சென்றார்.
வீடியோ பரவுகிறது
பின்னர் காலையில் எழுந்து பார்த்த அந்த பயணி பணம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் படுத்து இருந்த இடத்தின் அருகே இருந்த கடையில் சி. சி. டி. வி காமிராவினை ஆய்வு செய்த போது இந்த காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இருப்பினும் பணத்தை இழந்த அந்த நபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை .தற்போது சி.சி.டி.வி காமிராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பணத்தை திருடி சென்ற மர்ம நபர் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
- சிம்மக் கொடியானது சிறப்பு பூஜைக்கு பின் கோவில் முன்புறம் உள்ள கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மேட்டு ப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிக்குண்டம் நிகழ்ச்சி விசேஷமானது ஆகும். இந்த ஆண்டுக்கான ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் லட்சார்ச்சனை நடந்தது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.
இன்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் சிம்மக் கொடியை தாரை, தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முத்தமிழ் வினாயர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து கொடியுடன் கோவிலை சுற்றி வந்தனர். சிம்மக் கொடியானது சிறப்பு பூஜைக்கு பின் கோவில் முன்புறம் உள்ள கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நடைபெற உள்ள து. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்குகின்றனர்.
விழா நிகழ்ச்சிகளை கோவில் துணை ஆணையர் கைலாசமூர்த்தி, பரம்ப ரை அறங்காவலர் வசந்தா ஆகியோ ர் செய்து வருகின்றனர்.
- கண்ணன் மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
- பீரோவில் இருந்த 18 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
கோவை,
கோவை சிவானந்தபுரம் கிருஷ்ணா அவென்யூவை சேர்ந்தவர் கண்ணன் (வயது38).
இவர் மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கண்ணன் தனது மனைவி, குழந்தை மற்றும் தாயுடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார்.
வீட்டின் முதல் மாடியில் அவரது தந்தை மோகன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது தரைத்தளத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 18 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
கண்ணன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதுகுறித்து கண்ணன் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதிவாகியிருந்த 3 பேரின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரகளை தேடி வருகின்றனர்.
இதேபோல், கோவை கணபதி இளங்கோ நகரை சேர்ந்தவர் முஸ்தபா(53). சொந்த தொழில் செய்து வருகிறார். இவரது சகோதரர் ஹசீபா பீளமேடு புரானி காலனியில் வசித்து வருகிறார். இவர் கடந்த 18-ந்தேதி துபாய் சென்றார்.
நேற்று அவரது உறவினர் ஒருவர் ஹசீபாவின் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இது குறித்து அவர், முஸ்தபாவுக்கு தகவல் கொடுத்தார். அவர் அங்கு சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க வளையல், ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 5 வாட்சுகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த முஸ்தபா பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- பேக்கரி முன்பு முதியவர் ஒருவர் நடந்து சென்றார்.
- முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கோவை,
கோவை-பொள்ளாச்சி மெயின் ரோடு தனியார் கல்லூரி அருகே பேக்கரி முன்பு சம்பவத்தன்று இரவு முதியவர் ஒருவர் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுக்கரை போலீசார் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் யார்? எந்த ஊரைஎன்பது குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரை வழங்கி டிரைவர்கள் திருப்பி அனுப்பினர்.
- ரூ.10 ஆயிரத்து 500 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை,
தமிழக-கேரள எல்லையான வாளையார் பகுதியில் கேரள மாநில ஆர்.டி.ஓ. சோதனைச்சாவடியும், எட்டிமடை பகுதியில் தமிழக ஆர்.டி.ஓ. சோதனைச்சாவடியும் உள்ளன.
இதனை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளிடம் உரிய ஆவணங்கள் இருந்தாலும் சுமார் ரூ.300 முதல் ரூ.1000 வரை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு மாநில எல்லையை கடக்க அனும திப்பதாக கூறப்படுகிறது.
அவ்வப்போது தமிழக மற்றும் கேரள சோதனைச்சாவடிகளில் அந்தந்த மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டு லஞ்சம் வாங்கும் அதிகா ரிகள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்தநிலையில் வாளையார் ஆர்டி.ஓ. சோதனை ச்சாவடியில் கேரள லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொ ண்டனர்.
அப்போது அங்கிருந்த ரூ.10 ஆயிரத்து 500 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அங்கிருந்த ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அங்கு வந்த சில லாரி டிரைவர்கள் சோதனைச்சாவடி ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றனர். இதனை பார்த்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். எதற்காக பணம் கொடுக்கிறீர்கள் என கேட்டபோது சோத னைச்சாவடி ஊழியர்கள் வழக்கமாக கேட்பார்கள் என தெரிவித்தனர்.
அதற்கு ஆவணங்கள் சரியாக இருந்தால் யாரும் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, லஞ்சம் கொடுப்பது தவறு என டிரைவர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரை வழங்கி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது.
- திடீரென ஆழமான பகுதிக்கு சென்றனர். வினு, நித்தீஷ் ஆகியோருக்கு நீச்சல் தெரியாததால் கல் குழியில் மூழ்கி இறந்தனர்.
- 2 மணி நேர தேடுதலுக்கு பின்னர் வினு, நித்தீஷ் ஆகியோரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கவுண்டன்பாளையம்:
கோவை அருகே உள்ள கோவில்பாளையம் அருகே உள்ள செட்டிபுதூரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் வினு (வயது 18). தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த நித்தீஷ் (18). டுட்டோரியல் கல்லூரியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் 2 பேரும் அவர்களது நண்பர்களான கோட்டைபாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் தனுஷ் (21), கூலித் தொழிலாளி சுரேந்தர் (20), அன்னூர் தெலுங்குபாளையத்தை சேர்ந்த லோகேஷ்ராஜ் (22) ஆகியோருடன் பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள பிளிச்சி அருகே உள்ள காளவராயன் மலைப்பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்கு வைத்து 5 பேரும் மது குடித்து ஜாலியாக இருந்தனர். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த வினு, நித்தீஷ் ஆகியோர் மலை அருகே உள்ள கல் குழியில் குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றனர். வினு, நித்தீஷ் ஆகியோருக்கு நீச்சல் தெரியாததால் கல் குழியில் மூழ்கி இறந்தனர். நீண்ட நேரமாக குளிக்க சென்ற நண்பர்கள் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் 2 பேரையும் தேடினர். அப்போது அவர் கல் குழியில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இதில் அதிர்ச்சியடைந்த அவர்கள் சத்தம் போட்டனர்.
இதனை கேட்ட அக்கம் பக்கதினர் விரைந்து சென்றனர். பின்னர் இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று கல்லூரி மாணவர் உள்பட 2 பேரின் உடல்களை தேடினர். இரவு 9 மணி வரை 4 மணி நேரத்துக்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் உடல்களை தேடினார். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இரவானதால் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் திரும்பி சென்றனர்.
இன்று காலை 6.30 மணி முதல் மீண்டும் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர தேடுதலுக்கு பின்னர் வினு, நித்தீஷ் ஆகியோரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
இவர்களை போல நாயக்கனூரை சேர்ந்த பிளஸ்-1 மாணவர் நித்யானந்தன் (16) என்பவர் அவரது நண்பர்களுடன் அதே கல் குழியில் குளித்துள்ளார். அவரும் கல் குழியில் மூழ்கி இறந்தார். அவரது உடலையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் போலீசா ர் இறந்த 3 மாணவர்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வீட்டில் துர்நாற்றம் வீசியதை அடுத்து, போலீசார் சோதனை நடத்தினர்.
- தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில், பொறியாளர் ராஜேஷ், அவரது மனைவி லக்ஷயா, 10 வயது மகள் யக்ஷிதா, ராஜேஷின் தாயார் பிரேமா ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வீட்டில் துர்நாற்றம் வீசியதை அடுத்து, போலீசார் சோதனை மேற்கொண்ட நிலையில் 4 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ராஜேஷ் தூக்கிட்டும், மற்ற மூன்று பேர் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
மேலும், கடன் தொல்லை காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நல்வாழ்விற்கான உள்நிலை தொழில்நுட்பங்களை சத்குரு பகிர்ந்து கொண்டார்.
- ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பாலசுப்பிரமணியம் ‘யோக அறிவியல்’ என்ற தலைப்பில் ஒரு அமர்வை நடத்தினர்.
"நாம் ஆனந்தமான, அனைவரையும் இணைத்து கொள்ளும் மனிதர்களாக நம்மை உருவாக்கி கொள்வது, அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை உருவாக்கும் நம்முடைய முயற்சியில் ஒரு முக்கிய படியாகும்" என ஈஷாவில் நடைபெற்ற G20 - S20 மாநாட்டில் சத்குரு கூறினார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் G-20 சந்திப்புகளின் ஒரு அங்கமாக, கோவை ஈஷா யோகா மையத்தில் S-20 என்ற பெயரில் 100-க்கு மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்ற அறிவியல் மாநாடு நேற்றும், இன்றும் நடைபெற்றது. இதில் 20 நாடுகளில் இருந்து விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், வல்லுநர்கள் மற்றும் சட்டம் இயற்றும் திறன் படைத்தவர்கள் என பல தரப்பினர் கலந்து கொண்டனர்.
அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடும் சிறப்பு அமர்வும் நடைபெற்றது. இந்த அமர்வில் நல்வாழ்விற்கான உள்நிலை தொழில்நுட்பங்களை சத்குரு பகிர்ந்து கொண்டார்.
2 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் 'தி ராயல் சொசைட்டி - இங்கிலாந்து', 'தேசிய அறிவியல் அகாடமி - அமெரிக்கா', 'சர்வதேச அறிவியல் கவுன்சில் - பிரான்ஸ், 'ஐரோப்பிய அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் - ஸ்விட்சர்லாந்து', 'இந்திய தேசிய அறிவியல் அகாடமி' உள்ளிட்ட உலகின் மிக முக்கியமான அறிவியல் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பசுமையான எதிர்காலத்திற்கான தூய எரிசக்தி, முழுமையான ஆரோக்கியம், சமூகம் மற்றும் கலாச்சாரத்துடன் அறிவியல் இணைப்பது ஆகிய மூன்று தலைப்புகளில் கலந்துரையாடல்கள் நிகழ்த்தினர்.
இக்கூட்டத்தில் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் பங்கேற்றார். அவர் ஆன்மீக மையத்தில் அறிவியல் மாநாடு நடத்துவது பற்றிய தனது கருத்தை கூறும் போது, "சுவாரஸ்மற்ற பழைய முறையிலான வரட்டுதனமான அறிவியலுக்கு ஒரு குறிப்பிட்ட எல்லை இருக்கிறது என்பதை தற்போது பலர் உணர்ந்து கொண்டுள்ளனர். பொதுவாக, வாழ்க்கையை அறிவியலை அணுகுவது போன்ற குறுகிய கண்ணோட்டத்துடன் புரிந்து கொள்ள முடியாது. வாழ்க்கையை புரிந்துகொள்ள அதிக விசாலமான பார்வை தேவை. அத்தகைய பார்வையை கொண்டுள்ள ஈஷா யோக மையத்தில் இந்த மாநாடு நடத்தப்படுவது சிறப்பானது" என கூறினார்.
சர்வதேச பிரதிநிதிகள் ஈஷாவில் தங்கியிருந்த அனுபவங்கள் குறித்து S-20 மாநாட்டின் தலைவர் அசுதோஷ் சர்மா கூறுகையில், "நியூயார்க்கில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலிலோ அல்லது மும்பை, டில்லியில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலிலோ ஒரு மாநாட்டை நடத்தினால் அதில் பெரிய வித்தியாசம் இருக்காது. ஆனால், ஈஷா யோக மையத்தை போன்ற ஒரு இடத்தில் S-20 மாநாட்டை நடத்துவது இந்தியா குறித்த புதிய பார்வையையும், அனுபவத்தையும் அளிக்கிறது" என S-20 மாநாட்டில் பங்கேற்ற சர்வதேச பிரதிநிதி ஒருவர் தன்னிடம் பகிர்ந்து கொண்டதாக கூறினார்.

கலைநிகழ்ச்சி
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் நாகராஜ் நாயுடு கூறுகையில், "அறிவியல் மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டின் நோக்கமும் நம்முள் இருக்கும் கேள்விகளுக்கு விடைகளை கண்டறிவது தான். அறிவியல் உலகத்தை புரிந்து கொள்வதை நோக்கமாகவும். ஆன்மீகம் உண்மையை புரிந்து கொள்வதை நோக்கமாகவும் கொண்டுள்ளது. இரண்டிற்குமான பயன்பாடுகளும், நடைமுறைகளும் கொஞ்சம் வேறுபட்டு இருந்தாலும், இரண்டும் ஒரு விதத்தில் ஒரே மாதிரியான வழிமுறையை பின்பற்றுகின்றன. அறிவியல் மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டும் மனித குலத்தை மேம்படுத்தும் பணியை தான் செய்கின்றன." என கூறினார்.
மாநாட்டின் ஒரு பகுதியாக, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பாலசுப்பிரமணியம் 'யோக அறிவியல்' என்ற தலைப்பில் ஒரு அமர்வை நடத்தினர். அதில் ஈஷாவில் கற்றுக்கொடுக்கப்படும், ஈஷா க்ரியா, சூன்யா, சம்யமா போன்ற தியானங்களை செய்வதால் ஏற்படும் பலன்கள் குறித்த அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் பற்றி பேசினார்.
முன்னதாக, மாநாட்டிற்கு வருகை தந்த சர்வதேச பிரதிநிதிகளை ஈஷா யோக மையத்தின் தன்னார்வலர்கள் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் களரி பயட்டு மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சி சர்வதேச பிரதிநிதிகளை வெகுவாக கவர்ந்தது.
- ஷபி தனது கணவருக்கு டி-சர்ட் அணிந்தபடி இரவு உணவு கொண்டு வந்தார்.
- டி-சர்ட் அணிந்ததால் 2 பேருக்கும் இடையே தகராறு உருவானது.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெரியபோதுவை சேர்ந்தவர் சிவஞானசேகர் (வயது 44). அரசு பஸ் டிரைவர். இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு ஷபி (38) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.
சிவஞான சேகர் பொள்ளாச்சி - கிழவன்புதூர் வழித்தடத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் பெரியபோதுவில் பஸ்சை நிறுத்தி விட்டு இரவு பஸ்சிலேயே தூங்குவது வழக்கம். சிவஞான சேகருக்கு அவரது மனைவி இரவு உணவு கொடுத்து விட்டு செல்வார்.
கடந்த 19-ந் தேதி ஷபி தனது கணவருக்கு இரவு உணவு கொண்டு வந்தார். அப்போது அவர் டி-சர்ட் அணிந்து வந்தார். இதனை சிவஞான சேகர் கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய அவர் மனைவியுடன் பேசாமல் இருந்தார். குழந்தைகளுடன் மட்டும் விளையாடி விட்டு அருகே உள்ள வீட்டில் தூங்க சென்றார். அங்கு தனியாக இருந்த சிவஞான சேகர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இது குறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட சிவஞான சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
- யானை அடர் வனப்பகுதியான மேற்குத் தொடர்ச்சி அடிவார பகுதிக்கு விரட்டப்பட்டது.
வடவள்ளி,
கோவை மாவட்டம் மருதமலை அருகே உள்ள வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன.
இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு மருதமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டுயானை கல்வீரம்பாளையம் பகுதியில் உள்ள ஊருக்குள் நுழைந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யானை பயத்தால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும், ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
வனத்துறையினர் விரட்டும் போது ரோட்டின் நடுவே சென்ற யானை அந்த வழியாக சென்ற வாகனங்களை மறித்து நின்றது. இதனால் பொது மக்கள் அச்சமடைந்தனர்
தொடர்ந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு யானையை அடர் வனப்பகுதியான மேற்குத் தொடர்ச்சி அடிவாரத்திற்கு விரட்டினர்.






