என் மலர்
நீங்கள் தேடியது "3 பேர் கும்பல்"
- பட்டா கத்தியை காட்டி யாரிடம் காசுகேட்கிறாய் என கூறி கொலை மிரட்டல் விடுத்தனர்.
- கத்தியை காட்டி மிரட்டிய 3 பேரையும் கைது செய்தனர்
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் காரமடை அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது31).
இவர் காரமடை பஸ் நிலையம் அருகே தள்ளு வண்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது கடைக்கு கடந்த வாரம் பாக்கியராஜ் என்பவர் வந்தார். அவர் உணவு சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக செந்தில்குமார் மற்றும் பாக்கியராஜூக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் செந்தில் குமார் கடையை கவனித்து கொண்டு இருந்தார். அப்போது காரமடையை சேர்ந்த கோகுல் கிருஷ்ணன்(22), காரமடை மரியபுரத்தை சேர்ந்த அலெக்ஸ் என்ற ஞானராஜ் (27), பாக்கியராஜ் (47) ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் செந்தில் குமார் கடைக்கு வந்தனர்.
பின்னர் செந்தில் குமாரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த வாலிபர்கள், செந்தில்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டினர். மேலும் அவரிடம் பட்டா கத்தியை காட்டி யாரிடம் காசுகேட்கிறாய் என கூறி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில்குமார் இது குறித்து காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். காரமடை இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராகிம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கத்தியை காட்டி மிரட்டிய 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 20 வயது வாலிபர் சிங்காநல்லூரில் உள்ள லாட்ஜில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
- லாட்ஜ் ஊழியர் அந்த வாலிபரிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார் .
கோவை,
கோவை வரதராஜ புரத்தை சேர்ந்தவர் 20 வயது வாலிபர். இவர் சிங்காநல்லூரில் உள்ள லாட்ஜில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகினர். இந்தநிலையில், ஓரின சேர்க்கையாளரான லாட்ஜ் ஊழியர் அந்த வாலிபரிடம் நாம் இருவரும் தனிமையில் ஜாலியாக இருக்கலாம் என கூறி அழைத்தார்.
அவர்கள் நீலிகோணாம்பாளையம் ரெயில்வே கேட் அருகே சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி லாட்ஜ் ஊழியர் அங்கு சென்று வாலிபரின் வருகைக்காக காத்திருந்தார்.
சிறிது நேரத்தில் அங்கு அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான அந்த வாலிபர் வந்தார். இருவரும் பேசி கொண்டிருந்தனர்.
அப்போது லாட்ஜ் ஊழியர் அந்த வாலிபரிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார் . இதனால் அந்த வாலிபர் அவரது நண்பர்கள் 2 பேரை அங்கு வரவழைத்தார்.
அங்கு வந்த அவரது நண்பர்கள் லாட்ஜ் ஊழியரின் நடவடிக்கையை கண்டித்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி பீர்பாட்டிலால் லாட்ஜ் ஊழியரை தாக்கி மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பி சென்றனர்.
இதில் காயமடைந்த லாட்ஜ் ஊழியரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாட்ஜ் ஊழியரை தாக்கிய சிங்காநல்லூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஆலன் சாயா(19), நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்த மோகனசுந்தர்(22), மற்றும் வரதராஜபுரத்தை சேர்ந்த கங்காதரன்(21) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.






