

கோவை,
கோவை-பொள்ளாச்சி மெயின் ரோடு தனியார் கல்லூரி அருகே பேக்கரி முன்பு சம்பவத்தன்று இரவு முதியவர் ஒருவர் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுக்கரை போலீசார் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் யார்? எந்த ஊரைஎன்பது குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.