என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாளையார்"

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரை வழங்கி டிரைவர்கள் திருப்பி அனுப்பினர்.
    • ரூ.10 ஆயிரத்து 500 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கோவை,

    தமிழக-கேரள எல்லையான வாளையார் பகுதியில் கேரள மாநில ஆர்.டி.ஓ. சோதனைச்சாவடியும், எட்டிமடை பகுதியில் தமிழக ஆர்.டி.ஓ. சோதனைச்சாவடியும் உள்ளன.

    இதனை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளிடம் உரிய ஆவணங்கள் இருந்தாலும் சுமார் ரூ.300 முதல் ரூ.1000 வரை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு மாநில எல்லையை கடக்க அனும திப்பதாக கூறப்படுகிறது.

    அவ்வப்போது தமிழக மற்றும் கேரள சோதனைச்சாவடிகளில் அந்தந்த மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டு லஞ்சம் வாங்கும் அதிகா ரிகள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்தநிலையில் வாளையார் ஆர்டி.ஓ. சோதனை ச்சாவடியில் கேரள லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொ ண்டனர்.

    அப்போது அங்கிருந்த ரூ.10 ஆயிரத்து 500 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து அங்கிருந்த ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அங்கு வந்த சில லாரி டிரைவர்கள் சோதனைச்சாவடி ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றனர். இதனை பார்த்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். எதற்காக பணம் கொடுக்கிறீர்கள் என கேட்டபோது சோத னைச்சாவடி ஊழியர்கள் வழக்கமாக கேட்பார்கள் என தெரிவித்தனர்.

    அதற்கு ஆவணங்கள் சரியாக இருந்தால் யாரும் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, லஞ்சம் கொடுப்பது தவறு என டிரைவர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரை வழங்கி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    இந்த வீடியோ காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது.

    ×