என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றபோது சம்பவம்
    • செயின், கம்மல், வளையல் உள்பட ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை அள்ளி சென்றனர்

    கோவை,

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையம் இந்திரா கார்டனை சேர்ந்தவர் மாரியப்பன். விற்பனை பிரதிநிதி. இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று மாரியப்பன் வேலை விஷயமாக வெளியூர் சென்று இருந்தார்.

    அவரது மனைவி மாரியம்மாள் தனது 2 மகள்களுடன் திருப்பூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார்.

    அப்போது மாரியப்பன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், வளையல் உள்பட ரூ.40 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    வீட்டின் கதவு திறந்து இருப்பதை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் இதுகுறித்து மாரியம்மாளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் தனது வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    பின்னர் அதிர்ச்சியடைந்த அவர் அவரது கணவருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து மாரியப்பன் கோவைக்கு விரைந்து வந்தார். பின்னர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விற்பனை பிரதிநிதி வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • கோவையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகம், டிஜிட்டல் சேவை உள்ளிட்ட துறைகள் வாரியாக ஆய்வு
    • சாலை விபத்தில் இறந்த 10 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்பட்டது

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் தணிக்கை துறை சார்ந்த ஆய்வுக்குழு கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்தது. மாநகராட்சி மேயர் கல்பனா, கமிஷனர் பிரதாப் முன்னிலை வகித்தனர்.

    சட்டசபை பொதுநிறுவனங்கள் குழுத்தலைவர் சவுந்திரபாண்டியன் மற்றும் உறுப்பினர்கள் அப்துல்ச மது, உடுமலை ராதாகிருஷ் ணன், கிரி, கோவிந்தசாமி, செந்தில்குமார், பிரகாஷ் மற்றும் சட்டசபை இணை செயலாளர் பாண்டியன் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது தணிக்கைக்குழு அறிக்கை தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.

    தொடர்ந்து சட்டசபை பொதுநிறுவனங்கள் குழுத்தலைவர் சவுந்திர பாண்டியன் நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதா வது:-

    தமிழக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரிகள் வழங்கிய அறிக்கை விவ ரங்கள் தொடர்பாக மாவட்ட அளவில் ஆய்வு நடத்தி வருகிறோம். இதன் ஒருபகுதியாக கோவையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவை உள்ளிட்ட துறைகள் வாரியாக ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது.

    அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏதேனும் குறைகள் இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம். இதனை நாங்கள் தமிழக முதல் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து 6 பேருக்கு நத்தம் நிலங்களில் ஆதிதிராவிடர் திட்டத்தின்கீழ் வீட்டுமனை இணையவழி பட்டா, சாலை விபத்தில் இறந்த 10 பேர் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியின்கீழ் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, தாட்கோ சார்பில் 5 பேருக்கு ரூ.19.10 லட்சம் மதிப்பில் லோடு ஆட்டோ மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கான கடனுதவிகளை வழங்கினார்.

    • வாடகைக்கு வீடு எடுத்து அழகிகளை அழைத்து வந்து விபசாரம்
    • வேறு எங்காவது வாடகை வீடு எடுத்து விபசார கும்பல் தங்கி உள்ளதா என்று போலீசார் விசாரணை

    கோவை,

    கோவை ஒண்டிப்புதூர் கோபால் நகரில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சிங்காநல்லூர் போலீசார் தகவல் வந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். சோதனையில் அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதனையடுத்து போலீசார் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்து வந்த புரோக்கர்கள் ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனியை சேர்ந்த தம்புராஜ் (வயது 31), உப்பிலிபாளையம் வரதராஜபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த பிரசாந் (31), கோபால் நகரை சேர்ந்த பெண் புரோக்கர் வரலட்சுமி (40) என்பது தெரிய வந்தது. 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    மேலும் போலீசார் அங்கு அறைகளில் விபசா ரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருந்த 22, 35, 37, 39 வயதுடைய 4 அழகிகளை போலீசார் மீட்டனர். பின்னர் போலீசார் மீட்கப்பட்ட 4 அழகி களையும் ஒண்டிப்புதூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    கைது செய்யப்பட்ட பெண் புரோக்கர் உள்ள 3 பேரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர். இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் குடும்பத்தினர் வசிப்பதற்காக என கூறி வாடகை வீடு எடுத்துள்ளனர். பின்னர் அழகிகளை அழைத்து வந்து அங்கு விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதேபோல் வேறு எங்காவது வாடகை வீடு எடுத்து விபசார கும்பல் தங்கி உள்ளார்களா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • மகனை பார்க்க முடியாததால் தூக்கு போட்டு சாவு
    • திருமணமான 5 வருடத்தில் பிரீத்தி தற்கொலை செய்ததால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது

    கோவை,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி பிரீத்தி (வயது 24). அழகு கலை நிபுணர். இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். 4 வயதில் ஒருமகன் உள்ளார்.

    விக்னேஷ் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். கடந்த வருடத்துக்கு முன்பு கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஊர் பெரியவர்கள் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் அவர்கள் தனித்தனியாக வசித்து வந்தனர்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிரீத்தி பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சந்தைமேடு பகுதியில் குடியேறினார். இந்தநிலையில் இவரது கணவர் மீண்டும் சிங்கப்பூருக்கு சென்றார். இவர்களது மகன் விக்னேஷின் தாய், தந்தையுடன் வசித்து வந்தார்.

    மகனை பார்க்க முடியாததால் பிரீத்தி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட பிரீத்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 5 வருடத்தில் பிரீத்தி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

    • குடித்து விட்டு வந்து மகளை தாக்கியதால் ஆத்திரம்
    • தாக்கியவரே மருமகனை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வெள்ளாம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகவேல் (வயது 50). அ.தி.மு.க. பிரமுகரான இவர் வெள்ளாம்பாளையம் பஞ்சாயத்தில் முன்னாள் தலைவராக இருந்தார்.

    இவரது மகள் மெய் மொழி (24). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழனிகவுண்டன் புதூரை சேர்ந்த விவசாயி பிரகாஷ்குமார் (24) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 1 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    சம்பவத்தன்று வெளியே சென்ற பிரகாஷ்குமார் மது போதையில் வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மெய்மொழியை தாக்கினார்.

    இது குறித்து அவர் தனது தந்தை முருகவேலுக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக அவரது மனைவி கலைவாணி என்பவருடன் மகளின் வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் முருகவேல் அவரது மகளை தாக்கியது குறித்து மருமகன் பிரகாஷ்குமாரிடம் கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரகாஷ்குமார் மாமனார், மாமியார் ஆகியோரை தாக்கினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த முருகவேல் அங்கு இருந்த உருட்டு கட்டையால் பிரகாஷ்குமாரின் தலை மற்றும் கையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். பின்னர் அவர்களே பிரகாஷ்குமாரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து கோமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் மருமகனை தாக்கிய அ.தி.மு.க. முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆத்திரம் அடைந்த நல்லையன் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • கோபத்தின் உச்சிக்கு சென்ற நல்லையன் மனைவியின் தலையில் அருகில் கிடந்த பாறாங்கல்லை எடுத்து போட்டார்.

    மேலூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள கண்ணங்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நல்லையன் (வயது 48). இவருக்கும் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கருங்காலக்குடி பகுதியைச் சேர்ந்த கலா (45) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

    பழங்குடியினத்தை சேர்ந்த இவர்கள் பொட்டி, கூடை முடையும் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். இதற்காக அவர்கள் கருங்காலக்குடியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஒரு காலியிடத்தில் குடிசை அமைத்து தங்கியிருந்தனர். நல்லையனுக்கு குடிப்பழக்கமும் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் பணியை முடித்து விட்டு தம்பதியினர் தூங்க சென்றனர். நள்ளிரவில் திடீரென்று எழுந்த நல்லையன் மனைவியை உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால் கலா மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நல்லையன் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற நல்லையன் மனைவியின் தலையில் அருகில் கிடந்த பாறாங்கல்லை எடுத்து போட்டார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த கலா சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கு தெரிவித்தனர்.

    அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திர சேகர், கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி மற்றும் போலீசார் விரைந்து வந்த கொலையுண்ட கலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் நல்லையனை கைது செய்து, ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொலை செய்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கருங்காலக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரே நாடு என்றால் ஏன் காவிரியிலும், முல்லை பெரியாரிலும் தண்ணீர் தர மறுக்கிறார்கள்.
    • இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்தால் காங்கிரஸ் அல்லாத தொகுதிகளில் தி.மு.க.வுக்கு ஆதரவளிக்கிறேன்.

    கோவை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களாக கொங்கு மண்டலத்தில் முகாமிட்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    கோவை மாவட்டத்தில் மட்டும் 3 நாட்கள் முகாமிட்டு கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். கோவையில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசினார். தொடர்ந்து நேற்று இரவு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர் கோவை விமான நிலையத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

    தமிழகத்தில் பல குற்றச் செயல்களுக்கு மூலகாரணமாக இருப்பது மதுப்பழக்கம். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அவசியமற்றது. ஒரே நாடு என்றால் ஏன் காவிரியிலும், முல்லை பெரியாரிலும் தண்ணீர் தர மறுக்கிறார்கள்.

    அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. தி.மு.க. அரசியல் கட்சி கிடையாது. அது ஒரு குடும்ப சொத்து. கள்ளுக்கு தமிழகத்தில் அனுமதி அளித்தால் சாராய ஆலைகள் முடங்கிவிடும் என்பதால் கள்ளுக்கு அனுமதி அளிக்க மறுக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்தால் காங்கிரஸ் அல்லாத தொகுதிகளில் தி.மு.க.வுக்கு ஆதரவளிக்கிறேன்.

    2024-ம் தேர்தலில் வென்று மீண்டும் மோடி வந்தால் இந்தியாவே இருக்காது. காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் நாட்டை விற்பதில் போட்டி. இதில் மோடி நன்றாக வியாபாரம் செய்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற சீமான், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரையும் அறிவித்தார். இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் சுரேஷ் போட்டியிடுவார் என அவர் தெரிவித்தார்.

    • உதயநிதி ஸ்டாலினை இளம் பெரியார் என்று சொல்லலாம்.
    • இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை.

    நெல்லை:

    கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 152-வது பிறந்த தினத்தை முன்னிட்டு நெல்லை டவுன் மாநகராட்சி அலுவலகம் எதிரே மணிமண்டபத்தில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

    பின்னர் நிருபர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

    பா.ஜனதாவினர் பேச மட்டுமே செய்வார்கள். அந்த கட்சியில் உள்ளவர்கள், சுதந்திர போராட்டத்தில் ஒரு ஜீவன் கூட பங்கேற்கவில்லை. ஆங்கிலேயர்கள் ஆண்டால் அதுவே மேல் என்று சொன்னவர்கள் பா.ஜனதாவினர்.

    சுதந்திர போராட்ட வீரர்களை பா.ஜனதாவில் உள்ளவர்கள் காட்டி கொடுத்தவர்கள். அனைத்து அரசியல் கட்சிகளும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றனர். காங்கிரஸ், பொதுவுடமை கட்சிகள், திராவிட இயக்கங்கள் மட்டுமே சுதந்திர போரட்டத்தில் பங்கெடுத்தன.

    பா.ஜனதாவின் வரலாறு ஒரு துரோக வரலாறு. உத்தரபிரதேச சாமியார் கூறிய கருத்து சனாதனத்தின் கொடூரத்தை காட்டுகிறது. ஒரு கருத்தை சொன்னால் தலையை எடுத்து விடுவேன் என்று சொல்லும் அவர்களை விட மிகப்பெரிய வன்முறை வாதிகள் கிடையாது. கருத்து சொன்னாலே தலை போய்விடும் என்றால் தேசத்தின் ஜனநாயகம் எங்கு உள்ளது.

    அந்த தேசத்தை ஆளும் கட்சி எவ்வளவு பெரிய சர்வாதிகார கட்சி. பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.ஐ நாங்கள் ஹிட்லர், முசோலினி என சொல்வது பொருத்தமானது என்பதற்கு இந்த கருத்து உலகத்திற்கே உதாரணமானது.காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் வேணு கோபால் சனாதனம் குறித்த கருத்துக்கு தெளிவான பதிலை கொடுத்துள்ளார்.

    அனைவருக்கும் பேசுவதற்கு உரிமை உண்டு. எல்லோரும் தங்களது கருத்துக்களை சொல்லலாம். எல்லை தாண்டி மட்டுமே போகக்கூடாது. சனாதனம் கூடாது என புதிதாக யாரும் சொல்லவில்லை. ஆயிரம் ஆண்டுகளாக இந்த கருத்துக்கள் நிலவுகிறது. கடவுள் மீதும், மதத்தின் மீதும் நம்பிக்கை உள்ள ராமானுஜர், தலித்துகளையும், விளிம்பு நிலை மக்களையும் அழைத்து வந்து பூணூல் அணிவித்து அந்தணர் ஆக்கினார்.

    உதயநிதி ஸ்டாலின் சொன்னதில் எந்த தவறும் இல்லை. அவர் புதிதாக எந்த தகவலையும் சொல்லவில்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பெரியார் சொன்னதை தற்போது அமைச்சர் உதயநிதி சொல்லி உள்ளார். உதயநிதி ஸ்டாலினை இளம் பெரியார் என்று சொல்லலாம். அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை. அவரது கருத்தை மட்டும் தான் அவர் சொல்லியிருக்கிறார். அதற்கு அவருக்கு உரிமை உண்டு.

    அறிவிலிகள் மத்தியில் வாழ்வது மிகப் பெரிய சிரமம். சனாதனம் கூடாது என்றால் இந்து மதத்திற்கு விரோதம் என்று ஏன் நினைக்கிறார்கள். சனாதனம் என்பது பழமை வாதத்தை, தீண்டாமையை, பெண் அடிமையை நிலை நிறுத்துவது. பிறப்பின் லட்சியத்தை ஈடேற்றுங்கள் என சனாதனத்தின் மூலம் நாகரீகமாக சொல்கிறார்கள்.

    இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. உதயநிதி ஸ்டாலினின் கருத்தை கேட்டு இந்து அறநிலையத்துறையை மூட நம்பிக்கை இல்லாத துறையாக அமைச்சர் சேகர்பாபு மாற்ற வேண்டும். சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டது தப்பு கிடையாது. அவரை நீக்க வேண்டியதும் கிடையாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அப்போது நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், நிர்வாகிகள் காமராஜ், தனசிங் பாண்டியன், சொக்கலிங்க குமார், ராஜேஷ்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • இளம்பெண்ணை வாலிபர்கள் அழைத்துச் செல்லும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளதா என்பதையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இளம்பெண்ணை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

    கடந்த மாதம் 27-ந்தேதி திடீரென இளம்பெண் மாயமானார். அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் இளம்பெண்ணை அடையாளம் தெரியாத 3 வாலிபர்கள் நைசாக பேசி ஈச்சனாரியில் உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து 3 வாலிபர்களும் இளம்பெண்ணை பலாத்காரம் செய்தனர். பின்னர் அவர்கள் இளம்பெண்ணை அங்கேயே தவிக்க விட்டு தப்பிச் சென்றனர்.

    இளம்பெண் படுகாயத்துடன், அரைகுறை ஆடையுடன் அந்த பகுதியில் சுற்றித்திரிந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இளம்பெண்ணை மீட்டு கிணத்துக்கடவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இளம்பெண்ணுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணை 3 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. அந்த வாலிபர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இளம்பெண்ணை வாலிபர்கள் அழைத்துச் செல்லும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளதா என்பதையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தனபால் தற்போது ஜாமீனில் உள்ளதால் சம்மன் அனுப்பி அவரிடம் விசாரித்துக் கொள்ள கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ந் தேதி கொள்ளை சம்பவம் நடந்தது. எஸ்டேட்டில் இருந்த சில ஆவணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு கொள்ளை கும்பல் தப்பியது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் படுகொலை செய்யப்பட்டார்.

    தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வருகிறது. தற்போது வழக்கை தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியது. கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீசார் மறுவிசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் இதுவரை 300-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரித்து உள்ளனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியானார். வழக்கு தொடர்பான சில விவரங்கள் தெரிந்திருந்தும், அதனை மறைத்ததாக கூறி கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அவர்கள் 2 பேரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

    இந்நிலையில் தனபால், பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். தனது தம்பி கனகராஜ் விபத்தில் உயிரிழக்கவில்லை, அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்பது போன்ற பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து வருகிறார். இதனால் தனபாலிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    இதற்காக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தனபாலிடம் விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தனபால் தற்போது ஜாமீனில் உள்ளதால் சம்மன் அனுப்பி அவரிடம் விசாரித்துக் கொள்ள கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

    இதையடுத்து தனபாலுக்கு சம்மன் அனுப்ப சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது. அவர் வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்களை தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து அரசு தரப்பு வழக்கில் ஆனந்த் கூறுகையில் கனராஜின் அண்ணன் தனபாலிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. தரப்பில் ஊட்டி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது இதற்கு தனியாக உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. சம்மன் அளித்து விசாரித்துக் கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்றார்.

    • பீளமேடு தொழில்நுட்ப பூங்கா, அரசு போக்குவரத்து கழக பணிமனையை பார்வையிட்டனர்
    • வாலாங்குளம் படகு இல்லம், உக்கடம் குறிச்சி குளம், புட்டுவிக்கி டிஜிட்டல் துணை மின்நிலையத்தில் விசாரணை

    கோவை,

    தமிழக சட்டமன்ற பேரவை பொது நிறுவ னங்கள் குழுவின் தலைவர் சவுந்தரபாண்டியன் தலைமை யில் கோவை யில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

    முதலாவதாக பீளமேட்டில் உள்ள தொழில்நுட்ப பூங்காவை பார்வையிட்டனர். பின்னர் சுங்கத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையை பார்வையிட்டனர்.

    பணிமனையில் நடை பெறும் பணிகளை ஊழி யர்களிடம் கேட்டறிந்தனர். அவர்களின் குறைகளையும் கேட்டனர்.

    தொடர்ந்து வாலாங்கு ளம் படகு இல்லம், உக்கடம் குறிச்சி குளம் சீரமைப்பு பணி, புட்டுவிக்கியில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட துணை மின் நிலையம், பச்சாபாளையம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது குழு உறுப்பினர்கள் அப்துல் சமது, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.பெ.கிரி, கோவிந்தசாமி, பிரகாஷ், மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் உடன் சென்றனர். 

    • ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க எதிர்ப்பு
    • முறைகேடாக வழங்கிய பட்டாவை ரத்து செய்யவும் கோரிக்கை

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் ஆகியோர் மனுக்களை அளித்தனர். இதில், இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் சங்கிலியால் கையை கட்டி மனு அளித்தனர்.

    மனுவில், அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள 37 பேரை விடுதலை செய்ய கூடாது என வலியுறுத்தி மனு அளித்தனர்.

    தி.மு.க. காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி அருகே உள்ள சமயபுரத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முறைகேடாக 132 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கினர். எனவே, முறைகேடாக தகுதி இல்லாத நபர்களுக்கு வழங்கிய பட்டாவை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

    பொள்ளாச்சி 8-வது வார்டு கோட்டாம் பட்டி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 30 குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். மனுவில், நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக இந்த பகுதியில் குடியிருந்து வருகிறோம். எங்கள் குழந்தைகள் இப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரியில் படித்து வருகின்றனர். எனவே, நாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு எங்களுக்கு பட்டா பெற்று தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    ×