என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் பெண் புரோக்கர் உள்பட 3 பேர் கைது- 4 அழகிகள் மீட்பு
- வாடகைக்கு வீடு எடுத்து அழகிகளை அழைத்து வந்து விபசாரம்
- வேறு எங்காவது வாடகை வீடு எடுத்து விபசார கும்பல் தங்கி உள்ளதா என்று போலீசார் விசாரணை
கோவை,
கோவை ஒண்டிப்புதூர் கோபால் நகரில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சிங்காநல்லூர் போலீசார் தகவல் வந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். சோதனையில் அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து போலீசார் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்து வந்த புரோக்கர்கள் ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனியை சேர்ந்த தம்புராஜ் (வயது 31), உப்பிலிபாளையம் வரதராஜபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த பிரசாந் (31), கோபால் நகரை சேர்ந்த பெண் புரோக்கர் வரலட்சுமி (40) என்பது தெரிய வந்தது. 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் போலீசார் அங்கு அறைகளில் விபசா ரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருந்த 22, 35, 37, 39 வயதுடைய 4 அழகிகளை போலீசார் மீட்டனர். பின்னர் போலீசார் மீட்கப்பட்ட 4 அழகி களையும் ஒண்டிப்புதூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட பெண் புரோக்கர் உள்ள 3 பேரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர். இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் குடும்பத்தினர் வசிப்பதற்காக என கூறி வாடகை வீடு எடுத்துள்ளனர். பின்னர் அழகிகளை அழைத்து வந்து அங்கு விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதேபோல் வேறு எங்காவது வாடகை வீடு எடுத்து விபசார கும்பல் தங்கி உள்ளார்களா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.






