என் மலர்
கோயம்புத்தூர்
- காய்கறி விலையில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்
- வெண்டை 0.19 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 1.84 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
கோவை,
தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைகழகத்தில் தக்காளி, கத்தரி, வெண்டைக்காய் ஆகியவற்றுக்கான விலை முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:-
விவசாயிகள் தங்கள் நடவு முடிவுகளை மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டமானது தக்காளி, கத்தரி, வெண்டை ஆகிய காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பை வெளியிடுகிறது.
வேளாண் நல அமைச்சகத்தின் முதலாவது முன்கூட்டிய மதிப்பீட்டின் படி (2022-23) தமிழகத்தில் தக்காளி சுமார் 0.34 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிரி டப்பட்டு 11.99 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள் ளன. கத்தரி சுமார் 0.24 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 3.09 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அதேபோல, வெண்டை 0.19 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 1.84 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
விலை முன்னறிவிப்புத் திட்டக்குழு, ஒட்டன்சத்திரம், கோவை சந்தையில் கடந்த 12 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்தரி, வெண்டை விலையில் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.
அதன்படி, அறுவ டையின்போது தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோ ரூ.15 முதல் ரூ.17 வரை, கத்தரியின் விலை ரூ.22 முதல் ரூ.24 வரை, வெண்டையின் விலை ரூ.18 முதல் ரூ.20 வரை இருக்கும் என்று அறியப்படுகிறது.
பருவமழை மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரத்து வருமாயின், காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது என்பதால் விவசாயிகள் அதற்கு ஏற்ப விதைப்பு முடிவு எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள் ளது.
- 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பட்டணம்-நாயக்கம்பாளையம் சாலையில் திரண்டனர்
- சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
சூலூர்,
கோவை சூலூர் அடுத்த பட்டணம் ஊராட்சியில் மசநாயக்கன் கோவில் பகுதி உள்ளது.
இந்த பகுதிக்கு சாலை ஒன்று செல்கிறது. இந்த சாலை பல ஆண்டுகளாகவே குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் இந்த சாலையில் வாகனங்கள்செல்வதே சிரமமாக இருந்து வந்தது. இந்த சாலையை சீர் செய்ய கோரி பொதுமக்கள் பல முறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது கோவை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு, இந்த சாலையானது சுத்தமாக சேதமாகி விட்டது. இதனால் சாலை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இந்த நிலையில் சாலையை சீரமைத்து தரக்கோரி அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பட்டணம்-நாயக்கம்பாளையம் சாலையில் திரண்டனர்.
பின்னர் சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சூலூர் போலீசார் , பட்டணம் ஊராட்சி தலைவர் கோமதி செல்வராஜ் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் தங்களது கோரிக்கை நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. உடனடியாக சாலையை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
விரைவில் சாலை செப்பனிடப்படும் என பட்டணம் ஊராட்சி தலைவர் கூறியதை அடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- டெய்லர் கடையில் இருந்தபோது அத்துமீறி நுழைந்து தாக்குதல்
- வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
வடவள்ளி,
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவர் இடையார்பாளையம் ரோட்டில் டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இளம்பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளம்பெண் கடந்த சில வருடங்களாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
வாலிபர் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கும் வாலி பருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் இளம்பெண் வாலிபருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். இது வாலிபருக்கு இளம்பெண் மீது ஆத்திரம் ஏற்பட்டது. சம்பவத்தன்று இளம் பெண் கடையில் இருந்தார். அப்போது அங்கு வாலிபர் சென்றார். அவர் இளம்பெண்ணிடம் தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்தார். ஆனால் இளம்பெண் மறுத்து விட்டார். அப்போது அவர்க ளுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் அங்கு இருந்த கத்தரிகோலை எடுத்து இளம்பெண்ணின் தோள் பட்டை, தொடை உள்ளிட்ட பகுதிகளில் குத்தினார்.
இதில் வலி தாங்க முடியாமல் இளம்பெண் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்கு வாலிபர் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், பர்லியாறு, கரன்சி, ஆர்டர்லி, ஹில்குரோவ் பகுதிகளில் நேற்று தொடர்ந்து கனமழை பெய்து வந்தது.
- நடுக்காட்டில் நின்ற பயணிகள் மீண்டும் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
மேட்டுப்பாளையம்:
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பகல் மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், பர்லியாறு, கரன்சி, ஆர்டர்லி, ஹில்குரோவ் பகுதிகளில் நேற்று தொடர்ந்து கனமழை பெய்து வந்தது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இன்று காலை 7.10 மணிக்கு மலை ரெயில் புறப்பட்டது. இந்த மலைரெயிலில் 186 பயணிகள் பயணித்தனர்.
அப்போது ரெயில் ஆர்டர்லி அருகே சென்றபோது தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டு பாறை மற்றும் மண் கிடந்தது.
இதை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். தொடர்ந்து லாவகமாக பின்னோக்கி இயக்கி வந்தார்.
மேலும் இது தொடர்பாக உடனடியாக ரெயில்வே நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ரெயில்வே பணிமனை ஊழியர்கள் விரைந்து வந்தனர்.
அவர்கள் தண்டவாளத்தில் சரிந்து வந்து விழுந்த பாறை, மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் நடுக்காட்டில் நின்ற பயணிகள் மீண்டும் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதன்பின் பஸ் மூலம் ஊட்டிக்கு பயணிகளை அனுப்பி வைத்தனர்.
மேலும் தண்டவாளத்தில் மண், பாறை சரிந்து விழுந்ததால் மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே மலை ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
- எந்த வெளிநாட்டிற்கு சென்றாலும் பதிவு செய்து விட்டு செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தி வருகின்றோம்.
- எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்பதை கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.
கோவை:
இஸ்ரேல் நாட்டில் இருந்து 8 பேர் இன்று கோவை வந்தனர்.
அவர்களை விமான நிலையத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இஸ்ரேல்-பாலஸ்தீன போர் நடைபெறும் நிலையில் தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது. அவசர தேவைக்கான எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 132 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். கோவையை சேர்ந்தவர்கள் 25 பேரும், மற்றவர்கள் சென்னை விமான நிலையம் மூலமும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
தொடர்பு கொள்பவர்களை இல்லம் வரை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம்.
ஒரு சிலர் பாதுகாப்பான நிலையில் இருக்கின்றோம். தேவைபட்டால் தொடர்பு கொள்கின்றோம் என்று தெரிவித்து இருக்கின்றனர். விருப்பத்தின் அடிப்படையிலேயே அழைத்து வருகின்றோம்.
எந்த வெளிநாட்டிற்கு சென்றாலும் பதிவு செய்து விட்டு செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தி வருகின்றோம்.
எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்பதை கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், திமுக மாவட்ட செயலாளர் கார்த்திக் ஆகியோரும் வரவேற்றனர்.
- கருத்துவேறுபாடு அதிகரிக்கவே இளம்பெண் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
- இளம்பெண்ணை, வெளியில் அழைத்து செல்வதாக கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
கோவை:
கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண்.
இவருக்கும், அவரது ஊரின் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இளம்பெண்ணை காணவில்லை. அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கம் வீடுகள், உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இளம்பெண் நேற்று மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அவரது உறவினர்கள் பார்த்து இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரிடம் இவ்வளவு நாள் எங்கு சென்றாய் என விசாரித்தனர். அப்போது இளம்பெண் தன்னை பல நபர்கள் பலாத்காரம் செய்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
இதை கேட்டதும் அதிர்ச்சியான அவரது உறவினர்கள் சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
இளம்பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே திருமணம் ஆன சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டையும் நடந்துள்ளது.
கருத்துவேறுபாடு அதிகரிக்கவே இளம்பெண் தனது கணவரை பிரிந்து அந்த பகுதியில் தனியாக வசித்து வந்தார். அப்போது அவருக்கு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சிவனேஷ் பாபு என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.
அவர் இளம்பெண்ணிடம் நீ இங்கு தனியாக இருக்க வேண்டாம். என்னுடன் வேண்டுமானால் வந்து விடு என தெரிவித்துள்ளார். இதனை இளம்பெண்ணும் நம்பி அவருடன் சென்றார்.
இதையடுத்து சிவனேஷ்பாபு இளம்பெண்ணுக்கு மேட்டுப்பாளையம் ராமசாமி நகரில் ஒரு வீடு பார்த்து குடியமர்த்தினார். பின்னர் வெளியில் செல்வதாக கூறி விட்டு, சென்ற போது அந்த வீட்டின் கதவையும் பூட்டி சென்று விட்டார். இதனால் இளம்பெண்ணுக்கு பயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து சிவனேஷ்பாபு, வீட்டிற்கு வந்தார். அப்போது அவருடன் மற்றொரு வாலிபரும் வந்திருந்தார்.
அவர் யார் என்று கேட்டபோது, தனது நண்பர் என்றும், அவரது பெயர் ராகுல் என்றும் மெக்கானிக்காக இருப்பதாகவும் தெரிவித்தார்.
சிறிது நேரம் பெண்ணிடம் பேசி கொண்டிருந்த நபர்கள், திடீரென அவரிடம் தவறாக நடக்க முயன்றனர்.
அதிர்ச்சியான இளம்பெண் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் 2 பேரும் இளம்பெண்ணை தாக்கி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர். தொடர்ந்து இதுபோன்று வீட்டிற்குள் அடைத்து வைத்து பல முறை பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும் இளம்பெண்ணை, வெளியில் அழைத்து செல்வதாக கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது இளம்பெண்ணிடம் தாங்கள் கூறும் நபர்களுடன் நீ உல்லாசம் அனுபவிக்க வேண்டும்.
இல்லையொன்றால் கொன்று விடுவதாக மிரட்டிஉள்ளனர். அவர் மறுக்கவே அடித்து உதைத்துள்ளனர். தொடர்ந்து மிரட்டி பல்வேறு நபர்களுக்கும் இளம்பெண்ணை விருந்தாக்கி உள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இளம்பெண்ணை வீட்டிற்குள் அடைத்து வைத்தும், வெளியில் அழைத்து சென்றும், பல நபர்களுடன் இளம்பெண்ணை உல்லாசம் அனுபவிக்க வைத்துள்ளனர்.
தொடர்ந்து அவர்களது தொல்லைகள் அதிகரிக்கவே இளம்பெண் அவர்களிடம் இருந்து தப்பி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சிவனேஷ் பாபு, மெக்கானிக் ராகுல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர். மேட்டுப்பாளையத்தில் பதுங்கி இருந்த மெக்கானிக் ராகுலை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையே போலீசார் தேடுவதை அறிந்ததும், சிவனேஷ் பாபு தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
மேலும் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் வேறு சிலருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 15-வது ஈஷா கிராமோத்சவம் திருவிழாவில் 25,000 கிராமங்களில் இருந்து 60,000 வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.
- கிராமங்களில் ஜாதி, மதம், வயது என பல வேறுபாடுகளை கடந்து ஒரே அணியாக ஒற்றுமையாக விளையாட இத்திருவிழா காரணமாக அமைந்தது.
கோவை:
தென்னிந்திய அளவில் நடத்தப்பட்ட 15-வது ஈஷா கிராமோத்சவம் திருவிழாவில் 25,000 கிராமங்களில் இருந்து 60,000 வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.
குறிப்பாக, கிராமங்களில் ஜாதி, மதம், வயது என பல வேறுபாடுகளை கடந்து ஒரே அணியாக ஒற்றுமையாக விளையாட இத்திருவிழா காரணமாக அமைந்தது.
இது குறித்து சத்குரு அளித்த பேட்டியை இந்த வீடியோவில் பார்க்கலாம்....
https://drive.google.com/file/d/1r4Zu7lnl9l7ZRV3uCxXtHye5xbgOMTff/view?pli=1
- பெண்மணியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்தனர்.
- சூலூர் போலீசார் ஆடு மேய்த்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக செல்லத்துரையை கைதுசெய்தனர்.
சூலூர்:
சூலூரை சேர்ந்த 37 வயது பெண்மணி சம்பவத்தன்று வழக்கம்போல ஆடுகளை மேய்க்க சென்றார். அப்போது அங்கு ஒரு வாலிபர் குடிபோதையில் வந்தார்.
ஆள்அரவம் இல்லாத பகுதியில் பெண்மணி ஆடு மேய்ப்பதை பார்த்ததும் அவருக்கு சபலம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் நைசாக பெண்ணின் அருகில் சென்றார்.
பின்னர் அவரை கீழே தள்ளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது அந்த பெண் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார்.
எனவே ஆத்திரம் அடைந்த வாலிபர் கல் வீசி தாக்கினார். இதில் பெண்மணிக்கு படுகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதற்கிடையே பெண்மணியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்தனர்.
இதையடுத்து அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் பொதுமக்கள் விரட்டி சென்று சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அப்போது வாலிபர் திமிராக பேசியதாக தெரிகிறது. எனவே ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சரமாரியாக தர்மஅடி கொடுத்தனர்.
தொடர்ந்து அந்த வாலிபர் சூலூர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார். எனவே அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த வாலிபர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராமலிங்கம் மகன் செல்லதுரை (வயது27) என்பது தெரியவந்தது.
இவர் கோவையில் தங்கி கூலிவேலை பார்த்து வந்து உள்ளார். இந்த நிலையில் அவர் சூலூர் தென்னந்தோப்பில் கள் குடிப்பதற்காக வந்திருந்தார். அங்கு ஆள்அரவம் இல்லாத பகுதியில் ஆடு மேய்த்த பெண்ணை பார்த்ததும் அவருக்கு சபலம் ஏற்பட்டது.
தொடர்ந்து அந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே சூலூர் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென அப்பநாயக்கன்பட்டி- சூலூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆடு மேய்த்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் வாக்குறுதி அளித்தனர். தொடர்ந்து அங்கு பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தொடர்ந்து சூலூர் போலீசார் ஆடு மேய்த்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக செல்லத்துரையை கைதுசெய்தனர். பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு சூலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் புதிய சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
- சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குனியமுத்தூர்,
கோவை மாநகரில் நேற்று மாலை வானத்தில் கருமேகங்கள் திரண்டன. தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல வழிந்தோடியது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே ஒரு சரக்கு லாரி நேற்று இரவு கோவைக்கு வந்தது. அப்போது உக்கடம்-குனியமுத்தூர் ரோட்டில் புட்டுவிக்கி பாலம் அருகே சென்றபோது லாரியின் முன்பக்க சக்கரங்கள் திடீரென புதைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர், அந்த லாரியில் இருந்து குதித்து உயிர்தப்பினார்.
இதற்கிடையே சரக்கு லாரியின் பின்பக்க சக்கரங்க ளும் திடீரென பூமிக்குள் புதைய தொடங்கியது. இதனால் அந்த வழியாக வேறு வாகனங்கள் செல்ல முடியவில்லை. எனவே அங்கு சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடனடியாக சம்பவஇடத்துக்கு வந்தனர். அங்கு இருந்த பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆனாலும் சரக்கு லாரியை நிலைக்கு கொண்டு வர இயலவில்லை.
தொடர்ந்து புட்டுவிக்கி சாலைக்கு ராட்சத கிரேன் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் நடுரோட்டில் புதைந்து கிடந்த சரக்கு லாரியை பத்திரமாக மீட்டு, அங்கு போக்குவரத்தை சீர்படுத்தினர்.
அங்கு கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் புதிய சாலை அமைக்கப்பட்டு உள்ளது. லாரி செல்லும் அளவுற்கு கூட தரமின்றி சாலை அமைக்கப்பட்டு உள்ளதாக வாகனஓட்டிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கோவை மாநகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் ரோடுகள் குண்டும்-குழியு மாக காட்சி அளிக்கின்றன. இதனால் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் ரோட்டிலுள்ள குழிகளில் சிக்கி தவிக்கும் நிலை வாடிக்கையாக உள்ளது.
மேலும் கோவை மாநகர போக்குவரத்து சாலைகளில் பெரும்பாலானவை தர மற்றதாக உள்ளது.
எனவே தான் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- 52-வது வார்டு பீளமேடு ஹட்கோ காலனியில் சாலையோரம் நின்றிருந்த மரம் முறிந்து விழுந்தது.
- மரம் விழுந்ததால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பீளமேடு,
கோவை மாநகரில் நேற்றிரவு திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழைக்கு கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், 52-வது வார்டு பீளமேடு ஹட்கோ காலனியில் சாலையோரம் நின்றிருந்த மரம் முறிந்து விழுந்தது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, அந்த மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, ஊழியர்கள் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மரம் விழுந்ததால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சார ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் கம்பங்களை சரி செய்து மின்சாரம் வழங்கினார்கள்.
மக்கள் புகார் தெரிவித்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்து மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுத்த கிழக்கு மண்டல தலைவரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
- இளம்பெண்ணின் குழந்தைக்கு சாக்லேட் கொடுப்பது போல அருகே சென்றார்.
- இளம்பெண் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
குனியமுத்தூர்,
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் 25 வயது இளம் பெண். இவருக்கு திரும ணமாகி கணவர் மற்றும் ஒரு குழந்தை உள்ளது.
சம்பவத்தன்று இளம் பெண் தனது வீட்டு முன் குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது இவரது வீட்டின் அருகே வசிக்கும் காவலாளி சுரேஷ்குமார் (வயது 63) என்பவர் அங்கு வந்தார். அவர் இளம்பெண்ணின் குழந்தைக்கு சாக்லேட் கொடுப்பது போல அருகே சென்றார்.
அப்போது சுரேஷ்குமார் திடீரென இளம்பெண்ணை கட்டிப்பிடித்து தவறாக நடக்க முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த இளம் பெண் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் முதியவர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
இது குறித்து இளம்பெண் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் குழந்தைக்கு சாக்லேட் கொடுப்பது போல நடித்து இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற சுரேஷ்குமார் மீது பெண்கள் வன்கொ டுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் போலீசார் தலைமறைவாக இருந்த காவலாளி சுரேஷ்குமாரை கைது செய்தனர்.
இதனையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- உடனடியாக தரனீஷை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- கோமங்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி குண்டலாபட்டியை சேர்ந்தவர் அய்யாசாமி.
இவரது மகன் தரனீஷ் (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக தரனீஷ் பள்ளிக்கு சரியாக செல்லாமல் இருந்தார்.
இதனையடுத்து அய்யாசாமி அவரது மகனுக்கு பள்ளிக்கு செல்லுமாறு அறிவுரை கூறினார். இதன் காரணமாக தரனீஷ் மிகுந்த மனவேதனை அடைந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து பெட்ரோலை உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார்.
கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக தரனீஷை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தரனீஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கோமங்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






