search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் தக்காளி, கத்தரி, வெண்டைக்கான விலை முன்னறிவிப்பு
    X

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் தக்காளி, கத்தரி, வெண்டைக்கான விலை முன்னறிவிப்பு

    • காய்கறி விலையில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்
    • வெண்டை 0.19 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 1.84 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

    கோவை,

    தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைகழகத்தில் தக்காளி, கத்தரி, வெண்டைக்காய் ஆகியவற்றுக்கான விலை முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பல்கலைக்கழகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    விவசாயிகள் தங்கள் நடவு முடிவுகளை மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டமானது தக்காளி, கத்தரி, வெண்டை ஆகிய காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பை வெளியிடுகிறது.

    வேளாண் நல அமைச்சகத்தின் முதலாவது முன்கூட்டிய மதிப்பீட்டின் படி (2022-23) தமிழகத்தில் தக்காளி சுமார் 0.34 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிரி டப்பட்டு 11.99 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள் ளன. கத்தரி சுமார் 0.24 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 3.09 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அதேபோல, வெண்டை 0.19 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 1.84 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

    விலை முன்னறிவிப்புத் திட்டக்குழு, ஒட்டன்சத்திரம், கோவை சந்தையில் கடந்த 12 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்தரி, வெண்டை விலையில் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

    அதன்படி, அறுவ டையின்போது தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோ ரூ.15 முதல் ரூ.17 வரை, கத்தரியின் விலை ரூ.22 முதல் ரூ.24 வரை, வெண்டையின் விலை ரூ.18 முதல் ரூ.20 வரை இருக்கும் என்று அறியப்படுகிறது.

    பருவமழை மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரத்து வருமாயின், காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது என்பதால் விவசாயிகள் அதற்கு ஏற்ப விதைப்பு முடிவு எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள் ளது.

    Next Story
    ×