என் மலர்
நீங்கள் தேடியது "A tree fell"
- 52-வது வார்டு பீளமேடு ஹட்கோ காலனியில் சாலையோரம் நின்றிருந்த மரம் முறிந்து விழுந்தது.
- மரம் விழுந்ததால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பீளமேடு,
கோவை மாநகரில் நேற்றிரவு திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழைக்கு கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், 52-வது வார்டு பீளமேடு ஹட்கோ காலனியில் சாலையோரம் நின்றிருந்த மரம் முறிந்து விழுந்தது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, அந்த மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, ஊழியர்கள் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மரம் விழுந்ததால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சார ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் கம்பங்களை சரி செய்து மின்சாரம் வழங்கினார்கள்.
மக்கள் புகார் தெரிவித்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்து மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுத்த கிழக்கு மண்டல தலைவரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.






