என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் இளம்பெண்ணை கட்டிப்பிடித்த 63 வயது காவலாளி கைது
- இளம்பெண்ணின் குழந்தைக்கு சாக்லேட் கொடுப்பது போல அருகே சென்றார்.
- இளம்பெண் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
குனியமுத்தூர்,
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் 25 வயது இளம் பெண். இவருக்கு திரும ணமாகி கணவர் மற்றும் ஒரு குழந்தை உள்ளது.
சம்பவத்தன்று இளம் பெண் தனது வீட்டு முன் குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது இவரது வீட்டின் அருகே வசிக்கும் காவலாளி சுரேஷ்குமார் (வயது 63) என்பவர் அங்கு வந்தார். அவர் இளம்பெண்ணின் குழந்தைக்கு சாக்லேட் கொடுப்பது போல அருகே சென்றார்.
அப்போது சுரேஷ்குமார் திடீரென இளம்பெண்ணை கட்டிப்பிடித்து தவறாக நடக்க முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த இளம் பெண் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் முதியவர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
இது குறித்து இளம்பெண் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் குழந்தைக்கு சாக்லேட் கொடுப்பது போல நடித்து இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற சுரேஷ்குமார் மீது பெண்கள் வன்கொ டுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் போலீசார் தலைமறைவாக இருந்த காவலாளி சுரேஷ்குமாரை கைது செய்தனர்.
இதனையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.






