என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவை புட்டுவிக்கி சாலையில் நடுரோட்டில் புதைந்த சரக்கு லாரி
- கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் புதிய சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
- சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குனியமுத்தூர்,
கோவை மாநகரில் நேற்று மாலை வானத்தில் கருமேகங்கள் திரண்டன. தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல வழிந்தோடியது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே ஒரு சரக்கு லாரி நேற்று இரவு கோவைக்கு வந்தது. அப்போது உக்கடம்-குனியமுத்தூர் ரோட்டில் புட்டுவிக்கி பாலம் அருகே சென்றபோது லாரியின் முன்பக்க சக்கரங்கள் திடீரென புதைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர், அந்த லாரியில் இருந்து குதித்து உயிர்தப்பினார்.
இதற்கிடையே சரக்கு லாரியின் பின்பக்க சக்கரங்க ளும் திடீரென பூமிக்குள் புதைய தொடங்கியது. இதனால் அந்த வழியாக வேறு வாகனங்கள் செல்ல முடியவில்லை. எனவே அங்கு சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடனடியாக சம்பவஇடத்துக்கு வந்தனர். அங்கு இருந்த பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆனாலும் சரக்கு லாரியை நிலைக்கு கொண்டு வர இயலவில்லை.
தொடர்ந்து புட்டுவிக்கி சாலைக்கு ராட்சத கிரேன் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் நடுரோட்டில் புதைந்து கிடந்த சரக்கு லாரியை பத்திரமாக மீட்டு, அங்கு போக்குவரத்தை சீர்படுத்தினர்.
அங்கு கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் புதிய சாலை அமைக்கப்பட்டு உள்ளது. லாரி செல்லும் அளவுற்கு கூட தரமின்றி சாலை அமைக்கப்பட்டு உள்ளதாக வாகனஓட்டிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கோவை மாநகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் ரோடுகள் குண்டும்-குழியு மாக காட்சி அளிக்கின்றன. இதனால் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் ரோட்டிலுள்ள குழிகளில் சிக்கி தவிக்கும் நிலை வாடிக்கையாக உள்ளது.
மேலும் கோவை மாநகர போக்குவரத்து சாலைகளில் பெரும்பாலானவை தர மற்றதாக உள்ளது.
எனவே தான் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து உள்ளனர்.






