என் மலர்
கோயம்புத்தூர்
- பணம் கட்டிய பிறகும் இணைப்பு தராததால் ஆத்திரம்
- ஓட்டல் அதிபர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
கோவை,
சேலத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 38). ராணிப்பேட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (26). இவர்கள் 2 பேரும் கோவை மாவட்டம் நீலாம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக வேலை பார்த்து வருகின்றனர்.
பாலமுருகன் என்பவர் அந்த பகுதியில் நடத்தி வரும் ஓட்டலுக்கு மின் கட்டணம் செலுத்த வில்லை. இதனையடுத்து கலியமூர்த்தி, பாலகி ருஷ்ணன் ஆகியோர் ஓட்டலுக்கு சென்று மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் மாலையில் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஓட்டல் உரிமையாளர் ஆன்லைன் மூலமாக மின் கட்டணத்தை செலுத்தி விட்டதாக கூறினர்.
இதனையடுத்து கலிய மூர்த்தி, பாலகிருஷ்ணன் ஆகியோர் மீண்டும் மின் இணைப்பு கொடுப்பதற்காக சென்றனர். அப்போது அங்கு இருந்த ஓட்டல் உரிமையாளர் மின் கட்டணம் செலுத்திய உடன் மின் இணைப்பை கொடுக்க மாட்டீர்களா என கூறி தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்து உள்ளார்.
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஓட்டல் உரிமையாளர் பாலமுருகன் உள்பட 5 பேர் சேர்ந்து கலியமூர்த்தி, பா லகிருஷ்ணன் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து நீலாம்பூர் மின்வாரிய உதவி பொறியாளர் சேக் அலாவூ தீன் சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மேட்டுப்பாளையத்தில் விவசாயிகள் மாநாடு
- ஆற்றில் நீர் எடுத்து விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்று நீர் பாசன விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம், பவானி நதி நீர் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு குழு சார்பில் பவானி ஆற்றில் நீர் பாசன திட்டம், நீர்ப்பாசன அனுமதி கேட்டு விவசாயிகள் மாநாடு நடைபெற்றது.
பவானி ஆற்று நீர்பாசன விவசாயிகள் தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் பி.என்.ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். பவானி நதிநீர் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு குழு தலைவர் டி.டி.அரங்கசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் ஆகியோர் சிறபு விருந்தினராக கலந்து கொண்டனர்.
கூட்ட்தில் விவசாயிகள் பேசியதாவது:-
பவானி ஆற்றில் ஆண்டுக்கு 70 டி.எம்.சி தண்ணீர் வருகிறது. இதில் குடிநீர், மற்ற தேவைகளுக்கு 10 டி.எம்.சி நீர் போக மீதமுள்ள 60 டி.எம்.சி தண்ணீரில் 6 லட்சம் ஏக்கர் விவசாயம் மேற்கொள்ளலாம். அதன்படி நெல்லித்துறை முதல் பெத்திக்குட்டை வரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் 80 ஆண்டுக்கும் மேலாக பவானி ஆற்றின் நீரை கொண்டு விவசாயம் செய்து வருகிறோம்.
கடந்த 2017-ல் பவானி ஆற்றில் தண்ணீர் வற்றவே, பம்ப் மோட்டார் மூலம் ஆற்றில் தண்ணீர் எடுக்க அரசு தடை விதித்தது. இதையடுத்து அப்போதைய எம்.பியும், தற்போதைய எம்.எல்.ஏவுமான ஏ.கே.செல்வராஜ், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பேசி விவசாயிகளுக்காக உரிய நடவடிக்கை எடுத்தார்.
இந்த நிலையில் வருகிற பிப்ரவரி மாதம் பவானி ஆற்றில் மீண்டும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பெத்திக்குட்டை பகுதியில் குடிநீர் திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் வறட்சி காலங்களில் கூட விவசாயிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை வராது.
நதியின் கரையோரத்தில் இருக்கும் மக்களுக்கு நதியில் பாயும் தண்ணீரை பயன்படுத்த உரிமை உண்டு என சட்டம் உள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு எந்த பாசன வசதியும் ஏற்படுத்தி கொடுக்க அரசு முன் வருவது இல்லை.
எனவே பவானி ஆற்றில் பாசனத்திற்கு அனுமதி இல்லாமல் தண்ணீர் எடுத்து விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதோடு இப்பகுதி மற்ற விவசாயிகளுக்கும் பாசன திட்டத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
ஆற்றில் நீர் எடுத்து விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது விவசாயிகளுக்கு ஆற்றில் தண்ணீர் எடுக்க அனுமதி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அரசு இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதில் தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ பா.அருண்குமார், காரமடை தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், பெள்ளேபாளையம் ஊராட்சி தலைவர் பிரஸ்குமார் என்ற சிவக்குமார், தொழில் அதிபர் நந்தக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போலீசில் கணவர் புகார் அளித்ததால் உண்மை அம்பலம்
- கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோவை,
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள அத்திப்பாளையத்தை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தார். ஆனால் இளம்பெண்ணுக்கு குழந்தைகள் இல்லை.
இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதனை அவரது கணவர் கண்டித்தார். இதனையடுத்து இளம்பெண் கள்ளக்காதல னுடன் ஓட்டம் பிடித்தார்.
பின்னர் அவர் அந்த வாலிபரை விட்டு பிரிந்து கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். அதன் பின்னர் மீண்டும் மற்றொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் செ ன்றார்.
அவரையும் பிரிந்து மீண்டும் கணவருடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூடலூரை சேர்ந்த உறவினர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் இளம்பெண் அடிக்கடி ஜாலியாக இருந்து வந்தார்.
சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் உறவினருடன் ஓட்டம் பிடித்தார். வீட்டிற்கு வந்த இளம்பெண்ணின் கணவர் மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் மாயமான தனது மனைவியை கண்டு பிடித்து தரும்படி கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஒரே ஆண்டில் 3-வது முறையாக உறவினருடன் இளம்பெண் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.
- டி.சி. கொடுத்து விடுவேன் என தலைமை ஆசிரியர் மிரட்டியதால் வேதனை
- பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர்
கோவை,
கோவை மதுக்கரை அருகே உள்ள குரும்பபாளையம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சக்திபாபு. இவரது மகன் யோகேஷ் (வயது 13).
திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் லோகேஷ் (13). கல்யாண சுந்தரனார் வீதியை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மகன் அஸ்வந்த் (13), வீரமாத்தி அம்மன் கோவில் விதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு. இவரது மகன் ரோகித் (13). இவர்கள் 4 பேரும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து பள்ளியில் தலைமை ஆசிரியர் மாணவர்கள் 4 பேரையும் அழைத்து டி.சி. கொடுத்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.
இதனால் பெற்றோருக்கு பயந்த மாணவர்கள் 4 பேரும் வீட்டிற்கு செல்லாமல் இருந்தனர். மேலும் அவர்கள் ஊட்டிக்கு செல்லலாம் என முடிவு செய்தனர். அதன்படி கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு புறப்பட்டு சென்றனர். மாணவர்கள் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த அவர்களின் பெற்றோர் மதுக்கரை போலீசில் மாயமான தங்களது மகன்களை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்களை தேடி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மாணவர்கள் ஊட்டி செல்வதற்காக மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் நிற்பது தெரிய வந்தது. பின்னர் மதுக்கரை போலீசார் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று மாணவர்கள் 4 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி உள்ள "லியோ" திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
- படம் வெளியானதும், தியேட்டருக்கு வெளியே பட்டாசு வெடித்தும், அங்கு வந்தவர்களுக்கு இனிப்பும் வழங்கி லியோ படத்தை கொண்டாடினர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி உள்ள "லியோ" திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
தமிழகத்தில் காலை 9 மணிக்கு திரைப்படம் வெளியானது. படம் வெளியானதையொட்டி ரசிகர்கள் அதிகாலையிலேயே கொண்டாட்டத்தை தொடங்கினர்.
அந்த வகையில் கோவை மாவட்டத்திலும், லியோ திரைப்படம் இன்று வெளியானது. மாவட்டத்தில் மொத்தம் 100 தியேட்டர்களில் விஜயின் லியோ வெளியாகியது.
படம் 9 மணிக்கு தான் வெளியாகியது என்றாலும் கோவையில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் காலை 5 மணியில் இருந்தே ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் தியேட்டர் வளாகத்தில் ஒன்று திரண்டு மேள, தாளங்கள் முழங்க படத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் மேள, தாளத்தின் இசைக்கு ரசிகர்கள் ஏற்ப உற்சாக ஆட்டமும் போட்டனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த விஜய் பேனருக்கு பாலாபிஷேகமும் செய்தனர்.
படம் வெளியானதும், தியேட்டருக்கு வெளியே பட்டாசு வெடித்தும், அங்கு வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கியும் லியோ படத்தை கொண்டாடினர்.
கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள தியேட்டருக்கு அதிகாலையிலேயே ரசிகர்கள் வந்தனர். அவர்கள், அங்கு லியோ படத்தை வரவேற்று பெரிய பெரிய பேனர்கள் வைத்தனர்.
தொடர்ந்து அதற்கு பாலாபிஷேகம் செய்ததுடன், அங்கு தேங்காயும் உடைத்தனர். தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி அண்டை மாநில கேரளாவில் இருந்தும் அதிகமான ரசிகர்கள் இங்கு படம் பார்க்க வந்திருந்தனர்.

தமிழக-கேரள ரசிகர்கள் அனைவரும் இணைந்து, பாடல்களை இசைக்க விட்டும், மேள தாளங்களை அடிக்க வைத்து ஒன்றாக கூடி ஆட்டம், பாட்டமாக படத்தினை வரவேற்றனர். இதனால் அந்த பகுதியே திருவிழாபோல் காட்சியளித்தது.
இதேபோல் கருமத்தம்பட்டி, நீலாம்பூர் பகுதிகளில் உள்ள தியேட்டர்களிலும் உற்சாகம் களை கட்டியது. அங்கு பேனருக்கு பாலாபிஷேகம், 500 தேங்காய் உடைத்து தங்கள் வரவேற்பை படத்திற்கு அளித்தனர்.
புறநகர் பகுதிகளில் உற்சாகம் களைகட்டிய போதும், மாநகர பகுதிகளில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரசிகர்கள் திரைப்படத்தை கண்டு ரசித்து சென்றனர்.
மாநகரில் பாலாபிஷேகம், மேள, தாளங்கள் முழங்க தடை விதிக்கப்பட்டதை அடுத்து, ரசிகர்கள் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக நீண்ட வரிசையில் காத்திருந்து, படத்தை பார்த்தனர்.
சரியாக 9 மணிக்கு படம் வெளியானதும், திரையில் விஜயை பார்த்த சந்தோஷத்தில் ரசிகர்கள் விசில் அடித்தும், பேப்பர்களை பறக்கவிட்டும் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
- இசை கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை இசையின் மூலம் வெளிப்படுத்துவதே இந்த நிகழ்ச்சி.
- இசைக்கப்பட்ட இசையும் பாடல்களும் அரங்கில் இருந்த பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.
ஈஷா நவராத்திரி விழாவின் 4-ம் நாளான இன்று புராஜெக்ட் சம்ஸ்கிருதி மாணவர்கள் வழங்கிய, கர்நாடகம் மற்றும் ஹிந்துஸ்தானி இசையின் கலவையாக அமைந்த "ஜூகல்பந்தி" இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை ஈஷா யோக மையத்தில் நவராத்திரி விழா கடந்த 15-ம் தேதி முதல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள், நம் பாரத பண்பாட்டையும், தமிழ் கிராமிய கலைகளையும் அறிந்து கொள்ளும் விதமாக தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, 4-ம் நாளான இன்று புராஜெக்ட் சம்ஸ்கிருதி மாணவர்கள் வழங்கிய "தேவி ப்ரோவ சமயமிதே" என்ற ஜூகல்பந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பொருள், "என்னைக் காப்பதற்கு இதுவே தருணம் தேவி" என்பதாகும். பாரதத்தின் பாரம்பரிய இசை மரபில் "ஜூகல் பந்தி" என்பது பல்வேறு இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து பலவிதமான இசைக் கருவிகளை அல்லது வாய்ப்பாட்டு கலையை ஒரு கலவையாக வெளிப்படுத்துவது. அடிப்படையில் இசை கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை இசையின் மூலம் வெளிப்படுத்துவதே இந்த நிகழ்ச்சி.
தெய்வீகமான பெண் தன்மையைக் கொண்டாடும் வகையில் புராஜெக்ட் சமஸ்கிருதி மாணவர்கள் "ஜெகதீஸ்வரி பிரம்ம ஹ்ரிதயேஸ்வரி" என்கிற பாடலை முதல் பாடலாகப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கினர். தொடர்ந்து இசைக்கப்பட்ட இசையும் பாடல்களும் அரங்கில் இருந்த பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.
முன்னதாக, ஜாகீர்நாயக்கன் பாளையம் பஞ்சாயத்து தலைவர் திருமதி. அன்னபூரணி துரைசாமி, நரசீபுரம் பஞ்சாயத்து தலைவர் திருமதி. விஜயராணி பாரதிராஜா, கோவை மாவட்டம் விவசாய சங்க தலைவர் திரு. ஆறுச்சாமி, வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர் திரு. பி. வேலுச்சாமி மற்றும் ஆலாந்துறை பஞ்சாயத்து கவுன்சிலர் திரு. மூர்த்தி அவர்கள் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நவராத்திரியின் 5-ம் தினமான நாளை மாலை 6.30 மணிக்கு திரு. விவேக் சதாசிவம் அவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறும்.
- போதிய குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் இல்லை
- தீர்வு கிடைக்குமா? பயணிகள் எதிர்பார்ப்பு
கோவை,
கோவை மாநகரின் மத்திய பகுதியாக பீளமேடு உள்ளது. இங்கு அரசு மருத்துவக் கல்லூரி, இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி மற்றும் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது.
மேலும் அரசு தொழில்நுட்ப கல்லூரி, சி.ஐ.டி என்ஜினியரிங் கல்லூரி ஆகியவை பீளமேடு பகுதியில் இயங்கி வருகின்றன. ஏராளமான பள்ளி-கல்லூரிகளும் உள்ளன. இதுதவிர மத்தியஅரசின் இந்திய உணவுக்கழகம், ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, மத்திய நதிநீர் ஆணையம் உள்ளிட்ட அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.
பீளமேடு ரயில் நிலையம் வழியாக சென்னை மற்றும் வடமாநிலங்களுக்கு எண்ணற்ற ரயில்கள் சென்று வருகின்றன. மதுரை, திருச்சி, ஈரோடு, பாலக்காடு, திருப்பூர் செல்லும் ரெயில்களின் போக்குவரத்தும் நடைமுறையில் உள்ளது.
எனவே இந்த ரெயில் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் இங்கு பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் அறவே இல்லை என்பது கசப்பான உண்மை.
பீளமேட்டில் இருந்து எண்ணற்ற பயணிகள் ரெயிலுக்காக பீளமேட்டில் காத்துக் கொண்டு உள்ளனர். அவர்களுக்கு ரெயில் நிலையத்தில் போதிய குடிநீர் வசதிகள் அறவே இல்லை. மேலும் கழிப்பிட வசதியும் இல்லை. எனவே பீளமேடு ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் தினமும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
ரயில் நிலையத்தின் உள்ளே தகுந்த பாதுகாப்பு இல்லாததால் மேற்கு பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. அங்கு அவர்கள் கும்பலாக உட்கார்ந்து இரவு நேரங்களில் மது அருந்துவது வாடிக்கையாக உள்ளது.
ரயில் நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் அந்த பகுதி எப்போதும் இருளாகவே காணப்படுகிறது. மேலும் அங்கு உள்ள மரங்களின் குப்பைகள் நீண்டநாட்களாக அகற்றப்படவில்லை. இதனால் அங்கு எப்போதும் குப்பைகள் மண்டிய நிலையில் காட்சிஅளிக்கிறது.
மேலும் இந்த ரயில் நிலையத்தின் உள்ளே சிலர் நடைபாதையில் படுத்து தூங்குவதையும் பார்க்க முடிகிறது.
சரக்கு போக்குவரத்து அதிகம் நடைபெறும் இந்த ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது பொதுமக்கள் மற்றும் பயணிகளை அவதிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
பீளமேடு வழியாக செல்லும் பயணிகளால் ரயில் நிலையத்திற்கு வருமானம் கிடைக்கிறது. மேலும் சரக்கு போக்குவரத்தும் அதிகளவு நடக்கிறது. அதன் மூலமும் வருமானம் அதிகளவு கிடைக்கிறது.
பள்ளி-கல்லூரிகள் மற்றும் வேலைக்காக செல்வோர் பீளமேடு ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் தினமும் திருப்பூர், ஈரோட்டுக்கு ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். பீளமேட்டில் வேலைக்கு செல்பவர்கள் காந்திமாநகர் பகுதியில் இருந்து ரயில் பாதையின் குறுக்கே கடந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனால் சில நேரங்களில் ஒருசிலர் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் அபாய சூழலும் உள்ளது.
இதனை தவிர்க்கும்வகையில் சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் பீளமேடு ரயில் நிலையத்தில் உடனடியாக அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் குடிதண்ணீர், கழிப்பிட வசதிகள் செய்து தர வேண்டும். பயணிகள் அமர்வதற்காக சுகாதாரமான முறையில் அறைகள் ஏற்படுத்தி தர வேண்டும் என பீளமேடு பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் அங்கு உள்ள ரயில் நிலையத்திற்கு சொந்தமான குடியிருப்புகள், பயன்படுத்த இயலாத வகையில் உருக்குலைந்து காட்சிஅளிக்கிறது.
எனவே அங்கு சமூகவிரோதிகள் பதுங்கியிருந்து குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பாம்புகள், பூச்சி, நாய் உள்ளிட்ட விலங்குகளும் தஞ்சம் புகுந்து உள்ளன. இதனால் பீளமேடு ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.
- பஸ் நிலைய வணிகவளாகம் கடைகள்-குத்தகைதாரர் நலச்சங்கம் கோரிக்கை
- கோவை மேயர் கல்பனாவுடன் சந்திப்பு
கோவை,
கோவை மாநகராட்சி பஸ் நிலைய வணிகவளாக கடைகள், குத்தகைதாரர்கள் நலச்சங்க தலைவர் ராகவலிங்கம், செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் ஞானபால் செல்வராஜ் ஆகியோர் மாநகராட்சி மேயர் கல்பனாவிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோது பல்வேறு சிரமங்களுக்கு இடையே மாநகராட்சிக்கு சொந்த மான வணிகவளாக கடை களின் வாடகை நிலு வைத்தொகையை அபராத வட்டியுடன் செலுத்தி மாநகராட்சி நிபந்தனைகளை ஏற்று அனைத்து வாடகைக்கடைகளையும் பல கஷ்டங்களுக்கு இடையே நிலுவையின்றி செலுத்தி உள்ளோம்.
கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் முதலாம் அலையின்போ தும், 2-வது அலையின்போ தும் கடைகள் அனைத்தும் செயல்படாமல் இருந்த காலத்தில் கடை வாடகை தொகையை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம்.
ஆனால் 2 மாதம் மட்டுமே கடை வாடகை தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் 3 மாத கடை வாடகை தள்ளுபடி செய்ய வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
- அரசு கலை கல்லூரியில் வனத்துறை சார்பில் நடைபெற்றது
- யானைகள்- வழித்தடத்தை பாதுகாக்க வலியுறுத்தல்
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலை கல்லூரியில் வனத்துறை மற்றும் தன்னார்வலர் நிறுவனம் சார்பில் யானைகள் திருவிழா நடைபெற்றது.
இதில் வால்பாறையில் உள்ள என்.சி.எப் யானைகள் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சங்கரராமன் கணேஷ் வனத்துறை ஏ.சி.எப் செல்வம், வால்பாறை வன சரகர் வெங்கடேஷ், நகராட்சி நகர மன்ற தலைவர் அழகுசுந்தர வள்ளி, துணை தலைவர் செந்தில் 4-வது வார்டு உறுப்பினர் பாஸ்கர், கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியம், டிவி புகழ் விஜயகுமார் கலந்து கொண்டனர்.
இதில் யானைகளை பற்றி யானைகள் இயல்பான வாழ்கை முறைகளையும் யானைகள் ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காடுகள் வளர யானைகள் முக்கியமான பங்கை கொண்டது.
இதில் யானை வழித்தடம் பாதுகாக்க வேண்டும் யானைகளை பாதுகாக்க வேண்டும் என்று அனைவருக்கு தெரி வித்தனர்.
- ரங்குமுடி எஸ்டேட் பாரதிதாசன் நகரில் நேற்றிரவு புகுந்து அட்டகாசம்
- வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
வனத்தை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் நுழைந்து வருகின்றன.
அவ்வாறு வரும் யானைகள், வீடுகளில் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிட்டு வீடுகள், சத்துணவு மையம், மளிகை கடை போன்றவற்றை இடித்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் பாரதிதாசன் நகர் பகுதியில் நேற்றிரவு 11 காட்டு யானைகள் புகுந்தன.
அந்த யானைகள் குடியிருப்பு பகுதியிலேயே சில மணி நேரங்கள் சுற்றி திரிந்தது. தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ராஜன் என்பவருடைய வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து தூக்கி எறிந்து சென்றது. வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. யானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து மக்கள் கூறும்போது, இந்த பகுதிகளில் அண்மைக் காலங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே வனத்துறையினர் இங்கு கண்காணிப்பு பணி மேற்கொண்டு காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- குறைந்த விலையில் தங்கம் இருப்பதாக கூறி மோசடி
- 3 பெண்களுக்கு போலீசார் வலைவீச்சு
கோவை,
கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் பாத்திமா( வயது48). நோட்டு புத்தக கடை வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் சிவானந்த காலனி 5-ம் நம்பர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 3 பெண்கள் அங்கு வந்தனர். அவர்கள் பாத்திமாவின் அருகே சென்று தங்களிடம் குறைந்த விலையில் தங்கம் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் உடனடியாக தங்க நகை தருவதாக கூறினர்.
முதலில் அவர்கள் 5 பவுன் தங்க நகையை ரூ.50 ஆயிரத்துக்கு தருவதாக கூறினர். இதனை உண்மை என நம்பிய பாத்திமா நகை வாங்க ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் மேலும் அவர்கள் இன்னும் தங்களிடம் 5 பவுன் தங்க நகை இருக்கிறது. மொத்தமாக ரூ.1.50 லட்சம் கொடுத்தால் நகைகள் அனைத்தும் தருவதாக கூறி ஆசை வார்த்தை கூறினர்.
ஆனால் பாத்திமா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றார். இதனை தொடர்ந்து அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி ரூ.80 ஆயிரத்துக்கு 10 பவுன் தங்க நகைகள் தருவதாக கூறியுள்ளனர்.
பாத்திமா அவர்களிடம் ரூ.80 ஆயிரம் பணம் கொடுத்தார். 3 பெண்களும் அவர்களிடம் இருந்த நகையை கொடுத்து விட்டு பணத்தை வாங்கி சென்றனர்.
பின்னர் பாத்திமா நகை அடகு கடைக்கு சென்று தங்க நகையை பரிசோதித்து பார்த்தார். அப்போது அது போலி நகைகள் என்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கெட்டுப் போகும் வரையில் விற்பனை செய்ய முயற்சி
- மாவட்ட உணவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
கோவை,
கோவை மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய, சிறிய பேக்கரிகள் உள்ளன.
இதில், மாநகரில் செயல்படும் பெரும்பாலான பேக்கரிகள் தாங்களே ரொட்டிகளை உற்பத்தி செய்து வருகின்றன.
இப்படி செய்யப்படும் ரொட்டிகளை கவரில் அடைத்து 'பிரஷ் பிரட்' என கடைகளுக்கும், மற்ற பேக்கரிகளுக்கும் விற்பனை செய்கின்றனர். ரொட்டி தயாரிப்பு பணியை குடிசை தொழில் போன்று செய்து வருகின்றன. ஆனால், இப்படி தயார் செய்யப்படும் ரொட்டிகளில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடுவதில்லை.
இது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினால், இது 'இன்று' தயாரிக்கப்பட்டது என கூறி பேக்கரி கடைக்காரர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
பொதுவாக ரொட்டி வகைகள் தயாரிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குள் காலாவதியாக கூடியவை. இதனை காலாவதி தேதிக்குள் விற்பனை செய்து விட வேண்டும்.
ஆனால், பேக்கரிகள் தாங்கள் தயார் செய்யும் ரொட்டிகளில் காலாவதி தேதி குறிப்பிடாமல், ரொட்டிகள் கெட்டுப் போகும் வரையில் விற்பனை செய்ய முயற்சி செய்கின்றனர்.
பிரெஷ் பிரட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் இது போன்ற காலாவதி தேதி இல்லாத ரொட்டிகளை வாங்கி பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி தமிழ்செல்வன் கூறியதாவது:-
ரொட்டி பாக்கெட்டு களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி கட்டாயம் குறிப்பிட்டுதான் விற்பனை செய்ய வேண்டும்.
தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடாமல் ரொட்டி பாக்கெட்டுகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காலாவதி தேதியில்லா மல் ரொட்டி விற்பனை செய்வது குறித்து பேக்கரிக ளில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள் ளது. மேலும், காலாவதி குறிப்பிடாமல் விற்பனை செய்வது மற்றும் உணவுப் பொருள்கள் குறித்த பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






