என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீலாம்பூரில் மின் இணைப்பு கொடுக்க சென்ற மின்வாரிய ஊழியர்கள் மீது தாக்குதல்
- பணம் கட்டிய பிறகும் இணைப்பு தராததால் ஆத்திரம்
- ஓட்டல் அதிபர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
கோவை,
சேலத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 38). ராணிப்பேட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (26). இவர்கள் 2 பேரும் கோவை மாவட்டம் நீலாம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக வேலை பார்த்து வருகின்றனர்.
பாலமுருகன் என்பவர் அந்த பகுதியில் நடத்தி வரும் ஓட்டலுக்கு மின் கட்டணம் செலுத்த வில்லை. இதனையடுத்து கலியமூர்த்தி, பாலகி ருஷ்ணன் ஆகியோர் ஓட்டலுக்கு சென்று மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் மாலையில் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஓட்டல் உரிமையாளர் ஆன்லைன் மூலமாக மின் கட்டணத்தை செலுத்தி விட்டதாக கூறினர்.
இதனையடுத்து கலிய மூர்த்தி, பாலகிருஷ்ணன் ஆகியோர் மீண்டும் மின் இணைப்பு கொடுப்பதற்காக சென்றனர். அப்போது அங்கு இருந்த ஓட்டல் உரிமையாளர் மின் கட்டணம் செலுத்திய உடன் மின் இணைப்பை கொடுக்க மாட்டீர்களா என கூறி தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்து உள்ளார்.
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஓட்டல் உரிமையாளர் பாலமுருகன் உள்பட 5 பேர் சேர்ந்து கலியமூர்த்தி, பா லகிருஷ்ணன் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து நீலாம்பூர் மின்வாரிய உதவி பொறியாளர் சேக் அலாவூ தீன் சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






