search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் விவசாயிகள் தண்ணீர் எடுக்க அரசு அனுமதிக்க வேண்டும்- விவசாயிகள் மாநாட்டில் வலியுறுத்தல்
    X

    மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் விவசாயிகள் தண்ணீர் எடுக்க அரசு அனுமதிக்க வேண்டும்- விவசாயிகள் மாநாட்டில் வலியுறுத்தல்

    • மேட்டுப்பாளையத்தில் விவசாயிகள் மாநாடு
    • ஆற்றில் நீர் எடுத்து விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்று நீர் பாசன விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம், பவானி நதி நீர் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு குழு சார்பில் பவானி ஆற்றில் நீர் பாசன திட்டம், நீர்ப்பாசன அனுமதி கேட்டு விவசாயிகள் மாநாடு நடைபெற்றது.

    பவானி ஆற்று நீர்பாசன விவசாயிகள் தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார்.

    துணைத்தலைவர் பி.என்.ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். பவானி நதிநீர் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு குழு தலைவர் டி.டி.அரங்கசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் ஆகியோர் சிறபு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    கூட்ட்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    பவானி ஆற்றில் ஆண்டுக்கு 70 டி.எம்.சி தண்ணீர் வருகிறது. இதில் குடிநீர், மற்ற தேவைகளுக்கு 10 டி.எம்.சி நீர் போக மீதமுள்ள 60 டி.எம்.சி தண்ணீரில் 6 லட்சம் ஏக்கர் விவசாயம் மேற்கொள்ளலாம். அதன்படி நெல்லித்துறை முதல் பெத்திக்குட்டை வரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் 80 ஆண்டுக்கும் மேலாக பவானி ஆற்றின் நீரை கொண்டு விவசாயம் செய்து வருகிறோம்.

    கடந்த 2017-ல் பவானி ஆற்றில் தண்ணீர் வற்றவே, பம்ப் மோட்டார் மூலம் ஆற்றில் தண்ணீர் எடுக்க அரசு தடை விதித்தது. இதையடுத்து அப்போதைய எம்.பியும், தற்போதைய எம்.எல்.ஏவுமான ஏ.கே.செல்வராஜ், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பேசி விவசாயிகளுக்காக உரிய நடவடிக்கை எடுத்தார்.

    இந்த நிலையில் வருகிற பிப்ரவரி மாதம் பவானி ஆற்றில் மீண்டும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பெத்திக்குட்டை பகுதியில் குடிநீர் திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் வறட்சி காலங்களில் கூட விவசாயிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை வராது.

    நதியின் கரையோரத்தில் இருக்கும் மக்களுக்கு நதியில் பாயும் தண்ணீரை பயன்படுத்த உரிமை உண்டு என சட்டம் உள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு எந்த பாசன வசதியும் ஏற்படுத்தி கொடுக்க அரசு முன் வருவது இல்லை.

    எனவே பவானி ஆற்றில் பாசனத்திற்கு அனுமதி இல்லாமல் தண்ணீர் எடுத்து விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதோடு இப்பகுதி மற்ற விவசாயிகளுக்கும் பாசன திட்டத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

    ஆற்றில் நீர் எடுத்து விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது விவசாயிகளுக்கு ஆற்றில் தண்ணீர் எடுக்க அனுமதி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அரசு இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இதில் தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ பா.அருண்குமார், காரமடை தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், பெள்ளேபாளையம் ஊராட்சி தலைவர் பிரஸ்குமார் என்ற சிவக்குமார், தொழில் அதிபர் நந்தக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×