என் மலர்
கோயம்புத்தூர்
- மல்லி ஒரு கிலோ ரூ.1200-க்கு விற்பனை
- பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோவை,
நவராத்திரி விழா தொடங்கி நடந்து வருகிறது. வீடுகளிலும், தொழில் நிறுவ னங்களிலும் கொலு பொம்மைகள் வைத்து பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.
மேலும் கோவில்களில் தினந்தோறும் அம்மனுக்கு வெவ்வேறு விதமான அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடக்கின்றன. இதற்காக பூக்கள் அதிக ளவில் பயன்படுத்தப்படு கிறது. பூக்களின் தேவை அதிகமாக இருப்பதால் அதன் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கோவை பூ மார்க்கெட்டுகளில் கடந்த சில நாட்களாக பூக்கள் வாங்குவதற்காக பொது மக்கள் கூட்டம் அலைமோது கிறது. பூக்கள் விலை உயர்ந்திருந்தாலும் பூஜை க்காக பொதுமக்கள் பூக்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள்.
மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1200-க்கும், மற்றொரு ரகம் ரூ.800-க்கும் விற்பனையானது. முதல் ரக மல்லிகைப்பூ மார்க்கெட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் விற்று தீர்ந்தது.முல்லைப்பூ ஒரு கிலோ ரூ.600-க்கும், செவ்வந்தி பூ ஒரு கிலோ ரூ.320-க்கும் விற்கப்பட்டது. மற்ற பூக்கள் விற்பனையான விலை விவரம் (ஒரு கிலோ) வருமாறு:-
சம்பங்கி - ரூ.240, அரளி - ரூ.400, ஜாதி பூ- ரூ.800, ரோஜா - ரூ.300, கலர் செ வ்வந்தி - ரூ.240, தாமரை 1 - ரூ.40, செண்டுமல்லி - ரூ.80, கோழிக்கொண்டை பூ - ரூ.120, மஞ்சள் அரளி - ரூ.400, துளசி - ரூ.50, மருகு ஒரு கட்டு -ரூ.20, மரிக்கொழுந்து 1 கட்டு - ரூ.30, வாடாமல்லி -ரூ.120
வருகிற 23-ந் தேதி ஆயுத பூஜை மற்றும் 24-ந் தேதி விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாக்களுக்கு பூக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் என்பதால் பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- நவராத்திரி விழா கடந்த 14-ந் தேதி தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் தொடங்கியது.
- கிருஷ்ணர், ராதை, சரஸ்வதி உள்ளிட்ட பல்வேறு கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட்ட கொலு அமைக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆலங்கொம்பு பகுதியில் தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் நவராத்திரி விழா கடந்த 14-ந் தேதி தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் தொடங்கியது.
முன்னதாக கிருஷ்ணர், ராதை, சரஸ்வதி உள்ளிட்ட பல்வேறு கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட்ட கொலு அமைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து எம்பெருமான் ஸ்ரீவாரிக்கு காலை முதல் விசேஷ அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
தொடர்ந்து தினசரி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், அன்னபட்சி வாகனம், சிம்ம வாகனம், கல்ப விருட்ஷக, சர்வ பூபாள வாகனங்களில் மலையப்பசாமி எழுந்தருளி அருள்பாலித்தார்.
நேற்று மலையப்பசாமி மோகினி திருக்கோலத்தில் கருட சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
- கடந்த 17-ந் தேதி கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போய் இருந்தது.
- பூசாரி வால்பாறை போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே நடுமலை எஸ்டேட் பகுதியில் பிரசித்தி பெற்ற துண்டு கருப்பராயர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 17-ந் தேதி காலை துண்டு கருப்பராயர் கோவில் பூசாரி கருப்பசாமி சென்ற போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போய் இருந்தது. இதுபற்றி கோவில் பூசாரி வால்பாறை போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
கோவில் வளாகத்தில் மாசிலாமணி என்பவர் ஆட்டோவை நிறுத்தி சென்று உள்ளார். அவரது ஆட்டோவில் இருந்த ஸ்பீக்கர் பாக்ஸையும் காணவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் நடுமலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் கட்டப்பையில் ஏதோ பொருட்களை எடுத்துச் சென்றதை அந்த பகுதியினர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கோவிலில் உண்டியலை உடைத்து திருடியதையும், ஸ்பீக்கர் பாக்சை திருடியதையும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
- கடந்த ஜூன் மாதம் யுசூப்ஷா மனைவியுடன் மகள்களை பார்ப்பதற்காக துபாய் நாட்டிற்கு சென்றார்.
- கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் யுசூப்ஷா (வயது 54). இவர் அந்த பகுதியில் இரும்புக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த ஜூன் மாதம் யுசூப்ஷா தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் மகள்களை பார்ப்பதற்காக துபாய் நாட்டிற்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் பின் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ஆரம், வளையல், மோதிரம் உள்பட 15 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
வீட்டின் கதவு திறந்து இருப்பதை பார்த்த யுசூப்ஷாவின் உறவினர் இது குறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதனை வைத்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரும்புக்கடை உரிமையாளர் வீட்டில் 15 பவுன் நகைகளை கொள்ளை யடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நலன் கருதி அப்பள்ளிக்கு இரண்டு மின்விசிறிகளை வால்பாறை நகர தி.மு.க. செயலாளர் குட்டி என்ற சுதாகர் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.
வால்பாறை வட்டாட்சியர் அருள் முருகன், நகர்மன்ற துணைத்தலைவர் செந்தில் குமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பாஸ்கர், பள்ளி ஆசிரியர் பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் போது வட்டாட்சியர் அலுவல பணியாளர் பன்னீர், பிரதிநிதி டென்சிங் மற்றும் பலர் உடனிருந்தனர்
- மாநகராட்சி 5 மண்டலங்களிலும் 7,500 ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
- நாங்கள் பல ஆண்டுகளாக கோவை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகிறோம்.
கோவை:
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளது. இந்த 100 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை அகற்றுவது உள்ளிட்ட தூய்மை பணிகளில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நிரந்தர தூய்மை பணியாளர்கள் மட்டுமின்றி, ஒப்பந்த தூய்மை பணியாளர்களும் இங்கு பணியாற்றி வருகிறார்கள். மாநகராட்சி 5 மண்டலங்களிலும் 7,500 ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்கள் தங்களை நிரந்தர ஊழியர்களாக மாற்ற கோரியும், கலெக்டர் அறிவித்த ரூ.721 ஊதிய உயர்வு சம்பளத்தை வழங்க கோரியும் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து இன்று 400-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தூய்மை பணியார்கள் கோவை-அவினாசி சாலையில் உள்ள வ.உ.சி. மைதானத்திற்கு வந்தனர்.
பின்னர் வாகனங்களை அங்கு நிறுத்தி விட்டு மைதானத்தில் அமர்ந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தூய்மை பணியாளர் உரிமை மீட்பு கூட்டு இயக்கம் சார்பில் இந்த போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கூறியதாவது:-
நாங்கள் பல ஆண்டுகளாக கோவை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களை நிரந்த பணியாளர்களாக மாற்ற பலமுறை கோரிக்கை விடுத்தோம்.
இதுவரை மாநகராட்சி எங்களது போராட்டத்திற்கு செவிசாய்க்கவில்லை.
மேலும் எங்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதாது என்று தெரிவித்தும் போராட்டம் நடத்தினோம். அப்போது பேச்சுவார்த்தை நடத்தி ரூ.721 சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் அந்த சம்பளத்தையும் இதுவரை வழங்கவில்லை.
எனவே எங்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவித்த சம்பளமான ரூ.721-யை உடனே வழங்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களாக உள்ள எங்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுவரை எங்களது காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தூய்மை பணியாளர்களின் போராட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தூய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக கோவை மாநகரில் பல இடங்களில் குப்பைகள் தேங்கியுள்ளன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
- சிறுமியின் குடும்பத்தினர் கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு இடம்பெயர்ந்தனர்.
- புகாரின் பேரில் போலீசார் சிறுமியிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் என விசாரணை நடத்தினர்.
கோவை:
கோவை சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் 18 வயது பெண். இவர் கடந்த 2020-ம் ஆண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்தார்.
அப்போது சிறுமிக்கு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பிரவீன் என்ற அரவிந்த் (23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு மாதங்களுக்கு முன்பு பிரவீனுக்கு பிறந்த நாள் என்பதால் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் சொல்வதற்காக சிறுமி சென்றார்.
அப்போது பிரவீன் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதற்கிடையே சிறுமியின் குடும்பத்தினர் கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு இடம்பெயர்ந்தனர். அவர்களுடன் சிறுமியும் சென்றார்.
இந்தநிலையில் சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை பெற்றோர் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்த போது அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து எர்ணாகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் சிறுமியிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் என விசாரணை நடத்தினர். அப்போது பிரவீன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.
சம்பவம் நடந்தது கோவை மாவட்டம் சூலூர் என்பதால் எர்ணாகுளம் போலீசார் இந்த வழக்கை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி 18 வயது சிறுமியை பிறந்த நாளுக்கு அழைத்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த பிரவீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உணவு மற்றும் தண்ணீர் பாதுகாப்பை நிறைவு செய்ய முடியும்
- உங்களுடைய குழு வளர்வதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள்” என தெரிவித்துள்ளார்.
வெள்ளியங்கிரி FPO பெற்றிருக்கும் தேசிய விருதை பாராட்டி எக்ஸ் பக்கத்தில் சத்குரு அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்தில்:-
"விவசாயிகளின் நல்வாழ்வு மற்றும் செழிப்பை அதிகரிப்பதில் உழவர், உற்பத்தியாளர் நிறுவனங்கள் பெரும் பங்காற்றுகின்றன. இந்நிறுவனங்களால் விவசாயத்தின் இறுதி நோக்கமான தேசத்தின் உணவு மற்றும் தண்ணீர் பாதுகாப்பை நிறைவு செய்ய முடியும். உங்களுடைய குழு வளர்வதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள்" என தெரிவித்துள்ளார்.
- சண்டைக் காட்சிகள் அனைத்தும் அருமை
- கண்டிப்பா லியோ 2-ம் பாகம் வரும்னு எதிர்பார்க்கிறோம் என்றனர்.
கோவை.
விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. கோவை மாவட்ட த்தில் பல்வேறு திரையரங்குகளிலும் படம் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் படத்தை பார்த்து கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
மதியம் 12 மணிக்கு முதல் காட்சி முடிந்து ரசிகர்கள் வெளியில் வந்தனர். அவர்கள் லியோ திரைப்படம் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த சஞ்சய் என்பவர் கூறியதாவது:-
தளபதி விஜயின் நடிப்பில் வெளியாகி உள்ள லியோ திரைப்படம் மிகவும் சூப்பராக வந்துள்ளது. படத்தில் விஜயின் நடிப்பு நன்றாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் படத்தை மிகவும் சிறப்பாக இயக்கி உள்ளார். இந்த படம் கட்டயாம் மிகப்பெரிய வெற்றியை அடையும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கரும்புக்கடையை சேர்ந்த ஜனஸா கூறும்போது, லியோ திரைப்படம் படம் வேற லெவல்ல இருக்குது. படத்தில் இட ம்பிடித்துள்ள அனைத்து சண்டை காட்சிகளும் சிறப்பாக இருக்கிறது. சண்டைக்காட்சிகளை ரொம்ப அருமையாக எடுத்துள்ளனர். தளபதினாலே மாஸ் தான். படம் மிகப்பெரிய வெற்றி யடையும் என்றார்.
கோவையை சேர்ந்த சந்துரு கூறுகையில், முதலில் இருந்தே படம் நன்றாக இருக்கிறது. இந்த படத்தின் காட்சிகள் அனைத்தையும் லோகேஷ் பார்த்து பார்த்து எடுத்து இருக்கிறார். அனைத்துமே சிறப்பாக வந்துள்ளனது. சண்டை காட்சிகளும் வேற லெவலில் இருக்கிறது. கண்டிப்பா லியோ 2-ம் பாகம் வரும்னு எதிர்பார்க்கிறோம் என்றார்.
சாய்பாபாகாலனியை சேர்ந்த ரஜித் கூறும்போது, படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. முதல் ஷோ பார்க்கறதுல ரொம்ப சந்தோசம். இந்த லியோ படம் கண்டிப்பா மிகப்பெரிய வெற்றியை அடையும். படத்தில் பாட்டு, சண்டை என எல்லாமே நல்லா அமைந்தி ருக்கிறது என்றார். உக்கடம் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த ஞானசேகரன் கூறியதாவது:-
லியோ படத்துல வரக்கூடிய காட்சிகள் அனைத்தும் மிக அருமையாக இருக்கிறது.
இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தையும் லோகேஷ் கண்டிப்பாக எடுப்பார். படத்தில் விஜய், திரிஷா, அர்ஜூன் என அனைவருமே மிக அருமையாக நடித்துள்ளனர். சண்டைக் காட்சிகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சி.சி.டி.வி கண்காணிப்பு காமிரா அடையாளம் காட்டியது
- சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே பெத்திக்குட்டை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 50). இவர் இதே பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 16-ந்தேதி கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து இருந்தார். அப்போது யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுதொடர்பாக சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதன் ஒருபகுதியாக அங்கிருந்த சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராவில் போலீசார் ஆய்வு செய்து பார்த்தனர். இதில் அடையாளம் தெரியாத ஒருவர் கந்தசாமியின் மோட்டார் சைக்கிளை திருடிச்செல்வது தெரியவந்தது.இந்த நிலையில் சிறுமுகை போலீஸார் அந்த பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்த ரமேஷ்(35) என்பது தெரியவந்தது.
மேலும் அவரிடம் கந்தசாமியின் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. தொட ர்ந்து ரமேஷை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
- போலீசார் பேனர்களை அகற்றி வாகனங்களை பறிமுதல் செய்ததால் ஆவேசம்
- போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு
கருமத்தம்பட்டி,
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று பல்லடம் சட்டமன்ற தொகுதி மற்றும் சூலூர் சட்டமன்ற தொகுதியில் இன்று மாலை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருமத்தம்பட்டி பகுதியில் அவரது நடைபயணம் நடக்கிறது. இதையடுத்து அவரை வரவேற்கும் விதமாக கருமத்தம்பட்டி நகர பா.ஜ.க.வினர் பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட விளம்பர பேனர்கள் வைத்தனர்.
இந்த நிலையில் முறை யான அனுமதி பெறாமலும், நகராட்சி அனுமதியின்றியும் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறி போலீசார் பேனர்களை அகற்றியதுடன், பேனர் ஏற்றி வந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் கரும த்தம்பட்டி நால்ரோட்டில் குவிந்தனர். அவர்கள் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தையல்நாயகி, கரும த்தம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்னம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அவர்கள், போராட்ட த்தில் ஈடுபட்ட பா.ஜ.க வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதையடுத்து போரா ட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போலீசார் தொடர்ந்து போராட்ட த்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படு வீர்கள் என எச்சரிக்கை விடுத்ததை அடுத்து பா.ஜ.கவினர் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலைமறியல் காரணமாக அந்த சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- ஒவ்வொரு வார்டிலும் புகார் மனு பெறும் பெட்டி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்
- புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையாளருக்கு, முன்னாள் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநக ராட்சி அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கோவை,
கோவை மாநகராட்சி கமிஷனராக பிரதாப் என்பவர் இருந்து வந்தார். இவர் அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து கோவை மாநகராட்சி புதிய ஆணையாளராக சிவகுருபிரபாகரன் நியமிக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் இன்று காலை கோவை மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.
அவரை முன்னாள் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகராட்சி அதிகாரிகள் மாநகராட்சி ஆணையாளர் அறைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு கோவை மாநகராட்சியின் முன்னாள் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், புதிய மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
இதனை தொடர்ந்து கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக சிவகுருபிரபாகரன் பொறுப்பு ஏற்றுக்கொண்டு கோப்புகளில் கையெ ழுத்திட்டார். புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையாளருக்கு, முன்னாள் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநக ராட்சி அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எனக்கு 2 வருடம் மாநகராட்சி பணிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. அதனை வைத்து இங்கு பணிகளை மேற்கொள்வேன்.
பொதுமக்கள் என்னிடம் அளிக்க கூடிய கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோவையில் முக்கிய பணிகளான பாதாள சாக்கடை சாலை மேம்படுத்துவது உள்பட பல்வேறு பணிகளையும் மேற்கொள்ள துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை மாநகராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு என்ன பிரச்சினை, அதனை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து சக அதிகாரிகளுடன் ஆலோசித்து அதற்கு உரிய தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு தங்கள் பகுதி பிரச்சினைகளை தெரிவிக்கலாம். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரனிடம், டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் முதல் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும், விதவைகள், முதியவர்கள், திருநங்கைகள் போன்றவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக ஒவ்வொரு வார்டிலும் புகார் மனு பெறும் பெட்டி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்துள்ளார்.






