என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேக்கரி வியாபாரியிடம் பைக் திருடிய வாலிபர் கைது
- சி.சி.டி.வி கண்காணிப்பு காமிரா அடையாளம் காட்டியது
- சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே பெத்திக்குட்டை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 50). இவர் இதே பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 16-ந்தேதி கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து இருந்தார். அப்போது யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுதொடர்பாக சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதன் ஒருபகுதியாக அங்கிருந்த சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராவில் போலீசார் ஆய்வு செய்து பார்த்தனர். இதில் அடையாளம் தெரியாத ஒருவர் கந்தசாமியின் மோட்டார் சைக்கிளை திருடிச்செல்வது தெரியவந்தது.இந்த நிலையில் சிறுமுகை போலீஸார் அந்த பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சேர்ந்த ரமேஷ்(35) என்பது தெரியவந்தது.
மேலும் அவரிடம் கந்தசாமியின் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. தொட ர்ந்து ரமேஷை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.






