என் மலர்
கோயம்புத்தூர்
- கைது செய்யப்பட்ட தாஹா நசீர் கோவையில் உள்ள கார் விற்பனை மற்றும் சர்வீஸ் நிறுவனத்தில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
- கைதான தாஹா நசீரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை பூந்தமல்லி என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
கோவை:
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
இதில் குண்டு வெடிப்பை நிகழ்த்திய ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஜமேஷா முபின் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவையில் பயங்கர நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது.
இந்த வழக்கில் தொடர்புடையதாக தற்போது வரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் போத்தனூர் திருமலை நகர் மதீனா அவென்யூவை சேர்ந்த தாஹா நசீரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
கைது செய்யப்பட்ட தாஹா நசீர் கோவையில் உள்ள கார் விற்பனை மற்றும் சர்வீஸ் நிறுவனத்தில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
இவர் கோவை சங்கமேஸ்வரர் கோவில் முன்பு நடந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு காரணமான ஜமேஷா முபின் மற்றும் முகமது தவுபிக்குடன் சேர்ந்து சதி செய்ததாக என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கார் குண்டு தாக்குதல் நடப்பதற்கு முன்பு ஜமேசா முபினின் வீட்டிற்கு தஹா நசீர், முகமது தவுபிக் ஆகியோர் சென்றதாகவும், அப்போது அவர்கள், பயங்கரவாத செயலை செய்ய சதி செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.
தாஹா நசீரின் டிஜிட்டல் சாதனங்களை ஆய்வு செய்தபோது, அவர் ஐஎஸ் அமைப்பு ஊக்கப்படுத்திய இலக்கியங்களை வைத்திருந்தார் என்பதும், கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பின்னர், குறிப்பிட்ட அடிப்படையிலான செல்போன் செயலியை பயன்படுத்தி சட்ட அமலாக்க முகமைகளின் கவனத்தை தவிர்க்க தடயங்களை மறைக்க முயன்றதும் தெரியவந்துள்ளது.
கைதான தாஹா நசீரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை பூந்தமல்லி என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். தொடர்ந்து அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- பட்டபகலில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேயுள்ள எர்ரப்பட்டி பொதுப்பணித்துறை காலனி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவர் பெங்களூரில் எலக்ட்ரிகல் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வள்ளி (30). இவர் அருகிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களது மேல் மாடியில் மகேஸ்வரி (27) இவரது கணவர் அருண் தம்பதிகள், வாடகை இருந்து வருகின்றனர். இவர்களும் தனியார் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கீழ்வீடு மற்றும் மேல் வீட்டில் உள்ளவர்கள் வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்று விட்டனர். வீட்டில் வேறு்எவரும் இல்லை.
வேலை முடிந்து மீண்டும் மாலை வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது இருவர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் வள்ளி உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் உள்ள லாக்கர் உடைக்கப்பட்டு ரூ.5 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
அதே போல் மேல் மாடியில் குடியிருந்து வரும் மகேஸ்வரி வீட்டில் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு ரூ.6 லட்சம் மதிப்பிலான 13 பவுன் நகைகள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதனை கண்டு இவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து இரு குடும்பத்தினரும் அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவேறு வழக்குகளாக பதிவு செய்து கைரேகை நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவை சேகரித்து அதன் மூலமாக விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
பட்டபகலில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மீனா ஜெயக்குமார் மகன் ஸ்ரீராம் வீடு, முன்னாள் கவுன்சிலர் சாமி வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.
- சிங்காநல்லூர் கள்ளிமடை அருகே உள்ள செந்தில்குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை:
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்கள் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இதை தொடர்ந்து கோவையை சேர்ந்த தி.மு.க. கலை இலக்கிய, பகுத்தறிவு பிரிவு மாநில துணை செயலாளரான மீனா ஜெயக்குமார் வீட்டிலும் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் கோவையில் தி.மு.க. பிரமுகர் மீனா ஜெயக்குமார் வீடு, ஸ்ரீராம் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
மீனா ஜெயக்குமார் மகன் ஸ்ரீராம் வீடு, முன்னாள் கவுன்சிலர் சாமி வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.
இதேபோல் காசா கிராண்ட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
சிங்காநல்லூர் கள்ளிமடை அருகே உள்ள செந்தில்குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை சௌரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்திலும் இன்று 2வது நாளாக சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- விக்னேஸ்வரனுக்கும், அவரது காதலியின் தாயாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
- செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்வர் விக்னேஸ்வரன் (வயது 21). இவர் தனது வீட்டு அருகே வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்தநிலையில் விக்னேஸ்வரனுக்கும், அவரது காதலியின் தாயாருக்கும் இடையே திடீரென பிரச்சினை ஏற்பட்டது. இதனால் காதலியின் தாயார் தனது மகளை விக்னேஸ்வரனுடன் பேசக்கூடாது என கண்டித்தார்.
காதலியும் விக்னேஸ்வரனுடன் பேசாமல் இருந்தார். இதனால் விக்னேஸ்வரன் இரவில் மதுகுடித்து விட்டு காதலியின் வீட்டுக்கு சென்றார். அப்போது விக்னேஸ்வரனுக்கும், அவரது காதலியின் தாயாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஸ்வரன், காதலியின் தாயாரை கத்தியால் குத்தினார்.
வயிறு மற்றும் தோள் பகுதியில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்வது அதன் வாயிலாக தெரியவந்துள்ளது.
- ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கோவை,
கோவையில் கடந்த 2 ஆண்டுகளில் 9,241 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில், இதில் 916 பேர் உயிரிழந்து விட்டனர். இவர்களில் விஷம் குடித்தவர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இறப்புகளுக்கான காரணத்தில், தற்கொலை 13-வது இடத்தில் உள்ளது. உலகளவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை யால் உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார நிறுவ னம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதாவது ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்வது அதன் வாயிலாக தெரியவந்ததுள்ளது.குறிப்பாக 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்டவ ர்கேள அதிகம் தற்கொலை செய்து கொள்வதும் தெரியவந்து ள்ளது.
மன அழுத்தம், குற்றவு ணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, நிதி சிக்கல்கள் உள்ளிட்டவை தற்கொ லைக்கு காரணங்களாக உள்ளன.
கோவை அரசு ஆஸ்பத்தி ரியில் கடந்த ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2022 வரை 5,113 பேர் சிகிச்சை பெற்ற நிலையில் 553 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கி ன்றன.இதில் 31 பேர் தூக்குப்போட்டும், 359 பேர் விஷம் குடித்து, தீக்காயத்தால் 106 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.
நடப்பு ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 4,128 பேர் சிகிச்சை பெற்ற நிலையில், 353 பேர் உயிரிழந்தனர்.
இவர்களில் 7 பேர் தூக்கிட்டும், 248 பேர் விஷம் குடித்தும், 61 பேர் தீக்காயத்தாலும் இறந்துள்ளனர். புள்ளி விபரங்களின் படி விஷம் குடித்தே அதிகமனோர் இறந்துள்ளது தெரியவருகிறது.
இதுகுறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:-
தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனைக்கு ஏராளமானோர் வருகிறார்கள். அவர்களுக்கு மனநலத்துறையினர் கவுன்சிலிங் வழங்குகின்றனர். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகை யில், உயிரிழப்புகள் வெகுவாக குறைந்துள்ளன.
விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதற்கு அவர்கள் எந்த வகையான விஷம் அருந்தினார்கள் என்பது அவர்களது உறவினர்களுக்கே தெரிவதில்லை.இதுதவிர பலர் விஷத்தை மதுவுடன் கலந்து அருந்து வதும் ஒரு காரணமாக உள்ளது.
விஷம் குடித்தவர்களுக்கு சிகிச்சை அளித்தாலும், அது எத்தகைய விஷம் என்பது தெரியாததால், உரிய சிகிச்சை அளிக்க முடிவதில்லை.
அனைத்து பரிசோதனை களையும் மேற்கொண்டு விஷத்தின் தன்மை கண்ட றிந்து, சிகிச்சை அளிக்கும் முன் உயிரிழப்பு ஏற்பட்டு விடுகிறது.
இதுகுறித்த விழிப்புணர்வு இருந்தால் உயிரிழப்பைத் தவிர்க்கலாம். இதை கருத்தில் கொண்டே தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மூதாட்டி பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சியானார்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.
பீளமேடு,
கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் 50 வயது பெண்.
இவர் திருமண தகவல் மையத்தில் மணமகன் தேவை என விளம்பரம் கொடுத்திருந்தார்.
இதை பார்த்த வாலிபர் ஒருவர், மூதாட்டியை தொடர்பு கொண்டு, தனது பெயர் ஹரிஷ் என்றும், வரன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் நான் இது தொடர்பாக உங்களை வீட்டில் வந்து சந்தித்து பேசுகிறேன் என கூறினார். அதன்படி சம்பவத்தன்று, அந்த வாலிபர் மூதாட்டியின் வீட்டிற்கு வந்தார்.
அவர் மூதாட்டியின் உறவினர் ஒருவரின் பெயரை சொல்லி, அவரை எனக்கு நன்றாக தெரியும் என கூறினார். இதை மூதாட்டியும் நம்பி விட்டார்.
பின்னர் அவரை உள்ளே அழைத்து சென்று டீ போட்டு கொடுத்தார். அவரும் வாங்கி குடித்தார். அப்போது மூதாட்டி, நான் மாடியில் துணிகளை காய போட்டுள்ளேன. அதனை எடுத்து வருவதாக கூறி விட்டு மேலே சென்றார்.
சிறிது நேரம் கழித்து கீழே வந்தார். அப்போது, வீட்டிற்குள் இருந்த வாலிபரை காணவில்லை. இதையடுத்து மூதாட்டி வீட்டிற்குள் சென்றார்.
அப்போது அங்கு பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சியானார். உடனே சென்று அதனை பார்த்தார்.
அதில் வைத்திருந்த செயின், கம்மல் உள்பட 7.5 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. மூதாட்டிக்கு, வீட்டிற்கு வந்த வாலிபர் தான் தன்னை ஏமாற்றி பேச்சு கொடுத்து விட்டு, நான் மாடிக்கு சென்றபோது, நகையை எடுத்து கொண்டு ஓடியது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.
- கூட்டத்திற்கு சங்க தலைவர் முத்துப் பாண்டி தலைமை தாங்கினார்.
- கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 40 செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள்.
கோவை,
கோவை சிங்காநல்லூர் நாடார் சங்க மாதாந்திர ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா சிங்காநல்லூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் முத்துப் பாண்டி தலைமை தாங்கினார்.
கவுரவ தலைவர் சங்கரலிங்கம், செயலாளர் வின்சென்ட், பொருளாளர் விநாயகம் ஆகியோர் வரவேற்று பேசினர். மேலும் துணைத் தலைவர்கள் நாராயண, குணசிங், செல்வகுமார், உச்சித ராஜா, செல்வன், பென்னியமீன் ஜெபராஜ், பிரின்ஸ், கொள்கை பரப்புச் செயலாளர்கள் செல்வன், ஜானி டேனியல் ராஜ், ராஜ சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 40 செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு மற்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் வாழ்த்து கூறினர்.
மேலும் சிங்காநல்லூர் நாடார் சங்கத்திற்கு அதிக உறுப்பினர்கள் சேர்த்து பலப்படுத்துவது, மற்றும் உறுப்பினர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் பொது மக்களுக்கு அவதி தரும் எஸ்.ஐ .எச். எஸ். காலனி ெரயில்வே மேம்பாலத்தை உடனடியாக முடித்து தர வேண்டும், மேலும் சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் வழியில் உள்ள நொய்யல் ஆற்று பாலத்தின் மீது கட்டப்படும் உயர்மட்ட பாலத்தை விரைந்து முடித்து தர வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
- சமீபத்தில் மராட்டிய மாநில உளவுப்பிரிவு போலீசார் பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
- பயங்கரவாத சக்திகள் அசுர வேகத்தில் வளர்வதால் தமிழகத்தில் மேலும் ஒரு என்.ஐ.ஏ. அலுவலகம் திறக்க வேண்டியது கட்டாயம்.
கோவை,
இலங்கையில் கடந்த பிப்ரவரி மாதம் 2-ந் தேதி பாகிஸ்தானை ேசர்ந்த 3 பேரை அந்தநாட்டு போலீசார் பிடித்தனர்.
விசாரணையில் அவர் சட்டவிரோத செயலில் ஈடுபட முயன்றது தெரிய வந்தது.இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், 3 பேரும் தமிழகம் மற்றும் கேரளாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது.
சமீபத்தில் மராட்டிய மாநில உளவுப்பிரிவு போலீசார் பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் பாகிஸ்தானின் லஷ்கர்-இ தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பு, இந்தியாவில், குறிப்பாக தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்த மூளைச்சலவை செய்யப்பட்ட வாலிபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து கள்ளத்தோணி மூலம் தமிழகம், கேரளாவில் ஊடுருவி தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
இதற்காக 2 மாநிலங்களிலும் அவர்கள் ஆட்களை நியமித்துள்ளத கவும், இவர்கள் மூலம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து வருவதும் தெரியவந்தது.
இதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியதாவது:-
பயங்கரவாதிகள் தென்மாநிலங்களை குறி வைத்து செயல்படுவதால், என்.ஐ.ஏ. எனும் அமைப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே சென்னை புரசை வாக்கத்தில் என்.ஐ.ஏ. கிளை அலுவலகம் செயல்படுகிறது. இதையடுத்து கோவையிலும் என்.ஐ.ஏ. அலுவலகம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத சக்திகள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த தமிழகத்தில் மேலும் ஒரு என்.ஐ.ஏ. அலுவலகம் திறக்க வேண்டியது கட்டாயம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி சிவகாமியின் மகளிடம் அவருக்கு மாதம் ரூ.8 ஆயிரம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
- போலீசார் சிவகாமியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
கோவை,
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கோட்டைபாளையத்தை சேர்ந்தவர் சிவசாமி. இவரது மனைவி சிவகாமி (வயது 54). இவர் அவரது நிலத்தை மகள் உஷா என்பவருக்கு ரூ.5 லட்சத்துக்கு குத்தகைக்கு கொடுத்து இருந்தார். இந்தநிலையில் சிவகாமி, வடக்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தனது வாழ்வாதாரத்துக்கு பணம் கொடுக்க வேண்டும் அல்லது நிலத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என மனு அளித்தார்.
மனுவின்படி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி சிவகாமியின் மகளிடம் அவருக்கு மாதம் ரூ.8 ஆயிரம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படி அவரது மகள் ஒரிரு மாதங்கள் மட்டும் பணம் கொடுத்தார். தொடர்ந்து பணம் கொடுக்க அவர் மறுத்து விட்டார்.
பின்னர் சிவகாமி கோவில்பாளையம் இன்ஸ்பெக்டரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் உஷாவை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தன்னால் தொடர்ந்து பணம் தர முடியாது. குத்தகை காலம் முடிந்ததும் நிலத்தை திருப்பி கொடுத்து விடுவதாக கூறினார்.
ஆனால் சிவகாமி தொடர்ந்து போலீஸ் நிலையத்துக்கு சென்று தனது மகளிடம் பணம் வாங்கி கொடுக்கும்படி இன்ஸ்பெக்டரிடம் கேட்டு வந்தார். நேற்று மதியம் அவர் விஷ பாட்டிலுடன் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். போலீசாரிடம் அவர் மகளிடம் பணம் வாங்கி தரவில்லை என்றால் விஷத்தை குடித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினார்.
இதனை பார்த்த போலீசார் அவரிடம் இருந்த விஷ பாட்டிலை பறித்தனர். பின்னர் போலீசார் சிவகாமியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.போலீஸ் நிலையத்துக்கு விஷத்துடன் வந்து பெண் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
- பொதுமக்கள் நகராட்சி தலைவியிடம் மனு அளித்தனர்.
- நவீன எரியூட்டல் மையம் அமைத்தால் குடிநீர் மாசுபடும் என கூறி உள்ளனர்.
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரொட்டிக்கடை பஜார் பகுதியில் சுமார் 500 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அங்கு 1.25 ஏக்கர் அளவில் உள்ள கல்லறை பகுதியில் சுமார் 50 சென்ட் அளவில் வால்பாறை நகராட்சி மூலம் நவீன மயானம் அமைக்க சுமார் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் பணிகள் தொடங்க நகராட்சி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அப்பகுதி மக்கள் நவீன மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வால்பாறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் நகராட்சி தலைவர் அழகு சுந்தரவள்ளியிடம் மனுவை வழங்கிச் சென்றனர். அந்த மனுவில் நவீன எரியூட்டல் மையம் அமைத்தால் குடிநீர் மாசுபடும். அருகில் உள்ள பள்ளி குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவர், புகையால் மலை உச்சி பகுதியில் குடியிருப்புகளில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே நகராட்சி நிர்வாகம் நவீன மின் மயானம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என கூறி உள்ளனர்.
- சம்பவத்தன்று வைரமணி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் சுவிட்சை போட்டார்.
- பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வைரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள சர்க்கார்பதியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி வைரமணி (வயது 36). இவர்கள் மோகன் என்பவரது தோட்டத்தில் 15 ஆண்டுகளாக தங்கி இருந்து விவசாய தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.
சம்பவத்தன்று வைரமணி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் சுவிட்சை போட்டார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த அவரை அவரது கணவர் மீட்டு வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வைரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (24). இவர் பீளமேடு அருகே உள்ள வீரியம்பாளையத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று மழை பெய்து கொண்டு இருந்தது. ஸ்ரீகாந்த் அந்த பகுதியில் உள்ள மின்கம்பம் அருகே சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது அவர் மின் கம்பத்தை தொட்டார். கண்இமைக்கும் நேரத்தில் அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் சம்பவஇடத்திலேயே ஸ்ரீகாந்த் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாணவியின் பரபரப்பு கடிதம் சிக்கியது.
- கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கோட்டைபாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரது மகள் பாலசுகா (வயது 18). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
மகேஷ்குமார் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே மாணவியின் தாய் மில் வேலைக்கு சென்று 2 பெண் குழந்தைகளையும் படிக்க வைத்து வருகிறார்.
சம்பவத்தன்று பாலசுகா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அவரது தாய் அதிர்ச்சியடைந்தார். இந்த தகவல் கிடைத்ததும் கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் திடீர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் என்னால் இதுவரை நடந்த தேர்வுகளை சரியாக எழுதவில்லை. எனது அம்மா கஷ்டப்பட்டு பீஸ் கட்டி எங்களை படிக்க வைத்து வருகிறார்.
ஆனால் என்னால் சரியாக படிக்க முடியவில்லை. தங்கை புவனேஸ்வரியை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதி உள்ளார்.
பின்னர் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






