என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவை அருகே என்ஜினீயரிங் மாணவி திடீர் தற்கொலை
- மாணவியின் பரபரப்பு கடிதம் சிக்கியது.
- கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கோட்டைபாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரது மகள் பாலசுகா (வயது 18). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
மகேஷ்குமார் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே மாணவியின் தாய் மில் வேலைக்கு சென்று 2 பெண் குழந்தைகளையும் படிக்க வைத்து வருகிறார்.
சம்பவத்தன்று பாலசுகா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அவரது தாய் அதிர்ச்சியடைந்தார். இந்த தகவல் கிடைத்ததும் கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் திடீர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் என்னால் இதுவரை நடந்த தேர்வுகளை சரியாக எழுதவில்லை. எனது அம்மா கஷ்டப்பட்டு பீஸ் கட்டி எங்களை படிக்க வைத்து வருகிறார்.
ஆனால் என்னால் சரியாக படிக்க முடியவில்லை. தங்கை புவனேஸ்வரியை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதி உள்ளார்.
பின்னர் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






