search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிங்காநல்லூர்- வெள்ளலூர் சாலையில் நொய்யல் ஆற்று பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்- நாடார் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
    X

    சிங்காநல்லூர்- வெள்ளலூர் சாலையில் நொய்யல் ஆற்று பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்- நாடார் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

    • கூட்டத்திற்கு சங்க தலைவர் முத்துப் பாண்டி தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 40 செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள்.

    கோவை,

    கோவை சிங்காநல்லூர் நாடார் சங்க மாதாந்திர ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா சிங்காநல்லூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் முத்துப் பாண்டி தலைமை தாங்கினார்.

    கவுரவ தலைவர் சங்கரலிங்கம், செயலாளர் வின்சென்ட், பொருளாளர் விநாயகம் ஆகியோர் வரவேற்று பேசினர். மேலும் துணைத் தலைவர்கள் நாராயண, குணசிங், செல்வகுமார், உச்சித ராஜா, செல்வன், பென்னியமீன் ஜெபராஜ், பிரின்ஸ், கொள்கை பரப்புச் செயலாளர்கள் செல்வன், ஜானி டேனியல் ராஜ், ராஜ சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 40 செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு மற்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் வாழ்த்து கூறினர்.

    மேலும் சிங்காநல்லூர் நாடார் சங்கத்திற்கு அதிக உறுப்பினர்கள் சேர்த்து பலப்படுத்துவது, மற்றும் உறுப்பினர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் பொது மக்களுக்கு அவதி தரும் எஸ்.ஐ .எச். எஸ். காலனி ெரயில்வே மேம்பாலத்தை உடனடியாக முடித்து தர வேண்டும், மேலும் சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் வழியில் உள்ள நொய்யல் ஆற்று பாலத்தின் மீது கட்டப்படும் உயர்மட்ட பாலத்தை விரைந்து முடித்து தர வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    Next Story
    ×