என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • அறைகள் ஒவ்வொன்றாக சோதனையிட்டு, ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சோதனை நடைபெற்ற 4 இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கோவை:

    தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களில் தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

    கோவையில் ராமநாதபுரத்தில் உள்ள தி.மு.க கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வீடு, அவரது மகன் ஸ்ரீராம் வீடு, தி.மு.க. நிர்வாகி எஸ்.எம்.சாமி வீடு உள்பட 5 இடங்களில் சோதனை நடந்தது.

    நேற்று 2-வது நாளாக 4 இடங்களில் சோதனை நடந்தது. காலையில் தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது. இன்று 3-வது நாளாக ராமநாதபுரத்தில் உள்ள மீனா ஜெயக்குமாரின் வீடு மற்றும் பீளமேட்டில் உள்ள அவரது மகன் ஸ்ரீராமின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அங்குள்ள அறைகள் ஒவ்வொன்றாக சோதனையிட்டு, ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் கோவை சவுரிபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவன அலுவலகம் மற்றும் கள்ளிமடையில் உள்ள தனியார் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீட்டிலும் சோதனை நடந்தது.

    சோதனை நடைபெற்ற 4 இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராம் வீடு மற்றும் தி.மு.க. பிரமுகர் எஸ்.எம்.சாமி வீடு ஆகிய 2 இடங்களில் மட்டும் சோதனை நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பணிச்சுமையை ஈடுசெய்யும் வகையில் போலீசாருக்கு ஓய்வு
    • 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல்

    கோவை.

    கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில், ஆயுர்வேத மருந்து குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது.

    இதனை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த ஆயுர்வேத மருந்துகள் மற்றும் மருத்துவ செடிகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

    பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி வாரத்திற்கு ஒரு முறை போலீசாருக்கு விடுமுைற அளித்து வருகிறோம்.

    தீபாவளி போன்ற முக்கியமான நேரங்க ளில் சாலைகளில் வாக னங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், கடைத்தெருக்களில் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் ஒரு சில நாட்களில் மட்டும் சில மணி நேரம் காவலர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க இருக்க வாய்ப்புள்ளது. அதனை ஈடு செய்யும் வகையில் போலீசாருக்கு ஓய்வு வழங்கப்படும்.

    மேலும் ஒப்பணக்கார வீதியில், கோவை மாநகர போக்குவரத்து போலீ சாருக்கு குளிர்சாதன வசதியுடன் கூடிய நவீன நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இது மற்ற இடங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    தீபாவளியை முன்னி ட்டு கிராஸ்கட் சாலை, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடக்கும் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் தீபாவளி விற்பனைக்காக கடை உரிமையாளர்கள் இரவில் கூடுதல் நேரம் திறந்து வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் அங்கு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அதற்கான பாதுகாப்பை போலீஸ் வழங்கும் என்று கடை உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளோம்.

    ஓப்பணக்கார வீதியை சுற்றிலும் அதிநவீன முகத்தை துல்லியமாக கண்டறியும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் மெட்டா டேட்டா என்ற புதிய தொழில்நுட்பத்துடனான 110 காமிராக்கள் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பொருப்பட்டுள்ளது.

    அடுத்த கட்டமாக கூடுதலாக 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு இந்த காமிராக்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.இந்த நவீன காமிராக்கள் குற்றங்களை தடுப்பதற்கும் தீபாவளி சமயத்தில் பாதுகாப்பாக பொதுமக்கள் தங்கள் உடைமைகளை எடுத்துச் செல்வதற்கும் வசதியாக இருக்கும்.

    இதுதவிர மக்கள் கூடும் இடஙகளில் கூட்டத்தை கண்காணிப்பதற்காக ஒப்பணக்கார வீதி, கிராஸ் கட் வீதி உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகையையொட்டி கோவை மாநகரில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் திருட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் நான்கு சக்கரம் மற்றும் இருசக்கர வாகனங்களில் அடிக்கடி ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • விருப்பப்பட்டவருடன் செல்கிறேன்-என்னை யாரும் தேட வேண்டாம் என கடிதம்
    • பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை

    கோவை,

    கோவை பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண்.

    இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    அந்த வாலிபருடன் இளம்பெண் அடிக்கடி கணவருக்கு தெரியாமல் செல்போனில் பேசி வந்தார். சம்பவத்தன்று இளம் பெண்ணின் கணவர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். இளம் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மாலையில் வேலை முடிந்து வந்து வீட்டில் பார்த்தபோது இளம்பெண்ணை காணவில்லை. இளம்பெண் வெளியே செல்வதற்கு முன்பு ஒரு கடிதத்தை எழுதி கட்டிலில் வைத்திருந்தார்.

    அதை எடுத்து இளம்பெண்ணின் கணவர் படித்தார். அதில் நான் விருப்பப்பட்ட வாலிபருடன் செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம் என எழுதி இருந்தார்.இதுகுறித்து இளம்பெண்ணின் கணவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கணவரை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • கோவை மாவட்டத்தில் இன்று காலை 10 மணிக்கு சிறப்பு முகாம் தொடங்கியது.
    • மக்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்

    கோவை,

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கி உள்ளன. இதற்காக வரைவுப்பட்டியல் கடந்த 27-ந் தேதி வெளியிடப்பட்டது.

    கோவை மாவட்டத்திலும் வாக்காளர் வரைவுபட்டியல் வெளியிடப்பட்டது. அதில், கோவை மாவட்டத்தில் 14,36,770 ஆண் வாக்காளர்களும், 15,51,665 பெண் வாக்காளர்களும், 569 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் என்று மொத்தம் 30,49,004 பேர் உள்ளனர்.

    அன்றைய தினத்தில் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றன.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தங்களை மேற்கொள்ளும் விதமாக இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அந்த வகையில் கோவை மாவட்டத்தில் இன்று காலை 10 மணிக்கு சிறப்பு முகாம் தொடங்கியது.

    வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் வாக்குசாவடிகளுக்கு சென்று, அங்கு வைக்கப்பட்டுள்ள பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா? இல்லையா என்பதை சரிபார்த்தனர். அப்படி பெயர்கள் விடுபட்டிருந்தால், உரிய விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்தனர். இதேபோல் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்புபவர்கள், திருத்தம் செய்ய விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தை வாங்கி நிரப்பி கொடுத்து விண்ணப்பித்தனர்.

    சிறப்பு முகாமையொட்டி கோவையில் உள்ள அனைத்து வாக்குச்சாவ டிகளிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

    அவர்கள் அங்கு பெயர் சேர்ப்பு, திருத்தம் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

    இந்த முகாமானது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. நாளையும் சிறப்பு முகாம் நடக்கிறது.கோவை  

    • ரேஸ்கோர்ஸ் பகுதியில் தொடங்கி வைத்தார்
    • வாய்ப்பு இல்லாமல் இருப்பவர்களை ஊக்குவிக்கவே இந்த திட்டம் என்று பேச்சு

    கோவை,

    தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டத்தை சென்னையில் இருந்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 8 கிலோ மீட்டர் நடைபயற்சி மேற்கொண்டு காணொலி மூலம் தொட ங்கி வைத்தார்.

    அதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்சில் நடந்த நடைபயிற்சியை தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துச்சாமி கொடியசைத்து ெதாடங்கி வைத்தார்.

    இந்த நடைபயிற்சி ரேஸ்கோர்ஸ், திருச்சி சாலை, வாலாங்குளம் வழியாக சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் ரேஸ்கோர்ஸ் பகுதியை வந்தடைந்தது.

    நடை பயிற்சியை முடிந்த பின்னர் அமைச்சர் முத்து சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இது ஏதோ ஒரு திட்டம் அல்ல. நடக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் வாய்ப்பு இல்லாமல் இருப்பவர்களை ஊக்குவிக்கவே இந்த திட்டம்.

    கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபயிற்சி மேற்கொள் வோர்கள் பெரிய எண்ணி க்கையில் இருந்தாலும் சாதாரண மக்களும் அதில் பங்கேற்று நடப்பதற்கு தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

    அரசு பல்வேறு திட்ட ங்களை செய்திருக்கும் நிலையில் இவை அனைத்துமே மக்கள் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கிடைக்காமல் இரு க்கும் சில பிரச்சனை களை தீர்ப்பதற்காக நடவடி க்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. நடப்போம் நலம் பெறுவோம் என்ற இந்த திட்டத்தை முழுமையாக பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 500 பேர் இதனை பயன்ப டுத்தினால் நிச்சயமாக ஆயிரம் பேர் பயன்படுத்து வதற்கான வாய்ப்புகள் இருக்கும். மற்ற நாட்களிலும் இதனை பயன்படுத்தி கொள்வதில் எந்த தவறும் கிடையாது.

    இந்த நடைபயிற்சிக்கு அரசு சார்பாகவும் போலீஸ் துறை சார்பாகவும் என்னென்ன உதவிகள் தேவையோ அதை செய்வார்கள். மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நடைபயிற்சியில், மாவட்ட கலெக்ட கிராந்திகுமார் பாடி, மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், துணை மேயர் வெற்றி செல்வன், தி.மு.க. மாவட்ட செயலா ளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், இரா.சொ.ராமசாமி மற்றும் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் மாநகர் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை தலைவர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கொள்ளை போன அதே வீட்டில் மீண்டும் கைவரிசை
    • பெண் சத்தம் போட்டதால் தப்பி ஓட்டம்

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குன்னத்தூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி புஷ்பலதா(வயது 45).

    சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவி இருவரும் வீட்டின் கதவுகளை பூட்டி விட்டு அயர்ந்து தூங்கினர். நள்ளிரவு 2.25 மணியளவில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கண் விழித்த புஷ்பலதா ஜன்னல் வழியாக வெளியே எட்டிப்பார்த்தார். அப்போது பக்கத்து வீடுகளில் மின்சாரம் இருந்தது.

    இதன் காரணமாக சந்தேகம் அடைந்த அவர் வீட்டில் உள்ள மின்சார பெட்டியை பார்த்தார். அப்போது அங்கு முகமூடி அணிந்தபடி 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த புஷ்ப லதா திருடன்.... திருடன்.... என சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவ தற்குள் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.

    பின்னர் அவர் வெளியே வந்து பார்த்த போது முகமூடி அணிந்து வந்த 2 வாலிபர்கள் வீட்டின் மின்சாரத்தை துண்டித்து விட்டு கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கொள்ளையடிக்க வந்த வாலிபர்கள் பக்கத்து வீட்டை சேர்ந்த முருகேஷ் என்பவரது வீட்டில் 2 செல்போன்களை திருடி சென்றது தெரிய வந்தது.

    ஏற்கனவே புஷ்பலதா வீட்டில் கடந்த 2017-ம் ஆண்டு இதே போல மர்மநபர்கள் 11 பவுன் தங்க நகைகளை கொள்ளை யடித்து சென்றனர். அந்த வழக்கில் இன்னும் கொள்ளையர்கள் பிடிபடாத நிலையில் தற்போது 2 வாலிபர் கொள்ளையடிக்க வந்துள்ளனர்.

    இது குறித்து புஷ்பலதா அன்னூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் மின்சாரத்தை துண்டித்து கொள்ளையடிக்க வந்த முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • சி.சி.டி.வி கண்காணிப்பு காமிரா காட்டி கொடுத்தது
    • போத்தலூர் போலீசார் விசாரணை

    கோவை.

    கோவை போத்தனூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாணிக்கம் என்பவர் பூசாரியாக உள்ளார்.

    இவர் வழக்கம் போல் கோவிலுக்கு வந்து பூஜை களை முடித்து விட்டு இரவில் கோவில் நடையை அடைத்து சென்றார்.

    மறுநாள் காலை கோவிலை திறக்க வந்த போது, கோவிலின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் சம்பவம் குறித்து, கோவில் தலைவரான சீத்தாராமன் என்பவருக்கு தகவல் கொடுத்தார்.

    அவர் விரைந்து வந்து பார்வையிட்டார். அப்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்து ரூ.5 ஆயிரம் பணம் திருடு போய் இருந்தது.

    இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கோவிலில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில் வாலிபர் ஒருவர் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைவதும், பின்னர் கோவிலில் இருந்து வெளியில் வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதை வைத்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியது, அதே பகுதியை சேர்ந்த யாசர் முசாபட்(28) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • உற்பத்தி செலவு கூட கிடைக்காமல் தவிப்பு
    • காய்கறி விவசாயிகள் வேதனை

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் மொத்த காய்கறி மார்க்கெட்டிற்கு கேரட், முட்டைகோஸ், உருளை கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் உள்ளூர் மட்டுமின்றி நீலகிரி மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் வருகிறது.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களுக்கு காய்கறிகள், உருளைகிழங்கு உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படுகிறது.

    ஊட்டி, பாலாடா, கேத்தி, கோத்தகிரி, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் கேரட் விவசாயம் செய்யப்படுகிறது.

    தற்போது நீலகிரி மாவட்டத்தில் இருந்து மார்க்கெட்டிற்கு கேரட் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கேரட்டின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:-

    கடந்த 3 மாத காலமாகவே கேரட்டின் விலை தொட ர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பு கேரட் விலை அதிகமாக இருந்த தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த ஆண்டும், அதேபோன்று விலை இருக்கும் என்பதால் விவசாயிகள் அதிகமாக கேரட் பயிரிட்டனர்.

    இதனால் விளைச்சல் அதிகமாகி மார்க்கெட்டிற்கு வரத்தும் அதிகமானது. இதன் காரணமாக கேரட்டின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    வழக்கமாக இந்த சமயங்களில் ஒரு கிலோ கேரட் ரூ.30 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படும். ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.8 முதல் ரூ.15 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு கூட கிடைப்பதில்லை.விலை வீழ்ச்சியை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கும் லாபம் இல்லை. வியாபாரிகளுக்கு பெரிதாக லாபம் இல்லை.

    வழக்கமாக 200 டன் வரத்து வரும் நிலையில், 300 முதல் 500 டன் வரை வரத்து வருகிறது. வரத்து குறைந்தால் தான் விலை அதிகரிக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    விவசாயிகள் கூறும் போது, ஏற்றுக்கூலி, இறக்கு கூலி காய்கறி மண்டியில் கமிஷன் என அனைத்தும் போக விவசாயிகளுக்கு கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் முதல் 2 ரூபாய் வரை தான் கிடைக்கிறது. கேரட் அறுவடை செய்து உற்பத்தி செலவு கூட கிடைக்காமல் நஷ்டம் அடைகின்றனர். இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது சிறு, குறு விவசாயிகள் தான் என்றார். இதேபோல் மார்க்கெட்டிற்கு முட்டை கோஸ் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அதன் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    • நள்ளிரவு நேரத்தில் திரண்டு வந்து தாக்கியது
    • சேதமடைந்த வீட்டு உரிமையாளர்களுக்கு நிதிஉதவி

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

    இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், குடியிருப்புக்குள் நுழைந்து, வீடுகளில் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவதுடன், வீட்டையும் ேசதப்படுத்தி வருகிறது.

    வால்பாறை அருகே இஞ்சிபாறை எஸ்டேட் பகுதியில் மாடல் காலனி உள்ளது. இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 9 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன.

    அங்கு சுற்றி திரிந்த காட்டு யானை கூட்டம், கலைச்செல்வி என்பவரின் வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து வீட்டிற்குள் இருந்த பீரோ, டி.வி., கட்டில், உணவுப் பொருட்களை துதிக்கையால் தூக்கி எறிந்து சேதப்படுத்தியது. மேலும் வீட்டின் முன்பு உள்ள செடிகளையும் பிடுங்கி எறிந்தது. வீட்டையும் சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு எழுந்த கலைச்செல்வி மற்றும் குடும்பத்தினர் யானைகள் வெளியில் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் வீட்டின் பின்பகுதியில் உள்ள கழிவறையில் சென்று தஞ்சம் அடைந்து உயிர் தப்பித்தனர். சிறிது நேரம் அங்கேயே யானைகள் சுற்றி திரிந்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்டினர்.

    இதற்கிடையே இது பற்றிய தகவல் கிடைத்ததும் வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் துணைதலைவர் செந்தில்குமார், 15 வது வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன் ஆகியோர் வனத்துறையினர் மற்றும் எஸ்டேட் மேலாளர்களிடம், யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருவிளக்கு அமைக்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.

    மேலும் சேதமடைந்த வீட்டு உரிமையாளர்களுக்கு நிதிஉதவியும் வழங்கினர்.

    • 3 மாதங்களுக்கு முன்பு வெளியே வந்து ஒன்றாக சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
    • போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் நடத்தினர்.

    கோவை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு ஒப்பாணக்கார வீதி, பெரிய கடை வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.

    மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை பறித்து செல்லும் சூழ்நிலை உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கோவை தெலுங்குபாளையம் பிரிவை சேர்ந்தவர் வினோத்(வயது30). சம்பவத்தன்று இவர் பஸ்ஸில் சென்றார்.

    ஒப்பணக்கார வீதி பிரகாசம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பஸ்சில் பயணம் செய்த மர்மநபர் ஒருவர், இவர் வைத்திருந்த பணத்தை எடுத்து தப்பி சென்றார்.

    இதுகுறித்து அவர் பெரியகடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    துணை கமிஷனர் சண்முகம் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் வீரபாண்டி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, உமா, பாமா, ஏட்டுக்கள் கார்த்திக், பூபதி உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தொடர் திருட்டில் ஈடுபட்ட புலியகுளத்தைச் சேர்ந்த அந்தோணி என்ற மண்டை அந்தோணி(59), கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மணிகண்டன்(35), சிங்காநல்லூரை சேர்ந்த விவேகானந்தன் (55) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இவர்களில் அந்தோணி என்ற மண்டை அந்தோணி மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    மேலும் இவர் தனது 17 வயதில் இருந்து தற்போது வரை 40 ஆண்டுகளாக தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    அவரது கூட்டாளிகளான மணிகண்டன், விவேகானந்தன் ஆகியோர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    இவர்கள் ஜெயிலில் நண்பர்கள் ஆனதும், பின்னர் 3 மாதங்களுக்கு முன்பு வெளியே வந்து ஒன்றாக சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    பின்னர் போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் நடத்தினர்.

    • மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் சுகாதாரமற்ற சூழல் ஏற்படுகிறது.
    • மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்ட பொழுது நேரில் வந்து பார்த்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

    கோவை:

    கோவை உக்கடம் 86-வது வார்டு ரேஸ்மா கார்டன் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என கூறி மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தோம்.

    உக்கடம் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணையில் இருந்து தண்ணீர் செல்வதற்கான பாதையில் உடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் அடிக்கடி தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் சுகாதாரமற்ற சூழல் ஏற்படுகிறது. இதனால் உடல் பாதிப்பு ஏற்படுகிறது.

    மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்ட பொழுது நேரில் வந்து பார்த்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது வரை அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடக்காமல் மந்த கதியில் உள்ளது.

    எனவே நிர்வாகம் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், காலதாமதம் செய்வதை கண்டித்தும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • செல்போனில் பேசும் போது அருண்குமார் எனது குடும்பம் மற்றும் சொத்து விபரங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார்.
    • அருண்குமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் 43 வயது இளம்பெண்.

    இவர் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு திருமணமாகி கணவர் உள்ளார். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். இந்தநிலையில் எனக்கும் எனது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து நாங்கள் சட்டப்படி விவாகரத்து பெற்றோம்.

    இதனால் தனியாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறேன்.

    கடந்த மாதம் 12-ந்தேதி நான் தஞ்சாவூர் கோவிலுக்கு சென்றேன். அப்போது எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து நான் சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் எனக்கு உதவிகள் செய்தார். அவருடன் நான் நெருங்கி பழகினேன். அவர் என்னிடம் தஞ்சாவூர் அருகே உள்ள ரெட்டிபாளையத்தை சேர்ந்த அருண்குமார்(வயது42) என கூறினார்.

    மேலும் அவர் மருந்து விற்பனை பிரதிநியாக வேலை பார்ப்பதாக கூறினார். இதனையடுத்து நாங்கள் செல்போன் எண்களை பறிமாற்றிக்கொண்டோம்.

    பின்னர் நான் கோவைக்கு புறப்பட்டு வந்தேன். அதன் பின்பு நாங்கள் செல்போன் மூலமாக அடிக்கடி பேசி பழகி வந்தோம். அப்போது எங்களுக்கு இடையே நெருக்கம் அதிகமானது. நாங்கள் செல்போனில் பேசும் போது அருண்குமார் எனது குடும்பம் மற்றும் சொத்து விபரங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் என்னை பார்க்க வேண்டும் என கூறினார். அதன்பின்னர் அவர் கோவைக்கு புறப்பட்டு வந்தார். அவரை நான் எனது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றேன்.

    அப்போது நாங்கள் 2 பேரும் பலமுறை ஜாலியாக இருந்தோம். இந்த நிலையில் திடீரென அவர், என்னிடம் பணம் கேட்டார். நான் கொடுக்க மறுத்தேன்.

    இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அருண்குமார் என்னை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் பெண்ணிடம் ஜாலியாக இருந்து விட்டு பணம் கேட்டு மிரட்டிய அருண்குமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×