கோவையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய இளம்பெண்

விருப்பப்பட்டவருடன் செல்கிறேன்-என்னை யாரும் தேட வேண்டாம் என கடிதம் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை
கோவையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய இளம்பெண்
Published on

கோவை,

கோவை பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண்.

இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

அந்த வாலிபருடன் இளம்பெண் அடிக்கடி கணவருக்கு தெரியாமல் செல்போனில் பேசி வந்தார். சம்பவத்தன்று இளம் பெண்ணின் கணவர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். இளம் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மாலையில் வேலை முடிந்து வந்து வீட்டில் பார்த்தபோது இளம்பெண்ணை காணவில்லை. இளம்பெண் வெளியே செல்வதற்கு முன்பு ஒரு கடிதத்தை எழுதி கட்டிலில் வைத்திருந்தார்.

அதை எடுத்து இளம்பெண்ணின் கணவர் படித்தார். அதில் நான் விருப்பப்பட்ட வாலிபருடன் செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம் என எழுதி இருந்தார்.இதுகுறித்து இளம்பெண்ணின் கணவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கணவரை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com