என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவையில் 2-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை
- மீனா ஜெயக்குமார் மகன் ஸ்ரீராம் வீடு, முன்னாள் கவுன்சிலர் சாமி வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.
- சிங்காநல்லூர் கள்ளிமடை அருகே உள்ள செந்தில்குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை:
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்கள் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இதை தொடர்ந்து கோவையை சேர்ந்த தி.மு.க. கலை இலக்கிய, பகுத்தறிவு பிரிவு மாநில துணை செயலாளரான மீனா ஜெயக்குமார் வீட்டிலும் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் கோவையில் தி.மு.க. பிரமுகர் மீனா ஜெயக்குமார் வீடு, ஸ்ரீராம் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
மீனா ஜெயக்குமார் மகன் ஸ்ரீராம் வீடு, முன்னாள் கவுன்சிலர் சாமி வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.
இதேபோல் காசா கிராண்ட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
சிங்காநல்லூர் கள்ளிமடை அருகே உள்ள செந்தில்குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை சௌரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்திலும் இன்று 2வது நாளாக சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.






