search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் விரைவில் என்.ஐ.ஏ. கிளை அலுவலகம்- அதிகாரிகள் தகவல்
    X

    கோவையில் விரைவில் என்.ஐ.ஏ. கிளை அலுவலகம்- அதிகாரிகள் தகவல்

    • சமீபத்தில் மராட்டிய மாநில உளவுப்பிரிவு போலீசார் பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
    • பயங்கரவாத சக்திகள் அசுர வேகத்தில் வளர்வதால் தமிழகத்தில் மேலும் ஒரு என்.ஐ.ஏ. அலுவலகம் திறக்க வேண்டியது கட்டாயம்.

    கோவை,

    இலங்கையில் கடந்த பிப்ரவரி மாதம் 2-ந் தேதி பாகிஸ்தானை ேசர்ந்த 3 பேரை அந்தநாட்டு போலீசார் பிடித்தனர்.

    விசாரணையில் அவர் சட்டவிரோத செயலில் ஈடுபட முயன்றது தெரிய வந்தது.இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், 3 பேரும் தமிழகம் மற்றும் கேரளாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது.

    சமீபத்தில் மராட்டிய மாநில உளவுப்பிரிவு போலீசார் பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் பாகிஸ்தானின் லஷ்கர்-இ தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பு, இந்தியாவில், குறிப்பாக தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்த மூளைச்சலவை செய்யப்பட்ட வாலிபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

    இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து கள்ளத்தோணி மூலம் தமிழகம், கேரளாவில் ஊடுருவி தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

    இதற்காக 2 மாநிலங்களிலும் அவர்கள் ஆட்களை நியமித்துள்ளத கவும், இவர்கள் மூலம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து வருவதும் தெரியவந்தது.

    இதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியதாவது:-

    பயங்கரவாதிகள் தென்மாநிலங்களை குறி வைத்து செயல்படுவதால், என்.ஐ.ஏ. எனும் அமைப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

    தமிழகத்தில் ஏற்கனவே சென்னை புரசை வாக்கத்தில் என்.ஐ.ஏ. கிளை அலுவலகம் செயல்படுகிறது. இதையடுத்து கோவையிலும் என்.ஐ.ஏ. அலுவலகம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பயங்கரவாத சக்திகள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த தமிழகத்தில் மேலும் ஒரு என்.ஐ.ஏ. அலுவலகம் திறக்க வேண்டியது கட்டாயம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×