search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கடந்த 2 ஆண்டில் 9,241 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்
    X

    கோவையில் கடந்த 2 ஆண்டில் 9,241 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்

    • ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்வது அதன் வாயிலாக தெரியவந்துள்ளது.
    • ஆய்வில் அதிர்ச்சி தகவல்

    கோவை,

    கோவையில் கடந்த 2 ஆண்டுகளில் 9,241 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில், இதில் 916 பேர் உயிரிழந்து விட்டனர். இவர்களில் விஷம் குடித்தவர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இறப்புகளுக்கான காரணத்தில், தற்கொலை 13-வது இடத்தில் உள்ளது. உலகளவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை யால் உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார நிறுவ னம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    அதாவது ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்வது அதன் வாயிலாக தெரியவந்ததுள்ளது.குறிப்பாக 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்டவ ர்கேள அதிகம் தற்கொலை செய்து கொள்வதும் தெரியவந்து ள்ளது.

    மன அழுத்தம், குற்றவு ணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, நிதி சிக்கல்கள் உள்ளிட்டவை தற்கொ லைக்கு காரணங்களாக உள்ளன.

    கோவை அரசு ஆஸ்பத்தி ரியில் கடந்த ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2022 வரை 5,113 பேர் சிகிச்சை பெற்ற நிலையில் 553 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கி ன்றன.இதில் 31 பேர் தூக்குப்போட்டும், 359 பேர் விஷம் குடித்து, தீக்காயத்தால் 106 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

    நடப்பு ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 4,128 பேர் சிகிச்சை பெற்ற நிலையில், 353 பேர் உயிரிழந்தனர்.

    இவர்களில் 7 பேர் தூக்கிட்டும், 248 பேர் விஷம் குடித்தும், 61 பேர் தீக்காயத்தாலும் இறந்துள்ளனர். புள்ளி விபரங்களின் படி விஷம் குடித்தே அதிகமனோர் இறந்துள்ளது தெரியவருகிறது.

    இதுகுறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:-

    தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனைக்கு ஏராளமானோர் வருகிறார்கள். அவர்களுக்கு மனநலத்துறையினர் கவுன்சிலிங் வழங்குகின்றனர். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகை யில், உயிரிழப்புகள் வெகுவாக குறைந்துள்ளன.

    விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதற்கு அவர்கள் எந்த வகையான விஷம் அருந்தினார்கள் என்பது அவர்களது உறவினர்களுக்கே தெரிவதில்லை.இதுதவிர பலர் விஷத்தை மதுவுடன் கலந்து அருந்து வதும் ஒரு காரணமாக உள்ளது.

    விஷம் குடித்தவர்களுக்கு சிகிச்சை அளித்தாலும், அது எத்தகைய விஷம் என்பது தெரியாததால், உரிய சிகிச்சை அளிக்க முடிவதில்லை.

    அனைத்து பரிசோதனை களையும் மேற்கொண்டு விஷத்தின் தன்மை கண்ட றிந்து, சிகிச்சை அளிக்கும் முன் உயிரிழப்பு ஏற்பட்டு விடுகிறது.

    இதுகுறித்த விழிப்புணர்வு இருந்தால் உயிரிழப்பைத் தவிர்க்கலாம். இதை கருத்தில் கொண்டே தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×