என் மலர்
சென்னை
- மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தவெக சார்பில் மரியாதை.
- ஒப்பற்ற நம் அன்னைத் தமிழை உயிரெனக் காப்போம்.
மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மொழிப்போர் தீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம். ஒப்பற்ற நம் அன்னைத் தமிழை உயிரெனக் காப்போம்.
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்!
வெல்க தமிழ்!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- வீரவணக்கம், வீரவணக்கம்! மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம்!
- மொழிப்போர் வீராங்கனை அன்னை தருமாம்பாளுக்கும் நினைவஞ்சலி செலுத்தினேன்.
மொழிப்போர் வரலாற்றை உணர்த்தும் காணொளி வெளியீடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
வீரவணக்கம், வீரவணக்கம்! மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம்!
1938-ஆம் ஆண்டு மொழிப்போர்க் களத்தின் முதற்கட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த நடராசன் - தாளமுத்து ஆகியோருக்கு மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள அவர்களது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினேன். மொழிப்போர் வீராங்கனை அன்னை தருமாம்பாளுக்கும் நினைவஞ்சலி செலுத்தினேன்.
எழும்பூரில் அமைந்துள்ள தாளமுத்து நடராசன் மாளிகையில் திருவுருவச் சிலைகளையும் திறந்துவைத்தேன்.
மொழிப்போர்களில் உயிர்ப்பலியான மற்ற தியாகியரையும் இந்நாளில் தமிழுணர்ச்சியோடு நினைவுகூர்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நம் மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் 'மொழிப்போர் தியாகிகள் நாள்' இன்று.
- மொழி திணிப்பு எந்தவகையில் வந்தாலும் அதனை சமரசமின்றி எதிர்த்து போராடுவோம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதவது:-
இந்தி மொழி திணிப்பை எதிர்த்து, இறுதி மூச்சு வரை போராடி உயிர்நீத்த நம் மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் 'மொழிப்போர் தியாகிகள் நாள்' இன்று. தமிழ் மொழியின் சிறப்பையும் தமிழ்நாட்டின் தனித்துவ இருமொழிக் கொள்கையையும் ஒருபோதும் கைவிட மாட்டோம். மொழி திணிப்பு எந்தவகையில் வந்தாலும் அதனை சமரசமின்றி எதிர்த்து போராடுவோம் என்று இந்நாளில் உறுதியேற்போம்.
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- அன்னைத் தமிழைக் காத்த தியாகிகளின் நினைவைப் போற்றிடும் நாள் இன்று.
- இந்தித் திணிப்பிற்கு எதிராகப் போராடிய அவர்களின் வழியில் என்றும் நம் மொழியுரிமையைக் காத்து நிற்போம்.
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
எண்ணில்லா போராட்டங்களும், விலை மதிப்பில்லா உயிர்த் தியாகங்களும் செய்து அன்னைத் தமிழைக் காத்த தியாகிகளின் நினைவைப் போற்றிடும் நாள் இன்று. இந்தித் திணிப்பிற்கு எதிராகப் போராடிய அவர்களின் வழியில் என்றும் நம் மொழியுரிமையைக் காத்து நிற்போம்.
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காவல்துறை அதிகாரிகள் 3 பேருக்கு சிறப்புமிக்க குடியரசு தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- காவல் ஆய்வாளர்கள் பாண்டி முத்துலட்சுமி, செந்தில் குமார், ஆனந்தி, சந்திரா, உதவி ஆய்வாளர் முருகனுக்கு விருது அறிவிப்பு.
தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் 3 பேருக்கு சிறப்புமிக்க குடியரசு தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறை கண்காணிப்பாளர் குமரவேலு, துணை ஆணையர் அன்வர் பாஷா, ஐஜி மகேஸ்வரிக்கு குடியரசு தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சிறப்பாக பணியாற்றிய தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 21 அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகைசால் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டிஎஸ்பி தேவராஜன், கமாண்டன்ட் மணிவர்மன், உதவி ஆணையர் ஜான், கூடுதல் ஆணையர் அமுல்தாஸூக்கு மெச்சத்தக்க பணிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎஸ்பி சீனிவாசன், ஆய்வாளர்கள் விஜய், கிருஷ்ணமூர்த்தி, ஜானகி, காளீஸ்வரி, இலக்குமணன், ரகுநாதன், மோகனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல் ஆய்வாளர்கள் பாண்டி முத்துலட்சுமி, செந்தில் குமார், ஆனந்தி, சந்திரா, உதவி ஆய்வாளர் முருகனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
- மொழிப்போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம், வீர வணக்கம் என்று முழக்கமிட்டனர்.
சென்னை:
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மூலகொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடம் நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணியும் நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் பேரணியில் நடந்து சென்று நினைவிடங்களில் வைக்கப்பட்டிருந்த தாளமுத்து, நடராசன், டாக்டர் தருமாள்பாள் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், மாவட்ட செயலாளர்கள் ஆர்.டி.சேகர், மாதவரம் சுதர்சனம், கலாநிதி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஐட்ரீம் மூர்த்தி, எபிநேசர், மேயர் பிரியா, முன்னாள் எம்.எல்.ஏ. க.ரங்கநாதன், புழல் நாராயணன், மாணவர் அணி நிர்வாகிகள் திரளாக சென்று மரியாதை செலுத்தினார்கள்.
மொழிப்போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம், வீர வணக்கம் என்று முழக்கமிட்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கறுப்பு பேண்ட், சட்டை அணிந்து அமைதி ஊர்வலத்தில் பங்கேற்றிருந்தனர்.
இதைத் தொடர்ந்து எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் (தாளமுத்து, நடராசன் மாளிகை வளாகம்) மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசன் சிலைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மலர் தூவியும் வணங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை.
- இபிஎஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அன்னைத் தமிழை காக்க தன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இபிஎஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சங்கத்தில் வளர்ந்து,
சரித்திரங்கள் பல படைத்து,
சீரிளமை கொண்டு விளங்கும்,
நம் உயிருக்கு நேராம்,
செந்தமிழர் தாயாம்,
அன்னைத் தமிழை காக்க
தன்னுயிர் நீத்த
மொழிப்போர் தியாகிகளுக்கு
வீரவணக்கம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மொழிப்போர்த் தியாகிகள் நினைவிடம் நோக்கி முதலமைச்சர் தலைமையில் அமைதிப் பேரணியாக சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
- டாக்டர் எஸ்.தருமாம்பாள் நினைவிடத்தில் முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந்தேதி மொழிப்போர் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று சென்னை மூலக்கொத்தளத்தில் மொழிப்போர்த் தியாகிகள் தாளமுத்து-நடராஜன் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர்த் தியாகிகள் நினைவிடம் நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணியாக சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி கருப்பு உடையில் சென்று மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
மூலக்கொத்தளத்தில் உள்ள டாக்டர் எஸ்.தருமாம்பாள் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
- கிறிஸ்துமஸ் விழாவிற்கு பிறகு எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் விஜய் பங்கேற்கவில்லை.
- சிபிஐ விசாரணை, ஜனநாயகன் சென்சார் பிரச்சனைகளுக்கு இடையே, செயல் வீரர்கள் கூட்டம்.
மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செயல் வீரர்கள் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி அன்று நடந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கு பிறகு 38 நாட்கள் கழித்து அரசியல் பேச விஜய் தயாராக இருக்கிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் விழாவிற்கு பிறகு எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் விஜய் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், சிபிஐ விசாரணை, ஜனநாயகன் சென்சார் பிரச்சனை நீடித்து வரும் நிலையில் ஜனவரி 25ம் தேதி (இன்று) தவெக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
அதன்படி, தவெக தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் செயல் வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில், ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
- சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் நாளை குடியரசு தின விழா நடைபெற உள்ளது.
- விழா மேடையில் ஆளுநர், முதலமைச்சர் அமர்ந்திருக்க, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும்.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் நாளை குடியரசு தின விழா நடைபெற உள்ளது.
காலை 7.52 மணிக்கு விழா மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவார். அணி வணக்கம் ஏற்கும் மேடை அருகே முதலமைச்சரை தலைமைச்செயலாளர் முருகானந்தம் வரவேற்பார்.
காலை 7.54 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மனைவி லட்சுமி ரவியுடன் வருவார். அதைத்தொடர்ந்து, 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி வரவேற்பார்.
பின்னர், தென்னிந்திய பகுதிகளின் ராணுவ மேஜர் ஜெனரல், கடற்படை அதிகாரி, தாம்பரம் வான்படை நிலைய தலைமை அதிகாரி, கடலோர காவல்படை (கிழக்கு) கமாண்டர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை ஆளுநருக்கு சம்பிரதாயப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைப்பார்.
அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைப்பார். அப்போது அந்தப் பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவும். அந்த நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்படும்.
பின்னர் ராணுவ படைப்பிரிவு, கடற்படைப் பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படை பிரிவினர் அணிவகுத்து வந்து ஆளுநருக்கு வணக்கம் செலுத்துவார்கள். அதை அவர் ஏற்றுக்கொள்வார்.
அதன்பின்னர் அணி வகுப்பு மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து பதக்கங்களை வழங்குவார். அதைத்தொடர்ந்து விழா மேடையில் ஆளுநர், முதலமைச்சர் அமர்ந்திருக்க, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் மங்கள இசை ஊர்தி உள்பட பல்வேறு அரசுத் துறைகளின் ஊர்திகள், அரசில் நலத்திட்டங்களை விவரிக்கும் வகையிலான வடிவமைப்புகளுடன் வலம் வரும். அதற்கு முன்னதாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
- சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதலே பெய்ய தொடங்கிய மழை விடிய வடிய பெய்து வருகிறது.
- காலை 10 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை அண்ணாநகர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, பட்டினப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதலே பெய்ய தொடங்கிய மழை விடிய வடிய பெய்து வருகிறது.
இதற்கிடையே, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 23 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூரில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரியலூர், திண்டுக்கல், நீலகிரி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, நாமக்கல், பெரம்பலூரிலும் காலை 10 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், வேலூர், கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது.
- தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந்தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை!
மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது.
இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது.
தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன்.
மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






