என் மலர்
நீங்கள் தேடியது "மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்"
- அன்னைத் தமிழைக் காத்த தியாகிகளின் நினைவைப் போற்றிடும் நாள் இன்று.
- இந்தித் திணிப்பிற்கு எதிராகப் போராடிய அவர்களின் வழியில் என்றும் நம் மொழியுரிமையைக் காத்து நிற்போம்.
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
எண்ணில்லா போராட்டங்களும், விலை மதிப்பில்லா உயிர்த் தியாகங்களும் செய்து அன்னைத் தமிழைக் காத்த தியாகிகளின் நினைவைப் போற்றிடும் நாள் இன்று. இந்தித் திணிப்பிற்கு எதிராகப் போராடிய அவர்களின் வழியில் என்றும் நம் மொழியுரிமையைக் காத்து நிற்போம்.
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
- மொழிப்போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம், வீர வணக்கம் என்று முழக்கமிட்டனர்.
சென்னை:
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மூலகொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடம் நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணியும் நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் பேரணியில் நடந்து சென்று நினைவிடங்களில் வைக்கப்பட்டிருந்த தாளமுத்து, நடராசன், டாக்டர் தருமாள்பாள் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், மாவட்ட செயலாளர்கள் ஆர்.டி.சேகர், மாதவரம் சுதர்சனம், கலாநிதி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஐட்ரீம் மூர்த்தி, எபிநேசர், மேயர் பிரியா, முன்னாள் எம்.எல்.ஏ. க.ரங்கநாதன், புழல் நாராயணன், மாணவர் அணி நிர்வாகிகள் திரளாக சென்று மரியாதை செலுத்தினார்கள்.
மொழிப்போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம், வீர வணக்கம் என்று முழக்கமிட்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கறுப்பு பேண்ட், சட்டை அணிந்து அமைதி ஊர்வலத்தில் பங்கேற்றிருந்தனர்.
இதைத் தொடர்ந்து எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் (தாளமுத்து, நடராசன் மாளிகை வளாகம்) மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசன் சிலைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மலர் தூவியும் வணங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- மொழிப்போர்த் தியாகிகள் நினைவிடம் நோக்கி முதலமைச்சர் தலைமையில் அமைதிப் பேரணியாக சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
- டாக்டர் எஸ்.தருமாம்பாள் நினைவிடத்தில் முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந்தேதி மொழிப்போர் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று சென்னை மூலக்கொத்தளத்தில் மொழிப்போர்த் தியாகிகள் தாளமுத்து-நடராஜன் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர்த் தியாகிகள் நினைவிடம் நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணியாக சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி கருப்பு உடையில் சென்று மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
மூலக்கொத்தளத்தில் உள்ள டாக்டர் எஸ்.தருமாம்பாள் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
- மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது.
- தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந்தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை!
மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது.
இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது.
தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன்.
மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் கந்தன்சாவடியில் வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் பெருங்குடி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது.
- தயாநிதிமாறன் எம்.பி., அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள் அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகரராஜா பங்கேற்கிறார்கள்.
சென்னை:
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.
இதையொட்டி தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நாளை நடத்தப்படுகிறது.
இதையொட்டி ஒவ்வொரு ஊர்களில் பேசுபவர்கள் பட்டியலையும் தி.மு.க. தலைமை வெளியிட்டிருந்தது. அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
திருவள்ளூரில் உள்ள ஐ.சி.எம்.ஆர். கலைஞர் திடலில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் வீர வணக்கநாள் பொதுக்கூட்டத்திற்கு பால் வளத்துறை அமைச்சரும், திருவள்ளூர் மத்திய செயலாளருமான ஆவடி சாமு.நாசர் தலைமை வகிக்கிறார்.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் வரவேற்புரையாற்றுகிறார். மாவட்ட செயலாளர் டி.கே. கோவிந்தராஜன் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. முன்னிலை வகிக்கின்றனர்.
நிகழ்ச்சியில் ஜெகத்ரட்சகன் எம்.பி., கும்மிடிப்பூண்டி வேணு எம்.எல்.ஏ.க.சுந்தரம், இ.ஏ.பி.சிவாஜி, திருத்தணி எம்.பூபதி, ரமேஷ் மூர்த்தி, பிரபு சேகர் உள்பட ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.
இதேபோல் நாளை மாலை ராயபுரத்தில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.
சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் அம்பத்தூர் ஓ.டி. பஸ் நிலையம் அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, பி.கே. சேகர்பாபு, கவிஞர் வீரமுரசு, அம்பத்தூர் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல் எம்.எல்.ஏ. பேசுகிறார்கள்.
தாம்பரம் சண்முகம் சாலை பாரதி திடலில் நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்திற்கு மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா தலைமை வகிக்கிறார். இதில் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட துணை செயலாளர் பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ. பேசுகிறார்கள்.
சென்னை தென்மேற்கு மாவட்டம் சார்பில் பாண்டி பஜாரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பேசுகிறார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மயிலை த.வேலு, தியாகராயநகர் கிழக்கு பகுதி செயலாளர் ஜெ.கருணாநிதி எம்.எல்.ஏ. மேற்கு பகுதி செயலாளர் கே.ஏழுமலை, மாணவரணி அமைப்பாளர் சரவணன் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.
சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் கந்தன்சாவடியில் வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் பெருங்குடி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது.
இதில் தயாநிதிமாறன் எம்.பி., அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள் அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகரராஜா பங்கேற்கிறார்கள்.
- ம.தி.மு.க. சார்பில் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தலைமையில் பேரணியாக சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
- பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி தலைமையில் முருகன், செங்குட்டுவன், பழனிவேல் உள்ளிட்டவர்கள் சென்று மரியாதை செலுத்தினர்.
சென்னை:
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி இன்று சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணி மண்டபத்தில் தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் அவர்களது திருவுருவப் படங்கள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் அங்கு சென்று தியாகிகளை நினைவு கூறும் வகையில் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள் விருகம்பாக்கம் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, அரவிந்த் ரமேஷ், காரம்பாக்கம் கணபதி, செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், இயக்குனர் ஜெயசீலன் ஆகியோரும் உடன் சென்று மரியாதை செலுத்தினார்கள்.
தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்த மூலக்கொத்தளம் வந்தார். அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று தாளமுத்து நடராஜன், தர்மம்மாள் ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலினுடன் கலாநிதி வீராசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி.சேகர், எபிநேசர், தாயகம் கவி, மாவட்ட செயலாளர் இளைய அருணா, மாணவர் அணி செயலாளர் எழிலரசன், பி.டி.பாண்டிச் செல்வம், மண்டல தலைவர் நேதாஜி கணேசன், பகுதி செயலாளர்கள் செந்தில் குமார், சுரேஷ், நிர்வாகிகள் சிவக்குமார், கோவிந்தசாமி, கோபி, தீனதயாளன், வி.வி.ரமேஷ், ஆர்.எம்.டி. ரவீந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
ம.தி.மு.க. சார்பில் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தலைமையில் பேரணியாக சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட செயலாளர்கள் ஜீவன், ராஜேந்திரன், மகேந்திரன் மற்றும் சிக்கந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி தலைமையில் முருகன், செங்குட்டுவன், பழனிவேல் உள்ளிட்டவர்கள் சென்று மரியாதை செலுத்தினர்.
நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் கவுரி சங்கர் தலைமையில் நிர்வாகிகள் பாக்கிய லட்சுமி, ஆனந்தராஜ், கோகுல், சலீம், கார்த்திக், அரிபிரசாத், ஜெகன் உள்ளிட்டவர்கள் சென்று அஞ்சலி செலுத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாளவன் எம்.பி. ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட செயலாளர்கள் இரா.செல்வம், அம்பேத் வளவன் வீர ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல வளசரவாக்கத்தில் மொழிப்போர் தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். எம்.எல்.ஏ.க்கள் காரம்பாக்கம் கணபதி, பிரபாகரராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன், பகுதி செயலாளர்கள் கே.கண்ணன், ராஜா, நிர்வாகிகள் கனிமொழி தனசேகரன், கவுன்சிலர் ரத்னா லோகேஷ், துரை ராஜ், தங்கராஜ், தென்னரசன், ரஞ்சித்குார், வட்ட செயலாளர்கள் கோவிந்த ராஜ், மைக்கேல், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளையொட்டி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
அன்னை தமிழைக் காக்க உயிர்த்தியாகம் செய்த நூற்றாண்டுக்கான மொழிப்போர் ஈகியர்களின் நாள் இந்நாள். இந்த நாளில் அவர்களின் ஈகத்தை போற்றுவோம்.
500-க்கும் மேற்பட்ட ஈகியர்கள் தங்களின் இன்னுயிரை ஈந்து, இந்தியிடமிருந்து மீட்டெடுத்த அன்னை தமிழின் இன்றைய நிலை வேதனை அளிக்கிறது.
ஒருபுறம் இந்தியும், சமஸ்கிருதமும் தமிழ்நாட்டு மக்கள் மீது திணிக்கப்படும் நிலையில், மறுபுறம் தமிழ்நாட்டிலேயே தமிழுக்கு அரியணையும் இல்லை. மணி முடியும் அணிவிக்கப்படவில்லை.
தமிழைக் காக்கும் போராட்டம் என்ற நெடும் பயணத்தின் தொடக்கமாக தாய்மொழி நாளில் நான் தொடங்கவுள்ள 'தமிழைத் தேடி' பயணம் அமையட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- அன்னை தமிழ்மொழியைக் காத்திட தங்கள் இன்னுயிரை ஈந்த மொழிப்போர் தியாகிகளைப் போற்றிடும் வீர வணக்க நாளில் அவர்களை தாய்மொழிப்பற்றோடு நினைவு கூர்ந்து வணங்கிடுவோம்.
மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் என்பதை மறவாமல் அன்னைத் தமிழ் மொழியைக் காத்திட இந்நாளில் உறுதி ஏற்போம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






