என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருவள்ளூரில் பேசுகிறார்
    X

    மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருவள்ளூரில் பேசுகிறார்

    • சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் கந்தன்சாவடியில் வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் பெருங்குடி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது.
    • தயாநிதிமாறன் எம்.பி., அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள் அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகரராஜா பங்கேற்கிறார்கள்.

    சென்னை:

    மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.

    இதையொட்டி தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நாளை நடத்தப்படுகிறது.

    இதையொட்டி ஒவ்வொரு ஊர்களில் பேசுபவர்கள் பட்டியலையும் தி.மு.க. தலைமை வெளியிட்டிருந்தது. அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

    திருவள்ளூரில் உள்ள ஐ.சி.எம்.ஆர். கலைஞர் திடலில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் வீர வணக்கநாள் பொதுக்கூட்டத்திற்கு பால் வளத்துறை அமைச்சரும், திருவள்ளூர் மத்திய செயலாளருமான ஆவடி சாமு.நாசர் தலைமை வகிக்கிறார்.

    திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் வரவேற்புரையாற்றுகிறார். மாவட்ட செயலாளர் டி.கே. கோவிந்தராஜன் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. முன்னிலை வகிக்கின்றனர்.

    நிகழ்ச்சியில் ஜெகத்ரட்சகன் எம்.பி., கும்மிடிப்பூண்டி வேணு எம்.எல்.ஏ.க.சுந்தரம், இ.ஏ.பி.சிவாஜி, திருத்தணி எம்.பூபதி, ரமேஷ் மூர்த்தி, பிரபு சேகர் உள்பட ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

    இதேபோல் நாளை மாலை ராயபுரத்தில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.

    சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் அம்பத்தூர் ஓ.டி. பஸ் நிலையம் அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, பி.கே. சேகர்பாபு, கவிஞர் வீரமுரசு, அம்பத்தூர் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல் எம்.எல்.ஏ. பேசுகிறார்கள்.

    தாம்பரம் சண்முகம் சாலை பாரதி திடலில் நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்திற்கு மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா தலைமை வகிக்கிறார். இதில் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட துணை செயலாளர் பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ. பேசுகிறார்கள்.

    சென்னை தென்மேற்கு மாவட்டம் சார்பில் பாண்டி பஜாரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பேசுகிறார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மயிலை த.வேலு, தியாகராயநகர் கிழக்கு பகுதி செயலாளர் ஜெ.கருணாநிதி எம்.எல்.ஏ. மேற்கு பகுதி செயலாளர் கே.ஏழுமலை, மாணவரணி அமைப்பாளர் சரவணன் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

    சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் கந்தன்சாவடியில் வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் பெருங்குடி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது.

    இதில் தயாநிதிமாறன் எம்.பி., அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள் அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகரராஜா பங்கேற்கிறார்கள்.

    Next Story
    ×