என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு ஆளுநர்"

    • ஆளுநர் மாளிகைகள் 'ராஜ்பவன்' என்று அழைக்கப்படுகிறது.
    • நமது ஆளுநரின் இந்த முயற்சி ராஜ்பவன் வரலாற்றில் ஒரு மைல்கல்.

    சென்னை:

    இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுநர் மாளிகைகள் 'ராஜ் பவன்' என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் யூனியன் பிரதேசங்களில் உள்ள துணை நிலை ஆளுனர்களின் மாளிகை 'ராஜ் நிவாஸ்' என்று அழைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஆளுநர் மாளிகையின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். இந்த பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

    அதில் இந்தியா முழுவதும் உள்ள ராஜ்பவன்கள் 'லோக் பவன்' என்றும், ராஜ் நிவாஸ்கள் 'லோக் நிவாஸ்' என்றும் ஒரே மாதிரியாக பெயர் மாற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதில் 'லோக் பவன்' என்பது தமிழில் 'மக்கள் பவன்' என்று பொருள்படும். இதையடுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் ராஜ் பவன் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர் பாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஆளுநர் மாளிகைகள் 'ராஜ்பவன்' என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஆளுநர்கள் மாநாட்டில் தலைமையேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி 'ராஜ்பவன்' என்பதை 'மக்கள் பவன்' என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    அதை அனைவரும் வரவேற்ற நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகமும் அதை ஏற்று அதிகாரபூர்வமாக 'ராஜ்பவன்' என்பதை இனி 'மக்கள் பவன்' என அனைத்து மாநிலங்களும் மாற்றி அழைக்க உத்தரவிட்டுள்ளது.

    நமது ஆளுநரின் இந்த முயற்சி ராஜ்பவன் வரலாற்றில் ஒரு மைல்கல். அவரது கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசுக்கு நன்றி.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • துணை ஜனாதிபதி நேற்று தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை.
    • நேற்று தொடங்கிய இந்த மாநாடானது இன்றுடன் நிறைவு பெறுகிறது.

    ஊட்டி:

    தமிழ்நாட்டில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் வருடாந்திர மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

    அந்த வகையில் 4-வது ஆண்டாக இந்த ஆண்டுக்கான துணை வேந்தர்கள் மாநாடு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று தொடங்கியது. மாநாட்டை துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.

    தேசிய கல்வி கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    துணை ஜனாதிபதி நேற்று தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை.

    தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், இயக்குனர்கள் பங்கேற்றனர்.

    இன்று 2-வது நாளாக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது.

    இந்த மாநாட்டில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள், இயக்குனர்கள் பங்கேற்றனர்.

    இதில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கல்வி சார் ஒத்துழைப்பு, கற்றலின் சிறப்புகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, ஆராய்ச்சி சிறப்பு அம்சங்கள், திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் திறன் வளர்ச்சி, குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    நேற்று தொடங்கிய இந்த மாநாடானது இன்றுடன் நிறைவு பெறுகிறது.

    • பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகும்.
    • நாட்டின் வளர்ச்சியை வடிவமைப்பதில் பல்கலைக்கழக வேந்தர்கள் முக்கியமானவர்கள்.

    நீலகிரி மாவட்டம் உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது. ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்.

    துணை வேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பேசியதாவது:-

    கல்வி நிறுவனங்களுக்கு சாதகமான அணுகுமுறை அவசியமானது. நாட்டின் வளர்ச்சிக்கு கல்வித்துறை வளர்ச்சி அடைவது என்பது அவசியம். கல்வியால் தான் நான் துணை ஜனாதிபதி பதவிக்கு வந்துள்ளேன். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகும். பயங்கரவாதம் உலகளவில் அச்சுறுத்தலாக உள்ளது. நாட்டின் வளர்ச்சியை எந்த சூழலிலும் தடுக்க முடியாது. நாட்டின் வளர்ச்சியை வடிவமைப்பதில் பல்கலைக்கழக வேந்தர்கள் முக்கியமானவர்கள்.

    பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் முயற்சியை பாராட்டுகிறேன். கல்வி நிலையங்களின் பிரச்சனைகளை அறிந்து அவற்றை களைவதற்கு துணை வேந்தர்கள் மாநாடு உதவும். கவர்னராக பதவியேற்றபோது எடுத்துக்கொண்ட பிரமாணத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தீவிரமாக கடைபிடிக்கிறார்.

    ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் அமைப்பை பாதுகாக்க தீர்க்கத்துடன் செயல்பட்டு வருகிறார். எவ்வித தடையும் இல்லாமல் நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் குடியரசுத் தலைவரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
    • டெல்லி செல்லும் கவர்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் பற்றி ஆலோசனை.

    தமிழ்நாடு மக்கள் மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது.

    கடந்த 12ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த திமுக குழு, 20 நிமிடங்கள் அவருடன் பேசியது.

    பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் குடியரசுத் தலைவரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. இதே போன்று, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாடு அரசுக்கு, கவர்னர் ஆர்.என்.ரவிக்கு மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மீண்டும் 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்றார். டெல்லி செல்லும் கவர்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் பற்றி ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    • தமிழ்நாட்டு மக்கள் பிரதமர் மோடியின் இதயத்தில் வாழ்கிறார்கள்.
    • பிரதமரின் தலைமையில் நாடும், மக்களும் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

    நரேந்திர மோடி இன்று 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்கள் சார்பில் வாழ்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

    இதுகுறித்து ராஜ் பவன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டின் மகிழ்ச்சிகரமான சகோதர, சகோதரிகள் தங்களின் அன்புத் தலைவரும் பிரதமருமான நரேந்திர மோடிக்கு மனமார்ந்த, அன்பான மற்றும் சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வறுமையற்ற, பிணியில்லாத, கல்வியறிவின்மை போக்க, வீடற்றவர்கள் நிலை மாற மற்றும் பாகுபாடுகள் இல்லாத வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்புவதற்காக நரேந்திர மோடி தனது 3வது ஆட்சிப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

    பிரதமருக்கு நாடு முழுவதும் ஒரே குடும்பம் என்பதும், தமிழ்நாட்டு மக்கள் அவரது இதயத்தில் வாழ்கிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். தமிழ் மக்கள் அவரை நேசிக்கிறார்கள்.

    தங்களின் இதயத்தில் பிரதமர் வாழ்கிறார் என்பதை அவர் அறிய வேண்டும் என விரும்புகிறார்கள். பிரதமரின் தலைமையில் நாடும், மக்களும் மிகவும் பாதுகாப்பாக இருப்பதை அவர்கள் அறிவார்கள்.

    கடவுள் அவருக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளைக் கொடுத்து, தேசத்தின் நலனுக்கான அவரது அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை வழங்கட்டும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×