என் மலர்
சென்னை
- 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
சென்னை :
பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இத்தேர்வில் 95.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் வெற்றி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 93.16 சதவீதமும் மாணவர்கள் 96.07 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். எனவே மனம் தளராமல் கடின உழைப்பை மீண்டும் முதலீடாக்கி, புதிய இலக்கை நோக்கிச் செல்ல அனைவருமே தயார் ஆகுங்கள், வெற்றி காணுங்கள்.
வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்லும் நீங்கள், தேர்ந்தெடுக்கும் துறைகளில் பற்பல சாதனைகள் புரிந்து, தலைசிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன்.
விரைவில் சந்திப்போம்.
வெற்றி நிச்சயம்!
இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களை தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் சந்தித்து பரிசு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது.
- பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த 3-ந்தேதி வரை குறைந்து வந்த நிலையில், கடந்த 5-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி பயணிக்க தொடங்கி நேற்று சற்று விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 100-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.25-ம், சவரனுக்கு ரூ.200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 75-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,130-க்கும் சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,040-க்கும் விற்பனையாகிறது.
நேற்று விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
07-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,600
06-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800
05-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,200
04-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040
03-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
07-05-2025- ஒரு கிராம் ரூ.111
06-05-2025- ஒரு கிராம் ரூ.111
05-05-2025- ஒரு கிராம் ரூ.108
04-05-2025- ஒரு கிராம் ரூ.108
03-05-2025- ஒரு கிராம் ரூ.108
- பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
- துணைத்தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணை நாளை வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிட்டார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணைத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜூன் 25-ந்தேதி முதல் துணைத்தேர்வுகள் தொடங்கும் என்றும் துணைத்தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணை நாளை வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவே துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணைத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் மே 14-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். துணைத்தேர்வு எழுதுவதற்கு பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் அரசுத்தேர்வுகள் சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் மே 13 முதல் 17-ந்தேதி வரை விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
- பொதுத்தேர்வு எழுதிய 140 சிறைவாசிகளில் 130 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 93.16 சதவீதமும் மாணவர்கள் 96.07 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் அரியலூர் முதலிடம் பிடித்துள்ளது. அரியலூர் 98.30 சதவீதம், ஈரோடு 96.90 சதவீதம், திருப்பூர் 95.60 சதவீதம், கன்னியாகுமரி 95.10 சதவீதம், கடலூர் 95 சதவீதம்.
பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம் விவரம்: -
அரசு பள்ளிகள் 91.94 சதவீதம், அரசு உதவிபெறும் பள்ளிகள் 95.71 சதவீதம், தனியார் சுயநிதி பள்ளிகள் 98.88 சதவீதம், இருபாலர் பள்ளிகள் 95.30 சதவீதம், பெண்கள் பள்ளி 96.50 சதவீதம், ஆண்கள் பள்ளி 90.14 சதவீதம்.
பொதுத்தேர்வு எழுதிய 140 சிறைவாசிகளில் 130 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
- பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
- தேர்வில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:
பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இத்தேர்வில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பாடவாரியாக தேர்ச்சி விகிதம்:-
தமிழ்- 99.15 சதவீதம், இயற்பியல்- 99.22 சதவீதம், வேதியியல்- 98.99 சதவீதம், உயிரியல்- 99.15 சதவீதம், கணிதம்- 99.16 சதவீதம், தாவரவியல்- 99.35 சதவீதம், விலங்கியல்- 99.51சதவீதம், கணினி அறிவியல்- 99.73 சதவீதம், வணிகவியல்- 98.36 சதவீதம், கணக்குப்பதிவியல்- 97.36சதவீதம், பொருளியல்- 98.17 சதவீதம், கணினி பயன்பாடுகள்- 99,78 சதவீதம், வணிக கணிதம், புள்ளியல்- 98.78 சதவீதம்.
பாடவாரியாக 100-க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள் விவரம்:-
தமிழ்- 135, இயற்பியல்- 1,125, வேதியியல்- 3,181, உயிரியல்- 827, கணிதம்- 3,022, தாவரவியல்- 269, விலங்கியல்-36 , கணினி அறிவியல்-9,536, வணிகவியல்- 1,624, கணக்கு பதிவியல்- 1,240.
ஆங்கிலப் பாடப்பிரிவில் எவரும் முழு மதிப்பெண் எடுக்கவில்லை.
தேர்வு முடிவில் முதல் 5 இடங்கள் பெற்ற மாவட்டங்கள்:-
அரியலூர்- 98.80 சதவீதம், ஈரோடு, 98 சதவீதம், திருப்பூர்-97.50 சதவீதம், கோவை- 97.50 சதவீதம், கன்னியாகுமரி-97 சதவீதம்.
- கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
- 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிட்டார்.
கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 93.16 சதவீதமும் மாணவர்கள் 96.70 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
- பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
- பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம்.
சென்னை:
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிட்டார்.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்களில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம்.
முன்னதாக, நாளை பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒருநாளைக்கு முன்னதாக இன்றே தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இன்றைய முக்கிய செய்திகள்...
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- “இது மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது. தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே” என்பதை மாணவச் செல்வங்களுக்கு அன்போடு தெரிவிக்கிறேன்.
- மாணவச் செல்வங்கள் முன்னேறிக் கொண்டே இருப்பார்கள் எனும் நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் உண்டு.
சென்னை:
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிறது. பொதுத்தேர்வு முடிவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் காலை 9 மணிக்கு வெளியிட உள்ளார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்களில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம்.
இந்த நிலையில், இன்று வெளியாகும் பொதுத்தேர்வு முடிவு மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது. தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்றைய தினம் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுகிறோம்.
முதலமைச்சர் அவர்களின் கூற்றுப்படி "இது மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது. தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே" என்பதை மாணவச் செல்வங்களுக்கு அன்போடு தெரிவிக்கிறேன்.
மதிப்பெண்களை அளவாக கொள்ளாமல், தங்களின் திறமைகள் சார்ந்த துறைகளில் மாணவச் செல்வங்கள் முன்னேறிக் கொண்டே இருப்பார்கள் எனும் நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் உண்டு. மாணவர்களே… உங்கள் ஒவ்வொருவருக்கும் இவ்வுலகில் ஆளுமைமிக்க நாற்காலி காத்துக்கொண்டிக்கிறது. வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
- சிஎஸ்கே-ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.
- ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சி.எஸ்.கே. நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை:
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 12-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
சேப்பாக்கத்தில் நடக்கும் 7-வது ஆட்டம் இதுவாகும். இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.
இன்று காலை 10.15 மணியில் இருந்து www.chennaisuperkings.com என்ற இணைய தளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது.
ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற 12 போட்டிகளில் 3 வெற்றி, 9 தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
- பச்சைப்பொய்யை திமுக சொல்கிறது என்றால், இந்த கொத்தடிமைகள் கோயபல்ஸையே மிஞ்சிவிட்டனர்.
- ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு, இந்த பச்சைப்பொய்யும் சாட்சி.
அதிமுகதான் உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியது என்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 50%-ஆக உயர்த்தும் சட்டத்தை 20.02.2016 அன்று நிறைவேற்றியது மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்ட ஒரு சட்டத்தில் கூட வாய் கூசாமல் பச்சைப்பொய்யை திமுக சொல்கிறது என்றால், இந்த கொத்தடிமைகள் கோயபல்ஸையே மிஞ்சிவிட்டனர்!
பொய்யாலும், போலி விளம்பரத்தாலும் மட்டுமே நடக்கும் இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு, இந்த பச்சைப்பொய்யும் சாட்சி!
நாசமாய்போன நான்காண்டு முடியட்டும் இதோடு!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
- முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், மத்திய அரசின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு இசையமைப்பாளர் இளையராஜா பாரட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர்,"மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி" என்று குறிப்பிட்டுள்ளார்.






