என் மலர்tooltip icon

    சென்னை

    • மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி, சில முக்கிய இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
    • பயிற்சியின்போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எந்த விதமான அவசர கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்படும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்றும் (வியாழக்கிழமை), நேற்று முன்தினமும் (புதன்கிழமை) சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இன்று (வெள்ளிக்கிழமை) சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்பட உள்ளது.

    இந்த ஒத்திகை, நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் சென்னையை அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையம் அலகு-2 ஆகிய இடங்களில் மாலை 4 மணிக்கு நடக்க உள்ளது.

    இந்த பயிற்சியின்போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எந்த விதமான அவசர கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் 23 சங்கங்களை உள்ளடக்கிய சங்கம்.
    • 55 ஆண்டுகள் கடந்து இந்த சங்கம் செயல்பட்டு வருகிறது.

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி அடையாள வேலை நிறுத்தம் தொடர்பாக அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் சென்னை வடபழநியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் 23 சங்கங்களை உள்ளடக்கிய சங்கம்.

    55 ஆண்டுகள் கடந்து இந்த சங்கம் செயல்பட்டு வருகிறது.

    வரும் 14ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த ஃபெப்சி முடிவு செய்துள்ளது.

    தொழிலாளர்களின் வாழ்க்கையை முதலாளிகள் சிலர் அழிக்க முயற்சிக்கும் கொடுமைக்கு எதிராக வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது.

    ஆர்ப்பாட்டம் நடைபெறும் அன்று படப்பிடிப்புகள், Post Production, pre production உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டத்தை திருத்தி புதியபிரிவை சேர்ப்பதற்காக இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
    • மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஆளுநர் ஆர்‌.என்.ரவி ஒப்புதல் வழங்கினார்.

    சென்னை:

    கட்டணத்துடன் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா டிசம்பர் மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்து இருந்தார்.

    தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டத்தை திருத்தி புதியபிரிவை சேர்ப்பதற்காக இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, கல்வி நிறுவனம், சங்கம், குழு மம், யாருடைய பெயரிலாவது அமைக்கப்பட்டுள்ள கழகம் போன்ற நிறுவனங்களின் வளாகங்கள் மைதானங்கள் மற்றும் நுழைவுச் சீட்டு அல்லது சந்தா போன்ற கட்டணங்கள் செலுத்த வேண்டிய இடங்கள் ஆகியவற்றில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சி எதற்கும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் 10 சதவீதம் (அனுமதி கட்டணத்தில்) கேளிக்கை வரி வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த மசோதா கடந்த டிசம்பர் மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் இப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கினார்.

    • சித்திரை முழு நிலவு கூட்டத்தால் வடநெமிலி பஞ்சாயத்து பகுதியில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
    • பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகும் சூழல் இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு தடை.

    மாமல்லபுரம் அருகே வருகிற 11ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து சித்திரை முழு நிலவு பெருவிழாவை நடத்துகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு தடைகேட்டு வடநெமிலி பஞ்சாயத்து தலைவர் பொன்னுரங்கம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அதில், சித்திரை முழு நிலவு கூட்டத்தால் வடநெமிலி பஞ்சாயத்து பகுதியில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகும் சூழல் இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும். அனுமதி வழங்க கூடாது என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி எல்.விக்டோரிய கவுரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் முகிலன், ''கடந்த 5-ந்தேதி நிகழ்ச்சிக்கு 42 நிபந்தனைகள் விதித்து, போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல'' என்று கூறினார்.

    இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, "ஏற்கனவே நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் அனுமதி வழங்க கூடாது என உத்தரவிட முடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்'' என்று உத்தரவிட்டார்.

    • சட்டம் ஒழுங்கை சீரழித்து கேடுகெட்ட அடிமை ஆட்சியை நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி.
    • தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை டி.வி.யில் பார்த்து தெரிந்துகொண்ட எடுபிடி பழனிசாமியின் அடிமை ஆட்சி இதுவல்ல.

    தி.மு.க.வின் 4 ஆண்டு கால ஆட்சியை விமர்சித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டதற்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    * சட்டம் ஒழுங்கை சீரழித்து கேடுகெட்ட அடிமை ஆட்சியை நடத்திய எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. ஆட்சியை குறைசொல்ல அருகதை இல்லை.

    * தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை டி.வி.யில் பார்த்து தெரிந்துகொண்ட எடுபிடி பழனிசாமியின் அடிமை ஆட்சி இதுவல்ல.

    * தி.மு.க. ஆட்சியின் மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்களை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

    • சரியான திசையைத் தேர்ந்தெடுத்து, வாழ்வின் அனைத்து படிகளிலும் சிறக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
    • தேர்ச்சி பெறத் தவறியவர்கள் துவண்டுவிட வேண்டாம்.

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள், உயர்கல்விக்கான விருப்பமிக்க, மற்றும் சரியான திசையைத் தேர்ந்தெடுத்து, வாழ்வின் அனைத்து படிகளிலும் சிறக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

    தேர்ச்சி பெறத் தவறியவர்கள் துவண்டுவிட வேண்டாம்.

    You haven't failed;

    Your success is just

    postponed for a while,

    மீண்டும் நன்றாகப் புரிந்து படித்து,

    துணைத் தேர்வை அணுகுங்கள்;

    நிச்சயம் தேர்ச்சி அடைவீர்கள்!

    நீங்கள் ஒவ்வொருவரும்

    வெற்றியாளர்கள் தான்!

    உங்களுக்கும் எனது Advance வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார். 

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • மேட்டுக்குப்பம், ஏஜிஆர். கார்டன், செல்வலட்சுமி கார்டன், பிருந்தாவன் நகர், எம்ஜிஆர் நகர் மற்றும் பிற பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

    சென்னை:

    சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னையில் நாளை (09.05.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    அதன்படி, பட்டாபிராம் பகுதிகள், சிடிஎச் சாலை, திருவள்ளுவர் நகர், கக்கன்ஜி நகர், சத்திரம், காமராஜபுரம், சோழன் நகர், ஐயப்பன் நகர், விஜிவி நகர், கண்ணப்பாளையம், தனலட்சுமி நகர், விஜிஎன் 2 முதல் 7 வரை, மேல்பாக்கம்.

    மேலும், வள்ளுவர்சாலை, பஜனை கோவில், அரசமரம் சந்திப்பு, ஆனந்தம்நகர், பாரதி சாலை, டி.என்.எச்.பி., ஸ்ரீராம் நகர், சபரி நகர், தமிழ் நகர், குறிஞ்சி நகர், கங்கை அம்மன் கோவில் சாலை, அம்பாள் நகர், ரத்தின வளாகம், பிரகாசம் தெரு, செந்தமிழ் நகர், சாலரங்கம், சத்ரியர் நகர், கொத்தரை நகர், கலசத்தம்மன் கோவில் தெரு, ராயலா நகர், எஸ்ஆர்எம் திருமலை நகர், பெரியார் சாலை, குரு ஹோம்ஸ், நேரு நகர், பொன்னம்மாள் நகர், ராஜீவ் காந்தி நகர், காமராஜர் சாலை, கங்கை அவென்யூ, சாந்தி நகர், மவுன்ட் பூந்தமல்லி சாலை, முகலிவாக்கம் மெயின் ரோடு, கமலா நகர், சுபஸ்ரீ நகர், எம்.கே.எம். நகர், கிருஷ்ணா நகர், ராம்னி கோவில், மாரியம்மன் கோவில், எம்.கே.எம். குருசாமி நகர், சிஆர்ஆர் புரம், காவ்யா கிராண்டன், காசா கிராண்டா, ஆறுமுகம் நகர், திருநகர், கணேஷ் நகர், மணப்பாக்கம் கிராமம், ராமமூர்த்தி அவென்யூ, ஏவி மல்லிஸ் கார்டன், டிரைமேக்ஸ், விவி கோவில் தெரு, பெருமாள் தெரு, ஏஜிஎஸ் காலனி, மேட்டுக்குப்பம், ஏஜிஆர். கார்டன், செல்வலட்சுமி கார்டன், பிருந்தாவன் நகர், எம்ஜிஆர் நகர் மற்றும் பிற பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேர்ச்சி பெற இயலாத மாணவர்களும் துவண்டுவிடாதீர்கள்.
    • நீங்களும் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற்றே தீருவீர்கள்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பள்ளிக்கல்வி நிறைந்து உயர்கல்விக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    நமது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்னதுபோல கல்லூரிக் கனவு - உயர்வுக்குப் படி - சிகரம் தொடு - நான் முதல்வன் என நமது அரசின் திட்டங்கள் அடுத்து உங்களின் ஒவ்வொரு அடியிலும் உடனிருந்து வழிகாட்டும், உதவும்.

    பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்கள் விரும்பிய துறைகளைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும்.

    தேர்ச்சி பெற இயலாத மாணவர்களும் துவண்டுவிடாதீர்கள். நீங்களும் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற்றே தீருவீர்கள். அதற்கான வாய்ப்புகளை நமது அரசு உறுதிசெய்யும்! என்று கூறியுள்ளார். 

    • அமைச்சர் ரகுபதி கனிமவளத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • தி.மு.க. அரசு ஆட்சி அமைத்து 7-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சர்கள் 2 பேர் இலாகாக்களை திடீரென மாற்றி அமைத்து உள்ளார்.

    அதன்படி அமைச்சர் எஸ்.ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை மாற்றப்பட்டு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி அமைச்சர் துரைமுருகன் நீர்வளத்துறையுடன் சட்டத்துறையை சேர்த்து கவனிப்பார். அமைச்சர் துரைமுருகன் வசம் இருந்த கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை (இயற்கை வளத்துறை) அமைச்சர் ரகுபதியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். இதற்கான அறிவிப்பை கவர்னர் மாளிகை இன்று வெளியிட்டது.

    கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அமைச்சரவையை மாற்றி அமைத்த போது பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோரை எடுத்து விட்டு உயர்கல்வித் துறை அமைச்சராக கோவி செழியனை நியமித்தார். செந்தில் பாலாஜியிடம் இருந்த இலாகாக்களை மின்வாரியத்தை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடமும், மதுவிலக்கு ஆயத் தீர்வை இலாகாவை அமைச்சர் முத்துசாமியிடம் பிரித்து கொடுத்து இருந்தார். இப்போது மீண்டும் ரகுபதியிடம் இருந்த இலாகாவை மாற்றி அமைத்து உள்ளார்.

    தி.மு.க. அரசு ஆட்சி அமைத்து 7-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

    • தமிழகத்தில் அரசும், காவல்துறையும் தூங்கிக்கொண்டிருக்கிறது.
    • தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை, அவரவர் தான் அவர்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பு.

    சேலத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * நான் விழித்து கொண்டு சிறப்பாக செயல்படுவது அமைச்சர் ரகுபதியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    * தி.மு.க.வின் கொத்தடிமையாக செயல்படுகிறார் அமைச்சர் ரகுபதி.

    * ரகுபதியை அமைச்சராக்கி அழகு பார்த்தது அ.தி.மு.க.

    * அமைச்சர் ரகுபதி கும்பகர்ண தூக்கத்தில் உள்ளார்.

    * தமிழகத்தில் அரசும், காவல்துறையும் தூங்கிக்கொண்டிருக்கிறது.

    * தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு கெட்டு நாசமாகிவிட்டது.

    * இருசக்கர வாகனத்தை தொலைத்துவிட்டு புகார் கொடுத்த பெண், போலீஸ் ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

    * காவலர் மீது பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார் தொடர்பான வீடியோவை சுட்டிக்காட்டி புகார்.

    * தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை, அவரவர் தான் அவர்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பு.

    * நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் என்ன என்றே தெரியாத முதலமைச்சர்.

    * தி.மு.க. ஆட்சியின் அவலங்களை மக்களிடம் கொண்டு செல்ல அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.
    • கொலைகள் மற்றும் வன்முறைகள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளன.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி 2021 முதல் நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை 'ஸ்டாலின் மாடல் ஆட்சி' என்று ஆளுங்கட்சியினர் புகழ்ந்தாலும், பொதுமக்கள் நிர்வாகத் திறமையற்ற ஆட்சி நிதிப் பற்றாக்குறை, கடன் வாங்குவதில் முதலிடம் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள் கேந்திரமாக மாறிய தமிழ் நாடு, தினசரி கொலைகள் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை, கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    ஸ்டாலின் மாடல் ஆட்சியில் நிர்வாகத்தில் ஒருங்கிணைப்பு இல்லாததால், திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம், உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவை தாமதம் ஆகின்றன. உதாரணமாக, விடியா திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டன என்றும், எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையில் ஒரு சொட்டு நீர்கூட தேங்காமல் வடியும் என்றும், முதலமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர், நகராட்சித் துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், சென்னை மாநகராட்சி மேயர் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேட்டி அளித்தனர். ஆனால், 2021 மற்றும் 2022 ஆண்டில் பெய்த சிறு மழைக்கே சென்னை மக்கள் பாதிக்கப்பட்டதுதான் நிதர்சனமான உண்மை.

    உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்குச்சாவடி முறைகேடுகள், மறு வாக்குப்பதிவு அதிகாரிகள் மிரட்டப்படுதல் போன்றவை அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தன.

    தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. மாநில அரசின் கடன் சுமை அதிகரித்துள்ளது. கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. மத்திய அரசிடமிருந்து நிதி பெறுவதில் தாமதம் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் குறைபாடு ஆகியவை மாநில வளர்ச்சியை பெரிதும் பாதித்துள்ளன. உதாரணமாக, கோயம்பேடு பேருந்து நிலையம் மாற்றம் சுமார் பத்து மாத காலம் சென்னை மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியதை அனைவரும் அறிவார்கள். சென்னை மட்டுமல்ல. வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மெட்ரோ திட்டங்கள் போன்றவை நிதி நெருக்கடியால் தடைபட்டன. அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை என்று வாய்ஜாலம் பேசிய மு.க. ஸ்டாலின், அதில் 50 சதவீதம்கூட கொடுக்க முடியாதபடி பல நிபந்தனைகளை விதித்தார்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றது. தொடர் கொலைகள், ஜாதி மோதல்கள், பாலியல் வன்கொடுமைகள், தனியாக வசிக்கும் முதியோர்கள் குறிவைத்துத் தாக்கப்படுதல், கொலை செய்யப்படுதல் போன்ற சட்ட விரோத சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    காவல் துறையில் சீர்திருத்தங்கள் தேவை என்று மு.க.ஸ்டாலின் கூறினாலும், குற்றங்களைத் தடுப்பதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாத மாநிலமாக, நகரமாக மாற்றியது தான் ஸ்டாலின் மாடல் திமுக அரசின் சாதனை, கடந்த நான்கு ஆண்டுகளாக, போதைப் பொருள் புழக்கம் மற்றும் பயன்பாடு தமிழகத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. சென்னை, கோவை மற்றும் கடலோர மாவட்டங்களில் மெத்தபெட்டமைன், கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் புழக்கம் மற்றும் கடத்தல் அதிக அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களிடையே போதைப் பொருள் விற்பனை மிகவும் அதிகரித்துள்ளது. இவைகளைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று இந்த அரசு வாய்ஜாலம் காட்டினாலும், அனைத்தும் ஏட்டளவிலேயே உள்ளது.

    கொலைகள் மற்றும் வன்முறைகள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக நான், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, வழிப்பறி இவற்றைப் பற்றி சட்டமன்றத்திலும், அறிக்கைகள் வாயிலாகவும் பலமுறை எடுத்துக் கூறியும். இந்த அரசிடம் கடுமையான, உறுதியான நடவடிக்கைகள் எதுவும் இல்லை. குறிப்பாக, 13 ஆண்டுகளுக்குப் பிறகு கள்ளச் சாராய மரணம் இரண்டு முறை நிகழ்ந்தேறியதுதான் ஸ்டாலின் மாடல் அரசின் சாதனை.

    இந்த அரசின் மீது வைத்த ஊழல் குற்றச்சாட்டுகளை, குறிப்பாக அமைச்சர் ஒருவரே அளித்த பேட்டிக்கு இதுவரை எந்தவிதமான மறுப்பையும் ஸ்டாலினால் அளிக்க முடியவில்லை. நான், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஸ்டாலின் மாடல் அரசின் தவறுகளையும், குறைபாடுகளையும் சுட்டிக்காட்டியும், அந்தத் தவறுகளை திருத்திக்கொள்ளக்கூடிய மனப் பக்குவம் இல்லாத நிலையில்தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

    இந்த நான்காண்டு கால ஆட்சியில், அம்மா அவர்களின் நல்லாசியோடு நடைபெற்ற கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத் திட்டங்கள் குறிப்பாக, அத்திக்கடவு-அவினாசி திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், 50 ஆண்டுகால காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு, குடிமராமத்துத் திட்டம், விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேர மின் சப்ளை, 6 புதிய மாவட்டங்களை உருவாக்கியது. அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய மருத்துவக் கல்லூரிகள் உட்பட 17 புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை ஆரம்பித்தது, சுமார் 50 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, தமிழகத்தை தொழில் துறையில் முன்னணி மாநிலமாக மாற்றியது, பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மெட்ரோ நகரங்களில் முதலிடமாக சென்னையை தொடர்ந்து தக்கவைத்தது என்று எங்களது சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இந்த நான்கு ஆண்டுகளில் ஸ்டாலின் மாடல் திமுக அரசு இதுபோல் ஒரு சாதனையை குறிப்பிட்டுக் கூற இயலுமா?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
    • மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல இயங்கும்.

    சென்னை:

    பேரிடா் காலங்களில் வான்வழித் தாக்குதலை எதிா்கொள்வதற்கான பாதுகாப்பு ஒத்திகை, சென்னை துறைமுகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில், சென்னை துறைமுகம், காவல் துறை, கடற்படை, கடலோரக் காவல் படை, விமானப் படை ஆகியவற்றைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

    இதைத் தொடா்ந்து துறைமுகத்தின் கடல் பகுதியில் தாக்குதலை எதிா்கொள்ளும் வகையில் கடலோரக் காவல் படையின் 2 கப்பல்கள் துறைமுகத்துக்கு வெளியே வந்தடைந்தன. வான்வழித் தாக்குதலின்போது, கொள்கலன் மீது தீப்பற்றியது.

    அப்போது தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதர குழுவினா் பொது மக்கள், ஊழியா்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லவும், காணாமல் போனவா்களை அடையாளம் கண்டறியவும், காயமடைந்தவா்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பும் பணியிலும் ஈடுபட்டனா்.

    இதைத் தொடா்ந்து, சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை, மணலியில் உள்ள சென்னை பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் (சி.பி.சி.எல்.) மற்றும் காமராஜா் துறைமுகம், எண்ணூா் ஆகிய இடங்களில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 4 மணிக்கு நடத்தப்பட உள்ளது. இந்தப் பயிற்சியின்போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எவ்விதமான அவசரகால சூழலையும் எதிா்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்படும்.

    மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த ஒத்திகை பயிற்சியில் மாவட்ட அதிகாரிகள், மாநில அதிரடிப்படை, ஊா்க்காவல் படையினா், சென்னை பெருநகர காவல் துறை, தமிழ்நாடு தீயணைப்புப் படையினா், தன்னார்வலா்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் பங்கேற்கவுள்ளன.

    இந்தப் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஆயத்த நிலையை சரிபாா்த்துக்கொள்வதற்கான ஒரு ஒத்திகை மட்டுமே ஆகும். மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல இயங்கும். இந்தப் பயிற்சி குறித்து பொதுமக்கள் எவ்வித பதற்றமோ அல்லது அச்சமோ அடைய தேவையில்லை என தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×