என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பிளஸ்2 தேர்வு முடிவுகள்: அரசு பள்ளி மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் அரியலூர் முதலிடம்
    X

    பிளஸ்2 தேர்வு முடிவுகள்: அரசு பள்ளி மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் அரியலூர் முதலிடம்

    • வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
    • பொதுத்தேர்வு எழுதிய 140 சிறைவாசிகளில் 130 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 93.16 சதவீதமும் மாணவர்கள் 96.07 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    அரசு பள்ளி மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் அரியலூர் முதலிடம் பிடித்துள்ளது. அரியலூர் 98.30 சதவீதம், ஈரோடு 96.90 சதவீதம், திருப்பூர் 95.60 சதவீதம், கன்னியாகுமரி 95.10 சதவீதம், கடலூர் 95 சதவீதம்.

    பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம் விவரம்: -

    அரசு பள்ளிகள் 91.94 சதவீதம், அரசு உதவிபெறும் பள்ளிகள் 95.71 சதவீதம், தனியார் சுயநிதி பள்ளிகள் 98.88 சதவீதம், இருபாலர் பள்ளிகள் 95.30 சதவீதம், பெண்கள் பள்ளி 96.50 சதவீதம், ஆண்கள் பள்ளி 90.14 சதவீதம்.

    பொதுத்தேர்வு எழுதிய 140 சிறைவாசிகளில் 130 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×