என் மலர்
சென்னை
- சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை திரும்புகிறார்.
- 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 17,613 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளன.
ஜெர்மனி, லண்டன் பயணத்தை முடித்து விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை திரும்புகிறார் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தார்.
கடந்த மாதம் 30-ந்தேதி புறப்பட்டு சென்றிருந்த அவர் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளில் முன்னணி தொழில் அதிபர்களை சந்தித்தார்.
அப்போது ரூ.15,516 கோடிக்கு தொழில் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் போடப்பட்டன.
லண்டன் சென்றிருந்தபோது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் தந்தை பெரியார் உருவ படத்தை திறந்து வைத்து பெருமை சேர்த்தார்.
ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து தனது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று லண்டனில் இருந்து சென்னை புறப்பட்டார்.
அவரது விமானம் நாளை காலை 7.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைகிறது. அவருக்கு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்துள்ளார்.
மாவட்டம் முழுவதும் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் விமான நிலைய வாசலில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் வரை பிரமாண்ட வரவேற்பு கொடுக்க உள்ளனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவுடன் பகிர்ந்துள்ளார்.
- குடும்பத்தினரும்- செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்தனர்.
இங்கிலாந்தில் பென்னி குயிக் குடும்பத்தினர் சந்தித்த புகைப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவுடன் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக, பென்னி குயிக் சிலையை அவரது சொந்த ஊரான கேம்பர்ளியில் நிறுவியதற்காக அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்ததாக அவர் கூறினார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
முல்லை பெரியாறு அணையைத் தந்து நம் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களது சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக, அவரது குடும்பத்தினரும்- செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்தனர்.
நேரில் அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றுவோம்.
வாழ்க ஜான் பென்னி குயிக் அவர்களது புகழ்!
இவ்வாறு அவர் கூறினார்.
- 19-ந்தேதி ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
- 20-ந்தேதி அன்று நாமக்கல், பரமத்திவேலூர், 21-ந்தேதி திருச்செங்கோடு, குமார பாளையம் தொகுதிகளிலும் பேசுகிறார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் வகையில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஜூலை மாதம் 7-ந்தேதி கோவையில் சுற்றுப்பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி 23-ந்தேதி தஞ்சையில் முடித்தார். இதன் பின்னர், 2 மற்றும் 3-ம் கட்ட பயணங்களையும் முடித்த அவர் கடந்த 1-ந்தேதி 4-ம் கட்ட பிரசாரத்தை மதுரையில் தொடங்கி மேற்கொண்டு வருகிறார். இந்த பயணம் வருகிற 13-ந்தேதி கோவையில் முடிவடைகிறது.
இந்த நிலையில் வருகிற 17-தேதி முதல் எடப்பாடி பழனிசாமி 5-ம் கட்ட சுற்றுப் பயணத்தை தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் தொடங்குகிறார்.
அன்றைய தினம் பாப்பி ரெட்டிபட்டி, அரூர் தொகுதிகளில் பேசும் அவர் 18-ந் தேதி பாலக்கோடு, பென்னாகரம் சட்டமன்ற தொகுதிகளிலும், 19-ந்தேதி ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
20-ந்தேதி அன்று நாமக்கல், பரமத்திவேலூர், 21-ந்தேதி திருச்செங்கோடு, குமார பாளையம் தொகுதிகளிலும் பேசுகிறார். 22-ந்தேதி அன்று ஓய்வெடுக்கும் எடப்பாடி பழனிசாமி 23-ந்தேதி குன்னூர், ஊட்டி சட்டமன்ற தொகுதிகளிலும் 24-ந்தேதி கூடலூர் தொகுதியிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார்.
25-ந்தேதி வேடசந்தூர், கரூர் தொகுதிகளில் பேசும் எடப்பாடி பழனிசாமி 26-ந்தேதி அன்று அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் தனது 5-ம் கட்ட பயணத்தை நிறைவு செய்கிறார்.
- இ.மெயில் மூலமாக வந்த தகவலையடுத்து பா.ஜ.க. அலுவலகத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள்.
- பா.ஜ.க. அலுவலகத்துக்கு இதுபோன்று தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் வருகிறது.
சென்னை:
சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு இ.மெயில் மூலமாக வந்த தகவலையடுத்து பா.ஜ.க. அலுவலகத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. பா.ஜ.க. அலுவலகத்துக்கு இது போன்று தொடர்ச்சியாக மிரட்டல் வருவது குறிப்பிடத்தக்கது.
- நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்.
- தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை பொறுப்பில் இருந்து நீக்கியதால் தங்களுக்கும் பதவி வேண்டாம் என அவரது ஆதரவாளர்கள் 1,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து கடிதம் மூலம் தலைமைக்கு அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யும், செங்கோட்டையன் ஆதரவாளருமான சத்தியபாமா தனது கட்சி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
* அ.தி.மு.க.வில் எனது பொறுப்பை ராஜினாமா செய்யப் போகிறேன்.
* செங்கோட்டையனுக்கு ஆதரவாக மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்.
* நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்.
* தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினார்.
நேற்று செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வடதமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
- ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய பயணம், லண்டன் மாநகரில் நிறைவுறுகிறது.
- இத்தனை நாளும் என்னை கவனித்துக்கொண்ட புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு என் அன்பை நன்றியாய் நவில்கிறேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
#Germany-யில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய #TNRising பயணம், இலண்டன் மாநகரில், அவர்கள் வாழ்த்தி வழியனுப்ப நிறைவுறுகிறது!
அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்.
இத்தனை நாளும் தங்கள் சகோதரனாய் என்னை கவனித்துக்கொண்ட #TamilDiaspora-விற்கு என் அன்பை நன்றியாய் நவில்கிறேன்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நடவடிக்கைக்கு பல்வேறு கட்சியினரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
- செங்கோட்டையன் ஆதரவாளர்கள், தங்களையும் கட்சிப் பதவில் இருந்து நீக்கக் கோரி இபிஎஸ்-க்கு கடிதம்.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்து இருந்தார். இதனை தொடர்ந்து திண்டுக்கலில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நடவடிக்கைக்கு பல்வேறு கட்சியினரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், செங்கோட்டையன் ஆதரவாளர்கள், தங்களையும் கட்சிப் பதவில் இருந்து நீக்கக் கோரி எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி வருகின்றனர்.
மாவட்ட மகளிரணிச் செயலாளர் சத்தியபாமா, ஐடி பிரிவுச் செயலாளர் செந்தில் குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் அணி இணைச் செயலாளர் அருள் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் கணேஷ் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கடிதம் எழுதியுள்ளனர்.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக ஒன்றிய, நகர, கிளை மற்றும் சார்பு அணிகளைச் சேர்ந்த சுமார் 2,000 நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதே போல் கோபிசெட்டிபாளையம் பகுதி நிர்வாகிகளும் தனித்தனியாக ராஜினாமா கடிதங்களை அனுப்புகின்றனர்.
- பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் செப்டம்பர் 9 முதல் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்.
- ரெயில் பாதை பராமரிப்புப் பணிகள், ரெயில்களின் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இயக்கத்திற்கு மிகவும் அவசியம்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் 9.9.2025 முதல் 19.10.2025 வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும் (Green Line) நீல வழித்தடத்திலும் (Blue Line) தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான ரெயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்தப் பணி மிகவும் அவசியம்.
பராமரிப்பு அட்டவணை மற்றும் மெட்ரோ ரெயில் சேவை மாற்றங்கள் பின்வருமாறு:
• பராமரிப்பு பணி காலம்: 9.9.2025 முதல் 19.10.2025 வரை.
• நேரம்: காலை 5 மணி முதல் 6:30 மணி வரை.
• இந்தக் காலகட்டத்தில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் நேரங்கள்:
• மெட்ரோ ரெயில்கள் காலை 5 மணி முதல் 6:30 மணி வரை வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
• காலை 6:30 மணிக்குப் பிறகு, மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம் போல் எவ்வித மாற்றமும்மின்றி இயங்கும்.
• இந்த மாற்றங்கள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடங்களில் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
பராமரிப்புப் பணிகள் காரணமாக, பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. ரெயில் பாதை பராமரிப்புப் பணிகள், ரெயில்களின் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இயக்கத்திற்கு மிகவும் அவசியம். பயணிகள் இந்த அறிவிப்பைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பராமரிப்புப் பணிகளால் ஏற்படும் சிரமத்திற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருந்துகிறது.
பயணிகள் அனைவரும், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது தகவல்களைத் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உதவிக்கு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உதவி மையத்தை 1860-425-1515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், அல்லது www.chennaimetrorail.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
பாதுகாப்பான மற்றும் திறமையான மெட்ரோ ரெயில் சேவையை உறுதிப்படுத்த அனைத்துப் பயணிகளும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- செங்கோட்டையனின் நேர்மையான எண்ணத்தை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
- திமுகவை வலுவிழக்கச் செய்வதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
அதிமுக மூத்த முன்னோடியும் முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செங்கோட்டையன் மீதான நடவடிக்கை அறிவார்ந்த செயலாகாது என சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சசிகலா மேலும் கூறியதாவது:-
செங்கோட்டையனின் பதவி பறிப்பு சிறுபிள்ளைத்தனமான செயல், இது அதிமுக கட்சி நலனுக்கு உகந்தது அல்ல.
மீண்டும் அதிமுகு ஆட்சி அமைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் நேர்மையான எண்ணத்தை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோடிக்கணக்கான தொண்டர்களின் எண்ணங்களுக்கு நாம் என்ன பதில் தர போகிறோம்.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற சோமசுந்தரத்தை சமாதானப்படுத்தி கட்சிக்கு அழைத்துவர முயற்சித்தவர் ஜெயலலிதா.
திமுகவை வலுவிழக்கச் செய்வதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பதவியில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
- செங்கோட்டையன் பண்ணை வீட்டுக்கு தொண்டர்கள் படையெடுத்து வருகின்றனர்.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்து இருந்தார். இதனை தொடர்ந்து திண்டுக்கலில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
இதைதொடர்ந்து, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
இருப்பினும், பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் தனது பணி தொடரும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கிய நிலையில் செங்கோட்டையன் பண்ணை வீட்டுக்கு தொண்டர்கள் படையெடுத்து வருகின்றனர்.
நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த ஓபிஎஸ், சசிகலா ஆதரவாளர்கள் செங்கோட்டையன் பண்ணை வீட்டிற்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கட்சி பதவி பறிக்கப்பட்ட நிலையில், செங்கோட்டையன் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளார்.
அதன்படி, செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளார்.
அதிமுக ஒன்றிணைய வேண்டுமென நினைப்பவர்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கையை செங்கோட்டையன் தொடங்கினார்.
- ஈரோடு மாவட்ட ஆதரவாளர்கள் 7 பேரையும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
- அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார். இதனை தொடர்ந்து, அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
இதன்பின்னர், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஈரோடு மாவட்ட ஆதரவாளர்கள் 7 பேரையும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
இந்நிலையில், அதிமுகவின் ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், அந்த பொறுப்புக்கு தற்காலிகமாக ஏ.கே.செல்வராஜ் நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஈரோடு புழகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை, மாவட்டக் கழகப் பணிகளை மேற்கொள்வதற்காக, ஏ.கே.செல்வராஜ் (கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக்கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






