என் மலர்
சென்னை
- மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
- போலீசார் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் சமீப காலமாக அரசியல் பிரமுகர்கள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்து மிரட்டல் விடுத்தவர் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கவர்னர் மாளிகை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. தலைமை அலுவலகம், நடிகர் எஸ்.வி.சேகர் இல்லத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் மழை பெய்தது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் மழை பெய்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- 12-வது புரோ கபடி லீக் போட்டி சென்னையில் நடந்து வருகிறது.
- நேற்று நடந்த ஆட்டத்தில் புனேரி பல்தான் அணி வெற்றி பெற்றது.
சென்னை:
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த போட்டியில் புனேரி பல்தான், பெங்களூரு புல்ஸ் இடையிலான ஆட்டம் 29-29 என சமனில் முடிந்தது. தொடர்ந்து
நடந்த டை பிரேக்கரில் புனேரி பல்தான் 6-4 என வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் புனேரி பல்தான் அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. தபாங் டெல்லி 2-வது இடத்திலும், தெலுகு டைட்டன்ஸ் 3-வது இடத்திலும் உள்ளது.
- புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
- பெங்களூரு புல்ஸ் அணியை புனேரி பல்தான் அணி வீழ்த்தியது.
சென்னை:
12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று இரவு நடந்த ஆட்டத்தில் புனேரி பல்தான், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.
இறுதியில், இரு அணிகளும் 29-29 என புள்ளிகள் எடுத்தன. இதனால் டை பிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் புனேரி பல்தான் அணி 6-4 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புனேரி பல்தான் அணி 9-வது வெற்றியைப் பதிவு செய்தது.
- அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
- போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று சோதனை நடத்தினர்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அதில், அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் சிறிது நேரத்தில் அது வெடிக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபற்றி டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து ராயப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.
இதற்கிடையே வடபழனி ஏ.வி. மெய்யப்பன் சாலையில் அமைந்துள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவிலும் வெடிகுண்டு வைத்துள்ளதாக நிர்வாக அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இது பற்றி ஸ்டுடியோ மேலாளர் விஸ்வநாதன் கே.கே. நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று சோதனை நடத்தினர். இதிலும் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
கடந்த சில நாட்களாகவே சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட 10 தூதரகங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. பல்வேறு அரசு, மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் தினமும் வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு கொண்டே இருக்கும் நிலையில் மிரட்டல் விடுப்பவர்களை கண்டுபிடிப்பதற்காக சென்னை மாநகரப் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
- சென்னையை பொறுத்தவரை ஓரளவு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று வலுப்பெற்றது. இது தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி வருகிறது. இன்று இரவு ஒடிசாவில் உள்ள கோபால்பூரில் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அதிகாரி கூறியதாவது:-
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திர கடலோரப் பகுதியில் நிலவுகிறது. இது இன்று இரவு கோபால்பூரில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக வட தமிழகத்தில் 3 நாட்கள் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (3-ந்தேதி) செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
4-ந்தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை ஓரளவு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெரம்பூர், சக்கரபாணி தோட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
- இருவரின் உடல்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது என்ற துயரகரமானச் செய்தியைக்கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், நெம்மேலி கிராமம், சூளேரி காட்டுக்குப்பம் கடற்கரை பகுதியில் கடந்த 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை சுமார் 5 மணியளவில் சென்னை, பெரம்பூர் அகரம் பகுதியில் இருந்து மகேந்திரா வேன் மூலம் சுற்றுலா வந்த 17 நபர்களில் பெரம்பூர், சக்கரபாணி தோட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கி உயிரிழந்தார். மேலும், அவரது 2 மகள்கள் கார்த்திகா (வயது 17) மற்றும் துளசி (வயது 16) ஆகிய இருவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டு 30-ந்தேதி அன்று மேற்படி இருவரின் உடல்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது என்ற துயரகரமானச் செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இம்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நிர்மல் குமார் உதவியாளரிடமும் போலீசார் நீண்ட நேரம் கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர்.
- இருவரும் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
சென்னை:
கரூரில் விஜய் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது தொடர்பாக போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குறிப்பாக தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர்மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்த போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் இருவரும் முன் ஜாமின் கேட்டு ஐகோர்ட்டில் மனு செய்துள்ளனர். நாளை அந்த மனு விசாரணைக்கு வருகிறது. அதற்கு முன்னதாக இன்று இரவுக்குள் அவர்களை கைது செய்ய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இருவரின் நண்பர்கள் வட்டாரத்தில் இன்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். நிர்மல் குமார் உதவியாளரிடமும் போலீசார் நீண்ட நேரம் கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர்.
அதன் அடிப்படையில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் இருவரையும் பிடிப்பதற்கு தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
நேற்று நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் அவர்கள் பங்கேற்கவில்லை. ரகசிய இடத்தில் இருந்தபடி அவர்கள் கட்சி நிர்வாகிகளிடம் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
- மிகச் சிறந்த தனி மனிதர்களை உருவாக்குவது ஆர்.எஸ்.எஸ். உடைய தலையாய கடமை.
- தொலைநோக்கு சமூக பார்வையும் தேச பக்த உணர்வும்தான் இந்த இயக்கத்தின் அடிநாதமாக அமைந்து உள்ளன.
சென்னை:
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவையொட்டி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இன்று உலகத்தின் மிகப் பெரிய தேச பக்த இயக்கமாக ஆர்.எஸ்.எஸ். தனது நூற்றாண்டினை கொண்டாடுகின்றது. மிகச் சிறந்த தனி மனிதர்களை உருவாக்குவது ஆர்.எஸ்.எஸ். உடைய தலையாய கடமை. அதனால்தான் ஆர்.எஸ்.எஸ்.-ன் அத்தனை துணை அமைப்புகளும் பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.
தொலைநோக்கு சமூக பார்வையும் தேச பக்த உணர்வும்தான் இந்த இயக்கத்தின் அடிநாதமாக அமைந்து உள்ளன. அதனால்தான் எத்தனையோ எதிர்ப்புகளுக்கு இடையிலும் சமுதாயம் இந்த இயக்கத்தை மனதார ஏற்றுக் கொண்டிருக்கிறது.
பாரதம் உலகின் உன்னத தேசமாக, உலகத்திற்கு வழிகாட்டுகின்ற தேசமாக உலகின் குருவாக உயரும் நாள் தொலைவில் இல்லை. இந்த வேள்வியில் ஆர்.எஸ்.எஸ்.ன் பங்கு மகத்தானது. அது காலத்தைக் கடந்தும் வெற்றிகரமாக தொடரும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்!
- மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்!
மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர்.
நம் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் RSS இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்! இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி! என்று கூறியுள்ளார்.
- சேமிப்பு கிடங்குகளில் நெல்மூட்டைகள் வைக்க இடவசதி உள்ளதா என்று கேட்டறிந்தார்.
- காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் காணொலி வாயிலாக ஆலோசனையில் இணைந்து இருந்தனர்.
சென்னை:
வடகிழக்கு பருவமழை இந்த மாதம் 20-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல்கொள்முதல் நிலையங்களில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக டெல்டா மாவட்டங்களில் உள்ள கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
நெல்கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக நெல்மூட்டைகள் வைக்கப்பட்டு உள்ளதா? என்று விசாரித்ததுடன் மேற்கொண்டு 'தார்பாய்' தேவைப்படுகிறதா? சேமிப்பு கிடங்குகளில் நெல்மூட்டைகள் வைக்க இடவசதி உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.
மேட்டூர் அணையில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் கடைமடை பகுதி முழுவதும் சென்றடைந்துள்ளதால் குறுவை சாகுபடி விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சருடன் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, டி.ஆர்.பி.ராஜா மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் உள்ள கலெக்டர்கள் காணொலி வாயிலாக ஆலோசனையில் இணைந்து இருந்தனர்.
- தி.மு.க. ஆட்சியில் மொத்தம் 7 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
- 60 சதவீதம் போக்சோ வழக்குகள் விசாரிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 2023-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 6968 ஆக அதிகரித்திருப்பதாகவும், 2023-ம் ஆண்டில் மட்டும் 67 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன் அதி.மு.க. ஆட்சியில் 2020-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 4338 ஆக இருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 2021-ம் ஆண்டில் 6064 ஆகவும், 2022-ம் ஆண்டில் 6580 ஆகவும், 2023-ம் ஆண்டில் 6968 ஆகவும் அதிகரித்திருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுடன் ஒப்பிடும் போது தி.மு.க. ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் குற்றங்களின் எண்ணிக்கை 60.66 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
2023-ம் ஆண்டில் 67 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
2022-ம் ஆண்டில் 81 குழந்தைகள், 2021-ம் ஆண்டில் 69 குழந்தைகள் என தி.மு.க. ஆட்சியில் மொத்தம் 217 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். தி.மு.க. ஆட்சியில் மொத்தம் 7 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு வளர்ச்சியடைந்து விட்டது, சிசுக் கொலைகள் ஒழிக்கப்பட்டு விட்டன என ஆட்சியாளர்கள் பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தி.மு.க. ஆட்சியின் முதல் 3 ஆண்டுகளில் 28 குழந்தைகள் சிசுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு இந்த புள்ளிவிவரங்களின் மூலம் உறுதியாகியிருக்கிறது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்கான தமிழக மாவட்டங்களில் 53 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில், இதுவரை 20 நீதிமன்றங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. அதனால் 60 சதவீதம் போக்சோ வழக்குகள் விசாரிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






