என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னை அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது
    X

    சென்னை அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது

    • தமிழகத்தில் இன்றும் நாளையும் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
    • புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5.30 மணிக்கு மேலும் வலுவிழந்தது.

    வங்கக்கடலில் உருவான 'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    தமிழகத்தில் இன்றும் நாளையும் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் சென்னை அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5.30 மணிக்கு மேலும் வலுவிழந்தது.

    வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×