என் மலர்
நீங்கள் தேடியது "சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்"
- மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை உரிமை தானே தவிர கருணை அல்ல.
- மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை புகைப்படக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி சக்கர நாற்காலி, மூன்று சக்கர வாகனங்களை முதலமைச்சர் வழங்கினார். இதையடுத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* உலக மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி இதயப்பூர்வமான வாழ்த்துகள்.
* உணர்ச்சிகரமான நெகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி, உங்களை இப்படி பார்த்துக்கொண்டிருந்தால் போதும் என தோன்றுகிறது.
* மாற்றுத்திறனாளி தோழர்களுக்கு சம வாய்ப்பு என்பதை நினைவுபடுத்தும் நாள் இது.
* தி.மு.க. ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு, சம உரிமை என்பது உறுதி செய்யப்பட்டது.
* உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
* ஐ.நா. அமைப்பு கூட இந்த நிகழ்ச்சியைப் பார்த்து பெருமைப்படும்.
* பெரும்பாலான மக்கள் தீண்டாமையை கைவிட்டு முற்போக்கு பாதையில் செல்லத் தொடங்கி விட்டனர்.
* கடந்த கால ஆட்சியில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டனர். தகாத வார்த்தையில் அவமரியாதை செய்யப்பட்டனர்.
* மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை உரிமை தானே தவிர கருணை அல்ல.
* மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 60-க்கும் மேற்பட்ட அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
* உள்ளாட்சி அமைப்புகளில் மேலும் 9,000 மாற்றுத்திறனாளிகள் பணி அமர்த்தப்படுவர்.
* விளையாட்டுத்துறையில் மாற்றுத்திறனாளிகள் சாதிப்பதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
* மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கல்வி நிதியாக 22,300 பேருக்கு ரூ.7 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* அரசு பணிகளில் உகந்த பணியிடங்கள் கண்டறியப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் பணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* கலைஞர் ஆட்சியில் தான் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துறை உருவாக்கப்பட்டது.
* மாற்றுத்திறனாளிகள் மக்கள் பிரதிநிதிகளாக மாறி என்ன செய்யப் போகிறார்கள் என சிலர் நினைக்கலாம்.
* மாற்றுத்திறனாளிகளை மக்கள் பிரதிநிதிகளாக மாற்றி இருக்கிறோம்.
* சக்கர நாற்காலியில் பம்பரம் போல் சுழன்று உழைத்தவர் கலைஞர் கருணாநிதி.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாற்றுத்திறனாளிகள் பிறரைச்சாராமல் தன்னம்பிக்கையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இவ்வரசு மேற்கொண்டு வருகின்றது.
- மக்கள் நலனுக்கான கொள்கைகளை தீர்மானித்து முடிவெடுக்கும் அதிகாரத்தையும் மாற்றுத் திறனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வருடமும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படும் டிசம்பர் 3-ம் நாளில், மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் மாநில விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமை மற்றும் சம வாய்ப்புகள் வழங்கி அவர்கள் சமுதாயத்தில் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு ஏற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
ஆண்டுதோறும் இந்நாளில் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் முக்கிய உறுதிமொழி வெளியிடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் அதாவது "மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கிய சமுதாயம் வளர சமூக ஏற்றம் மலரும்" என அறிவித்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டே இவ்வரசும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் எனும் உன்னத கொள்கையின் அடிப்படையில் இல்லம் தேடி உதவி வழங்கும் வகையில், உலக வங்கியின் கடன் உதவி மூலம் செயல்படுத்தப்படும் 'தமிழ்நாடு உரிமைகள் திட்டம்' மூலம் மாற்றுத் திறனாளிகள் பயனடைய பல்வேறு துறைகளின் சேவைகளை ஒருங்கிணைத்து, மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் பகுதிகளிலேயே மறுவாழ்வு சேவைகள் அனைத்தும் கிடைக்கும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாற்றுத்திறனாளிகள் தேவைகளை கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்து, பயனாளிகளுக்கு வயது மற்றும் உடல் நலத்திற்கு ஏற்ற சிகிச்சைகள் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ற நவீன உதவி உபகரணங்களை தன்னிறைவு எய்தும் வகையில் வழங்கி, மாற்றுத்திறனாளிகள் பிறரைச்சாராமல் தன்னம்பிக்கையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இவ்வரசு மேற்கொண்டு வருகின்றது.
மேலும், மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார மேம்பாட்டுக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கியும், அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் நகர்ப்புறம் மற்றும் கிராமங்களில் வீட்டு மனைகள் மற்றும் வீடுகளை ஒதுக்கியும், மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் ஏற்றம் காண சமுதாயத்தை உருவாக்கும் நடவடிக்கைகளையும் இவ்வரசு மேற்கொண்டு வருகிறது.
மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன முறையில் உறுப்பினர்களாக்கும் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் நலனுக்கான கொள்கைகளை தீர்மானித்து முடிவெடுக்கும் அதிகாரத்தையும் மாற்றுத் திறனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக, மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கி, அவர்களின் வாழ்வு மென்மேலும் ஒளிமயமாகத் திகழ நாம் அனைவரும் பாடுபடுவோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- நமது அரசு, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- மாற்றுத்திறனாளிகளின் சமூக, பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
நமது அரசு, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முதல் நடவடிக்கையாக மாற்றுத்திறனாளிகளின் உடல் ரீதியான குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்கவும், சிறப்புக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வழங்கவும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் பிற நலத்திட்டங்களுக்காகவும் வழங்கப்படும் நிதியினை இந்த அரசு உயர்த்திக்கொண்டே வருகிறது.
இதன்மூலம் மாற்றுத்திறனாளிகளின் சமூக, பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகள் முழு பங்கு வகிக்கும் வகையில் பொதுக்கட்டடங்களில் தடையற்ற சூழல் அமைத்தல், நவீன உதவி உபகரணங்கள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, இந்த நாளில் "மாற்றுத்திறனாளிகளுக்கான நிலையான நீடித்த இலக்குகளை அடைந்திடவும், அவர்களின் நலனை பாதுகாக்கவும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என அனைவரும் ஒன்றிணைந்து உறுதி ஏற்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தன்னம்பிக்கையும் உழைப்பும் கொண்டு சமூகத்தில் சுடர்விட்டு ஒளிரும் மாற்றுத்திறனாளித் தோழர்கள் அனைவருக்கும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் வாழ்த்துகள்.
- ஒவ்வொரு துறைகளையும் தனக்கான துறைகளாக மாற்றிக் கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துக்கள்.
சென்னை:
மாற்று திறனாளிகள் தினத்தையொட்டி இன்று தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வலைதள பக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தன்னம்பிக்கையும் உழைப்பும் கொண்டு சமூகத்தில் சுடர்விட்டு ஒளிரும் மாற்றுத்திறனாளித் தோழர்கள் அனைவருக்கும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் வாழ்த்துகள். சமூகச் சமத்துவமும் சுயமரியாதையும் போற்றி, உங்களது வாழ்வு உயர நம் கலைஞர் வழியில் உங்கள் திராவிட மாடல் அரசு தொடர்ந்து பாடுபடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியிருப்பதாவது:-
"சாதிப்பதற்கு மாற்றுத் திறன் தடையல்ல" என்ற தன்னம்பிக்கை வரிகளுக்கு ஏற்ப, தடைகளை தகர்த்தெறிந்து ஒவ்வொரு துறைகளையும் தனக்கான துறைகளாக மாற்றிக் கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உரிமைகளை பேசும் தினமாக நின்றுவிடாமல், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்திலும் சம வாய்ப்பு வழங்கி, ஒவ்வொரு மாற்றுத் திறனாளியும் சமுதாயத்தில் சுயமரியாதையுடன் வாழ எளிதில் அணுகக்கூடிய சமமான உலகத்தை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






