என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • புகாரின் பேரில் செங்கல்பட்டு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    • சாகசம் செய்ய பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    செங்கல்பட்டு:

    சென்னை மறைமலை நகரை சேர்ந்தவர் கோகுல் (வயது21). தனியார் நிறு வனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் 'வீலிங்' சாகசத்தில் ஈடுபட்டார். அவர் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

    இதுகுறித்த புகாரின் பேரில் செங்கல்பட்டு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட கோகுலை கைது செய்தனர். அவர் சாகசம் செய்ய பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    மேலும் இதுபோல் மோட்டார்சைக்கிளில் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் டிரைவிங் லைசென்சை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்கள் நிலவேம்பு குடிநீர் தேவைப்படும் பட்சத்தில் நகராட்சியை தொடர்பு கொண்டு கேட்டுப் பெறலாம்.
    • தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    வண்டலூர்:

    மறைமலை நகர் நகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது, இதைத தொடர்ந்து நிலவேம்பு குடிநீர் நகராட்சியால் தயாரிக்கப்பட்டு பொது மக்களின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்ற வழங்கப்பட்டது. மேலும் நிலவேம்பு கசாயம் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று தொடர்ந்து 5 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் கூறும்போது, பொதுமக்கள் நிலவேம்பு குடிநீர் தேவைப்படும் பட்சத்தில் நகராட்சியை தொடர்பு கொண்டு கேட்டுப் பெறலாம். டெங்கு கொசு உற்பத்தியாகும் நிறுவனங்கள் தொழிற்சாலைகளை கண்டறிந்து அவர்களுக்கு அபராத விதிக்கப்டுகிறது. பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

    • குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் புத்தேரி ஏரியில் கலப்பதாக கூறப்படுகிறது.
    • ஏரி தண்ணீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    தாம்பரம்:

    பல்லாவரம், துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலை அருகே புத்தேரி ஏரி உள்ளது. ஆரம்பத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட இந்த ஏரி தண்ணீர் தற்போது சுற்றி உள்ள பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்திற்காக பராமரிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது பெய்துவரும் மழை காரணமாக புத்தேரி ஏரியில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

    இந்த ஏரியை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் புத்தேரி ஏரியில் கலப்பதாக கூறப்படுகிறது. மேலும் பல்லாவரம், நாகல்கேனி பகுதியை சுற்றி உள்ள லெதர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவு நீர் ஜி.எஸ்.டி. சாலையை கடந்து புத்தேரி ஏரியில் கலந்து வருவதாக கூறப்படுகிறது.

    இதன்காரணமாக கடந்த சில நாட்களாக புத்தேரி ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் இடம் நுரையாக காணப்படுகிறது. இதனை அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்து செல்கிறார்கள்.

    தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத ரசாயனகழிவு நீரும், சுற்றி உள்ள வீடுகளில் இருந்து வரும் கழிவுநீரும் ஏரியில் கலப்பதால் இந்த பிரச்சினை உருவாகி இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    எனவே தாம்பரம் மாநாகராட்சி அதிகாரிகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக ஏரி தண்ணீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    புத்தேரியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் கடந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டு சுமார் ரூ.40 லட்சம் செலவில் மேம்பாடு செய்யப்பட்டது. ஆனால் பொது மக்கள் மற்றும் சிறு வர்த்தக நிறுவனங்கள் ஏரி கரையில் குப்பைகளை கொட்டுகிறார்கள். இந்த ஏரியை சுற்றி வசிப்பவர்களுக்கு பல சுகாதார பிரச்சினைகள் உள்ளது.

    புத்தேரி ஏரியில் இருந்த வெளியேறும் உபரி நீர் கீழ்க்கட்டளை ஏரி, நாராயணபுரம் ஏரி, மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு நில ஏரிக்கும் செல்கிறது. எனவே புத்தேரி ஏரி தண்ணீரை மாசுபடாமல் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, புத்தேரி ஏரியை சுற்றி உள்ள பகுதியில் பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்த பின்னர் ஏரியில் கழிவுநீர் கலப்பது முழுவதும் தடுக்கப்படும். தற்போது ஏரியில் கலந்து வரும் தண்ணீர் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • கோவளம், கல்பாக்கம முகத்துவார பகுதிகளை பொக்லைன் வைத்து மணல்களை தூர்வாரி வைத்துள்ளனர்.
    • மாமல்லபுரம் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால், பக்கிங்காம் கால்வாய் பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    கோவளம், வடநெம்மேலி, கிருஷ்ணன்காரனை, பட்டிபுலம், மாமல்லபுரம், கடம்பாடி, மணமை, கல்பாக்கம் பகுதியில் உள்ள சிறு குளங்கள், ஏரிகள் நிரம்பி உபரிநீர் கால்வாயில் கலப்பதால் நீர்வரத்து வழக்கத்தை விட அதிகமாக வரத்துவங்கி உள்ளது.

    பக்கிங்காம் கால்வாய் வெள்ளம் வேகமாக கடலுக்கு செல்லும் வசதியாக, வருவாய் மற்றும் பொதுப்பணித் துறையினர் கோவளம், கல்பாக்கம முகத்துவார பகுதிகளை பொக்லைன் வைத்து மணல்களை தூர்வாரி வைத்துள்ளனர்.

    அதனால் மழைநீர் வெள்ளம் தற்போது சீறாக கடலில் கலந்து வருகிறது. இன்னும் மழை தொடர்ந்து பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதற்கான கூடுதல் பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கை குறித்து மாமல்லபுரம் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் அண்ணா நகர், பெரியார் தெருவை சேர்ந்தவர் மணி. காவலாளி. இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்றுவரும் மருமகனை பார்க்க வந்தார்.

    பின்னர் இன்று காலை அவர்கள் திரும்பி சென்ற போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த ரூ.50ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை கொட்டுகிறது.
    • கிராமங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வாழை மரங்கள் சாய்ந்தது.

    செங்கல்பட்டு:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை கொட்டுகிறது.

    மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. நெம்மேலி, தேவநேரி, மாமல்லபுரம், வெண்புருஷம், கொக்கிலமேடு, சதுரங்கபட்டினம், புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை., கடம்பாடி, குழிப்பாந்தண்டலம், எச்சூர், திருக்கழுகுன்றம், பெருமாளேரி, மணமை உள்ளிட்ட விவசாய கிராமங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வாழை மரங்கள் சாய்ந்தது.

    மாமல்லபுரம் கல்பாக்கம் சாலையில் 40ஆண்டுகள் பழமையான மரம் வேறுடன் சாய்ந்து விழுந்தது. பேரூராட்சி ஊழியர்கள் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மரத்தை வெட்டி அப்புறபடுத்தினர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பேரிடர் பாதுகாப்பு நடவடிக்கையாக மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகமும், தீயணைப்பு மீட்பு படையினரும் பொக்லைன், ஜெனரேட்டர், மரம் அறுக்கும் எந்திரம் பைப்பர் படகு, உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகளை தயார் நிலையில் வைத்து உள்ளனர்.

    • தீபாவளி தினத்தன்று 7 ஆயிரம் பேர் வந்து இருந்தனர்.
    • வண்டலூர் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை விடுமுறை நாட்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது

    வண்டலூர்:

    வண்டலூர் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, லயன்சபாரி உள்ளிட்டவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து உள்ளன. தினந்தோறும் ஏராளமான பார்வையாளர்கள் வந்து விலங்குகள், பறவைகளை ரசித்து செல்கிறார்கள்.

    இந்தநிலையில் தீபாவளி பண்டிகை தொடர்விடுமுறையையொட்டி வண்டலூர் பூங்காவிற்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. நேற்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்ததால் பூங்காவில் ஏராளமானோர் குடும்பத்துடன் குவிந்தனர். நேற்று மட்டும் சுமார் 13 ஆயிரம் பேர் பூங்காவுக்கு வந்திருந்தனர். இதேபோல் தீபாவளி தினத்தன்று 7 ஆயிரம் பேர் வந்து இருந்தனர். தீபாவளி விடுமுறை கடந்த 2 நாளில் மட்டும் 20 ஆயிரம் பேர் பூங்காவிற்கு வந்து உள்ளனர். இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, தீபாவளி விடுமுறையை ஒட்டி கடந்த 2 நாட்களில் 20 ஆயிரம் பேர் வண்டலூர் பூங்காவிற்கு வந்து இருக்கிறார்கள். லயன்சபாரி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து உள்ளது. ஏராளமானோர் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வண்டலூர் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை விடுமுறை நாட்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார்.

    • போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் 12 இன்ஸ்பெக்டர்கள், 15 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர்.
    • தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து வழக்கம்போல் இருந்தது.

    மதுராந்தகம்:

    தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்த வெளிமாவட்டத்தை சேர்ந்த சுமார் 10 லட்சம் பேர் பஸ், கார், ரெயில்களில் சொந்த ஊர்களுக்கு சென்றனர். சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல 16 ஆயிரம் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதேபோல் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பிவரவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    நேற்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று மாலை முதல் கார் மற்றும் பஸ்களில் சென்னை வரத்தொடங்கினர். ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் சென்னை நோக்க வரத்தொடங்கியதால் நேற்று இரவு முதலே சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தொடங்கியது.

    இந்த போக்குவரத்து நெரிசல் விடிய, விடிய நீடித்தது. செங்கல்பட்டு மாவட்ட தொடக்க எல்லையான மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஏராளமான வாகனங்கள் இரவில் அணிவகுத்து நின்றன. இதையடுத்து வாகனங்களை விரைவாக சென்னை நோக்கி அனுப்புவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வழக்கம்போல் 5 கவுண்டர்களில் செல்லும் வாகனங்கள் கூடுதலாக 3 கவுண்டர்கள் வழியாக அனுப்பப்பட்டன. கூடுதல் கவுண்டர்கள் வழியாக வாகனங்கள் விரைந்து சென்றன. நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் வாகனங்கள் மெதுவாக சென்றன.

    இதேபோல் பரனூர் சுங்கச்சாவடியிலும் இரவு முதலே வாகனங்கள் அணிவகுத்து காத்திருந்தன. அங்கும் கூடுதல் கவுண்டர்கள் வழியாக சென்னைக்குள் அனுப்பப்பட்டன. சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வாகனங்கள் மொத்தமாக செல்வதை தடுக்கும் வகையில் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தி அனுப்பி வைத்தனர். இன்று அதிகாலை வரை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் அணிவகுத்து வந்து கொண்டு இருந்தன.

    சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வெளியூர்களில் இருந்து வந்த பஸ்கள் அனைத்தும் வண்டலூரில் இருந்து மீஞ்சூர் புறவெளி வட்டச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால் தாம்பரம், பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லை. எனினும் வண்டலூர் பகுதியில் ஏராளமான பயணிகள் இறங்கி மாறி சென்றதால் அங்கு கடுமையாகன நெரிசல் ஏற்பட்டது. கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரிசெய்தனர். பயணிகள் செல்வதற்கு மாநகர பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இதனால் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து வழக்கம்போல் இருந்தது.

    கோயம்பேடு நோக்கி வந்த வாகனங்களால் கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் தொடங்கி 100அடி சாலையில் ஈக்காட்டுதாங்கல், அசோக் பில்லர், வடபழனி உள்ளிட்ட முக்கிய சந்திப்பில் அதிகாலை 4மணி முதலே கடும் நெரிசல் ஏற்பட்டது. காலை 6 மணிக்கு மேல் கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் இருந்து வரும் வாகனங்கள், ஆம்னி பஸ்கள், அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு புறப்பட்டு செல்பவர்கள் என ஏராளமானோர் ஒரே நேரத்தில் பயணம் மேற்கொண்டதால் மதுரவாயல்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஸ்தம்பித்து நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் 12 இன்ஸ்பெக்டர்கள், 15 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர். கோயம்பேடு-பூந்தமல்லி நெடுஞ்சாலை, 100 அடி சாலை பஸ் நிலைய சந்திப்பு, மெட்டுக்குளம் சந்திப்பு, காளியம்மன் கோவில் தெரு சந்திப்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஏராளமான போலீசார் நெரிசலை சீரமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    • பஸ்கள் மற்றும் தங்களது சொந்த வாகனங்களில் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
    • போதுமான மாநகர பேருந்துகள் இயக்கப்படாதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    தாம்பரம்:

    கடந்த 12-ந் தேதி தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடு முறையை முடித்துக் கொண்டு தென் மாவட்ட மற்றும் வட மாவட்டங்களில் உள்ள பல ஊரிலிருந்து சென்னை நோக்கி அதிகப்படியான மக்கள் அரசு பேருந்து தனியார் வாகனங்கள் ஆம்னி பஸ்கள் மற்றும் தங்களது சொந்த வாகனங்களில் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    வண்டலூர் மீஞ்சூர் பைபாஸ் சாலையில் வாகனங்களை பிரித்து அனுப்புவதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. அங்கு போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காக போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இரவு முதல் கனமழை பெய்து வருவதால் சாலை ஓரம் குளம் போல் மழை நீர் தேங்கி உள்ளது. பொதுமக்கள் வண்டலூரில் இறக்கிவிடப்பட்டு அங்கிருந்து தனியார் வாகனங்கள் ஆட்டோ, கால் டாக்சி உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றனர்.

    போதுமான மாநகர பேருந்துகள் இயக்கப்படாதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    • நண்பர்களுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையை மது விருந்துடன் கொண்டாட சின்னா திட்டமிட்டார்.
    • மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு அடுத்த புலிக்குன்றம் காந்தலூரை சேர்ந்தவர் சின்னா(வயது28). வெல்டரான இவர் மாமல்லபுரம் வெண்புருஷம் பகுதியில் உள்ள மாமா வீட்டில் தங்கியிருந்து பூஞ்சேரியில் வேலை பார்த்து வந்தார். நண்பர்களுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையை மது விருந்துடன் கொண்டாட சின்னா திட்டமிட்டார்.

    ஆனால் அவரிடம் போதிய அளவு பணம் இல்லை. இதைத்தொடர்ந்து சின்னா தனது மாமாவிடம் பணம்கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர் பணம் கொடுக்க வில்லை. இதனால் சின்ன மனம் உடைந்தார். இந்த நிலையில் சின்னா அப்பகுதியில் உள்ள பாலாறு குட்டை அருகே மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வியாதிகளுக்கு எந்த வகையான மருந்துகள் வழங்கப்படுகின்றன என விளக்கினார்.
    • திருப்போரூர் அரிமா சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    திருப்போரூர்:

    திருப்போரூர் அரசு மருத்துவமனையில், ஆயுர் வேத மருத்துவ பிரிவில், 8-வது தேசிய ஆயுர்வேத தினம் மற்றும் தன்வந்தரி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி (பொறுப்பு) மருத்துவர் கீதாராணி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மைதிலி வரவேற்றார். ஆயுர்வேத மருத்துவர் ஜெயதேவி ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்பை பற்றியும், நோய் வராமல் காத்துக்கொள்ள நாம் கடைபிடிக்க வேண்டியவைகள், உண்ண வேண்டிய உணவுகள், எண்ணைக்குளியலின் பயன்கள், அடுப்பாங்கரையில் ஆயுர்வேதம், ஆயுர்வேதத்தில் பஞ்ச கர்மா சிகிச்சைகள் போன்றவற்றை விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.

    மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் வியாதிகளுக்கு எந்த வகையான மருந்துகள் வழங்கப்படுகின்றன என விளக்கினார். விழாவில் மூலிகை மருந்து பொருட்கள், நவதானியங்கள் பொது மக்களின் பார்வைக்காக காட்சிப் படுத்தப் பட்டிருந்தது. விழாவில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் திருப்போரூர் அரிமா சங்கத்தினர் கலந்து கொண்டனர். ஆயுர்வேத மருந்தாளுநர் இன்பமணி நன்றி கூறினார்.

    • முதியவர் மன உளைச்சலில் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • முதியவர் தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் பரமசிவம் நகரை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (வயது 67) இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சுகர் அதிகமாகி அடிக்கடி மயக்கம் அடையும் நிலை ஏற்பட்டதால் மன உளைச்சலில் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×