சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020-ம் ஆண்டு தொழிலாளி 16 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்தார்.வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
Published on

செங்கல்பட்டு:

உத்திரமேரூர் அருகே உள்ள ஒழுகரை கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது58). தொழிலாளியான இவர் கடந்த 2020-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை மிரட்டி கற்பழித்தார். இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார்.

இது தொடர்பான புகாரின் பேரில் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். அப்போது குற்றவாளி குணசேகரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com