என் மலர்
செங்கல்பட்டு
கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் உயிரிழந்து வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது.
இந்த நிலையில் வெளிநாட்டவர்கள் அதிகளவில் வந்து செல்லும் சுற்றுலா நகரமான மாமல்லபுரத்திற்கு சமீபத்தில் சீன அதிபர் வந்து சென்றதையடுத்து சீன சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கிறார்கள்.
இதனால் மாமல்லபுரம் பகுதியில் கொரோனா வைரஸ் எளிதில் பரவுமோ என்ற பயத்தில் மாமல்லபுரம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் முக கவசம் அணிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ரத்த பரிசோதனைக்கு வரும் அனைத்து நோயாளிகளிடமும் நேற்று முதல் அவர்களது செல்போன் நம்பர்கள் வாங்கப்பட்டு வருகிறது. காய்ச்சல், சளி, மயக்கம், கடும் உடல்வலி, ரத்தவாந்தி, நிற்காத வயிற்றுபோக்கு, காய்ச்சலுடன் கூடிய அடிக்கடி தும்மல் இதுபோன்ற தீவிர நோயால் எவரேனும் வந்து பரிசோதிக்கும்போது கொரோனா பாதிப்பு ஏதும் இருந்தால் அவர்களை உடனடியாக தொடர்பு கொள்ளும் வசதிக்காக இந்த ஏற்பாடுகளை செய்துள்ளதாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேலும் மருத்துவமனை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உள்ளதா என தினமும் செங்கல்பட்டில் இருந்து வந்து உயர் சுகாதார அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டை அடுத்த பரனூரில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிக்கு கடந்த 26-ந்தேதி நள்ளிரவில் கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பஸ் வந்தத.
அப்போது பஸ் டிரைவர் நாராயணனுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் பஸ் பயணிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே அது மோதலாக உருவானது.
சுங்கச்சாவடி ஊழியர்களை பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்கள் விரட்டியடித்தனர். மேலும் சுங்கச்சாவடியில் உள்ள அனைத்து பூத்துகளையும் அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர்.
இது தொடர்பாக பஸ் டிரைவர் நாராயணன், கண்டக்டர் பசும்பொன் முத்து ராமலிங்கம், சுங்கச்சாவடி ஊழியர்கள் குல்தீப் சிங், விகாஸ் குப்தா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட போது அங்குள்ள 12 பூத்துக்கள் மற்றும் அலுவலகத்தில் இருந்த ரூ.18 லட்சம் மாயமாகி இருப்பதாக சுங்கச்சாவடி பொறுப்பாளர் விஜயபாபு செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் சுங்கச்சாவடியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பணம் கொள்ளைப் போனதா? என்று விசாரித்து வந்தனர்.
ரூ.18 லட்சம் மாயமானது தொடர்பாக போலீசார் சுங்கச்சாவடி ஊழியர்கள் 58 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அலுவலக ஊழியர்கள் 10 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் 8 பேர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள். 2 பேர் சேலத்தை சேர்ந்தவர்கள்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுங்கச்சாவடியில் இருந்து ரூ.18 லட்சத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.18 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும் போது, சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட போது அங்கிருந்த பணத்தை ஊழியர்கள் எடுத்து சென்றுள்ளனர். மோதலின் போது பொதுமக்கள் எடுத்து சென்றுள்ளனர் என்று கூறினால் சந்தேகம் வராது என்று பணத்தை கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது ஊழியர்களே பணத்தை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது என்றனர்.
இது தொடர்பாக 10 ஊழியர்களையும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊழியர்கள் கூறும் போது, சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட போது பணத்தை பத்திரமாக எடுத்துச் சென்றதாக கூறியதாக தெரிகிறது.
ஆனால், பணத்தை போலீசாரிடம் உடனே ஒப்படைக்காமல் இருந்ததால்தான் ஊழியர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது.
செங்கல்பட்டை அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த 26-ந்தேதி நள்ளிரவு அதன் ஊழியர்களுக்கும் அரசு பஸ் டிரைவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து மற்ற பஸ் டிரைவர்களும் அவருக்கு ஆதரவாக குதித்து தங்களது பஸ்களை குறுக்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பஸ்சில் இருந்த பயணிகளும் ஆதரவு தெரிவித்து சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதில் ஏற்பட்ட தகராறில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். அலுவலகத்தில் இருந்த மின் சாதன பொருட்கள், கேபிள்கள் உள்ளிட்ட அனைத்தும் சேதம் அடைந்தது.
இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் நாராயணன், சுங்கச்சாவடி ஊழியர்கள் 2 பேர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சுங்கச்சாவடியை சேதப்படுத்தியவர்களை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
சுங்கசாவடியை பஸ் பயணிகள் நொறுக்கியபோது ரூ.18 லட்சம் பணம் மாயமாகி இருப்பதாக மேற்பார்வையாளர் விஜயபாபு என்பவர் செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்துள்ளார். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே சுங்கச்சாவடியில் மோதலுக்கான காரணம் குறித்து உளவுத்துறை அதிகாரிகளும் விசாரணையில் இறங்கி உள்ளனர். இன்று காலை உளவுத்துறை டி.எஸ்.பி. பிரதீப்குமார் மற்றும் போலீசார் பரனூர் சோதனை சாவடிக்கு வந்தனர். அவர்கள் சூறையாடப்பட்ட அலுவலக அறைகளை பார்வையிட்டனர். சேதமதிப்புகளையும் ஆய்வு செய்தனர்.
அப்போது அவ்வழியே வந்த வாகன ஓட்டிகளிடம் சுங்கச்சாவடி ஊழியர்களின் செயல்பாடுகள் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தனர். சுமார் 2 மணி நேரம் சோதனைச்சாவடியில் உளவுத்துறை போலீசார் ஆய்வு செய்தனர்.
சுங்கச்சாவடி முழுவதும் சேதமடைந்ததையடுத்து இன்று 4-வது நாளாக வாகனங்கள் கட்டணம் இல்லாமல் இலவசமாக சென்றன.
செங்கல்பட்டு:
பரனூர் சுங்கச்சாவடியை பயணிகள் சூறையாடிய போது பாதுகாப்புக்கு சென்ற போலீசார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு அவர்களை விரட்டி அடித்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
பரனூர் சுங்கச்சாவடி சூறையாடப்படும் தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. கந்தன், செங்கல்பட்டு தாலுகா இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர், டவுண் இன்ஸ்பெக்டர் ஸ்டேன்லி அந்தோணி சாமி உள்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
பஸ் பயணிகளும், பொது மக்களும் 200க்கும் மேற்பட்டோர் சுங்கச் சாவடியை சூறையாடியதால் அவர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியும் கேட்கவில்லை.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர் தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டார். இதன் பின்னரே சுங்கச்சாவடியை சூறையாடியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இதுபற்றி இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டரிடம் கேட்டபோது, ‘சுங்கச்சாடியில் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டேன். இதன் பின்னர் மோதலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்’ என்றார்.
தாம்பரம்:
தாம்பரம் அருகேயுள்ள நெடுங்குன்றம் தேவராஜ் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் துரைமுருகன். கூடுவாஞ்சேரியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் கடந்த 24-ந்தேதி உறவினர் திருமணத்திற்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார்.
இன்று காலை வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருந்தனர். இதுகுறித்து பீர்க் கன்காரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டை அடுத்த பரனூரில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு வட மாநிலத்தவர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள்.
கடந்த 26-ந்தேதி அதிகாலை ஒரு மணி அளவில் கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற அரசு பஸ் பரனூர் சுங்கச்சாவடியை வந்து அடைந்தது. அப்போது பஸ் டிரைவர் நாராயணனுக்கும், சுங்கச்சாவடியில் உள்ள ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் பஸ் பயணிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே அது மோதலாக வெடித்தது. சுங்கச்சாவடி ஊழியர்களை பஸ் பயணிகள் மற்றும் அங்கு வாகனங்களில் காத்திருந்த பொதுமக்கள் விரட்டியடித்தனர்.
மேலும் சுங்கச்சாவடியில் உள்ள அனைத்து பூத்துகளையும் அடித்து நொறுக்கினர். கம்ப்யூட்டர், அலுவலகங்கள் சூறையாடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். நள்ளிரவு நேரத்தில் நடந்த இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சூறையாடப்பட்ட சுங்கச்சாவடியில் கம்ப்யூட்டர், இணைய தள கேபிள், தடுப்பு கட்டைகள் உள்ளிட்ட அனைத்தும் சேதம் அடைந்ததால் அங்கு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. தொடர்ந்து இலவசமாக அனைத்து வாகனங்களும் சென்றன.
இந்த நிலையில் சுங்கச்சாவடி சூறையாடப்பட்டபோது அங்குள்ள 12 பூத்துக்கள் மற்றும் அலுவலகத்தில் இருந்த ரூ.18 லட்சம் மாயமாகி இருப்பதாக சுங்கச்சாவடி பொறுப்பாளர் விஜயபாபு செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கம்ப்யூட்டரில் பதிவான கணக்கு விவரத்தை வைத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் சுங்கச்சாவடியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பணம் கொள்ளைப்போனதா? என்றும் விசாரித்து வருகிறார்கள்.
சேதம் அடைந்த சுங்கச்சாவடியை சீரமைக்க ஒரு வாரம் ஆகும் என்று நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இன்று 3-வது நாளாக வாகனங்கள் கட்டணம் இல்லாமல் சென்றன.
அரசு பஸ் டிரைவர் சுங்கச்சாவடியில் வந்தபோது அங்கிருந்த ஊழியர்கள் கட்டணம் கேட்டுள்ளனர். அப்போது டிரைவர் அவர்களிடம் பாஸ்டேக்கில் ஏற்கனவே கட்டணம் செலுத்தப்பட்டு விட்டதாக கூறி இருக்கிறார். இதில் ஏற்பட்ட தகராறே மோதலாக வெடித்து இருக்கிறது.
டிரைவரிடம் எல்லைமீறிய சுங்கச்சாவடி ஊழியர்களை கண்டதும் பஸ் பயணிகள் கண்டித்துள்ளனர். ஆனால் சுங்கச்சாவடியில் இருந்த வடமாநில ஊழியர்கள் அனைவரும் மொத்தமாக எதிர்த்ததால் மோதல் உருவானது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பஸ் பயணிகளும், பின்னால் வந்த மற்ற வாகனங்களில் இருந்த பொதுமக்களும் இந்த மோதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மத்திய மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாளையொட்டி திருக்கழுக்குன்றம் பஸ் நிலையம் அருகே ஏழை-எளிய மக்களுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பில் நலத்திட்டஉதவி வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் ஏழை- எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கி பேசியதாவது:-
தன்மானத்தோடு தமிழ் நாட்டை ஆண்ட எம்.ஜி.ஆர், பெரியார் கூறிய சமுதாய சீர்த்திருத்தங்கள், அண்ணா மேற்கொண்ட ஏழை-எளிய மக்களின் முன்னேற்றம் போன்றவற்றை நடைமுறை படுத்தினார்.
எம்.ஜி.ஆர். விட்டு சென்ற பணியை ஜெயலலிதா வேதனைகளையும் சோதனைகளையும், பல்வேறு கொடுமைகளையும் தகர்த்து கழகத்தில் 1½ கோடி தொண்டர்களை உருவாக்கினார்.

மு.க.ஸ்டாலின் குட்டிக்கரணம் போட்டாலும் தமிழ் நாட்டில் முதல்-அமைச்சராக முடியாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கூறி அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றன.
ஆட்சியை கவிழ்ப்பதற்கு சிலர் முயற்சி மேற்கொண்ட சமயத்தில் தொண்டர்கள் ஒற்றுமையுடன் இருந்து வரலாறு படைத்து அ.தி.மு.க.வை ஒரே இயக்கமாக கட்டி காத்தனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
படுகாயம் அடைந்த வேல்முருகன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
போலியோ சொட்டு மருந்து வழங்கும் ஒருங்கிணைப்பு கூட்டம் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி கூட்டரங்கில் கலெக்டர் ஜான் லூயிஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
தமிழகம் முழுவதும் வரும் 19ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1675 மையங்களில் சுமார் 2,67,158 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
இந்த முகாமில் பொது சுகாதாரத் துறை பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர்கள் ஆக மொத்தம் 5,450 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், திருவிழா நடைபெறும் இடங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்கா ஆகிய இடங்களில் தனியாக முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு வரும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வெளி மாநிலங்களில் இருந்து கட்டுமான பணிக்காக வந்துள்ள பணியாளர்களின் குழந்தைகளின் எண்ணிக்கை தனியாக கணக்கிடப்பட்டு அவர்களுக்கும் 54 சிறப்பு நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் ஏற்கனவே சொட்டு மருந்து வழங்கப்பட்டு இருப்பினும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ என்னும் இளம்பிள்ளை வாத நோயை முற்றிலும் ஒழித்திட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் விரைவு ரெயில் தினமும் காலை 7.40 மணிக்கு மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்த ரெயில் 14 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த சில நாட்களாக 12 பெட்டிகளுடன் வருகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் போதிய இடவசதி இன்றி அவதிப்படும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் ரெயிலை வழக்கம் போல் 14 பெட்டிகளுடன் இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று காலை மதுராந்தகம் ரெயில் நிலையத்தில் பயணிகள் மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை நடத்திய ரெயில்வே அதிகாரிகள் நாளை முதல் (இன்று) வழக்கம் போல் இயக்கப்படும் என கூறினர்.
ஆனால் இன்று காலையும் 12 பெட்டிகளுடன் புதுச்சேரி ரெயில் மதுராந்தகத்தை வந்து அடைந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் மீண்டும் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.
ரெயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பயணிகளை கலைந்து போகச் செய்தனர். தென்னக ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
பயணிகளின் இந்த மறியல் போராட்டத்தால் புதுவை ரெயில் சுமார் 20 நிமிடம் தாமதமாக சென்னைக்கு புறப்பட்டு சென்றது.
செங்கல்பட்டு:
வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம், அறிஞர் அண்ணா காலனியை சேர்ந்தவர் வீரா என்கிற வீரபாண்டியன் (வயது 21) பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு வழக்குகள் கூடுவாஞ்சேரி, ஓட்டேரி போலீஸ் நிலையங்களில் உள்ளன.
நேற்று முன்தினம்இரவு வீரா, ஊரப்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகே உள்ள டீக்கடையில் நின்றார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் திடீரென வீராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக வெட்டினர்.
இதில் பலத்த காயம் அடைந்த வீரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் விசாரணை நடத்தினார்.
இந்த கொலை தொடர்பாக வீராவின் நண்பர்கள் தீபக்ராஜ், அமர், நாகராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கடந்த மாதம் வீரா, தாம்பரத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் ரூ. 1 லட்சம் வழிப்பறி செய்து இருந்தார்.
இந்த வழக்கில் கைதான அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்து உள்ளார். அதற்குள் அவரை தீர்த்துக்கட்டி விட்டனர்.
உத்திரமேரூர் அடுத்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் டில்லிபாபு (வயது 37). கூலித்தொழிலாளி. இவருக்கும் பருத்திக்கொள்ளை பகுதியை சேர்ந்தவர் பாபு (28) என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று டில்லிபாபு உத்திரமேரூர் செங்கல்பட்டு சாலையில் நடந்து சென்ற போது, அந்த வழியே காரில் வந்த பாபு மற்றும் அவரது நண்பர்கள் டில்லிபாபுவை கடத்தி சென்றுள்ளனர். பின்னர், சிறுங்கோழி பகுதியில் வைத்து கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, டில்லிபாபு அவர்களிடமிருந்து தப்பி நெல்வாய் பகுதியில் வைத்து சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தார். சாலவாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம் தலைமையிலான போலீசார் நெல்வாய் பகுதியில் விரைந்து வந்து டில்லிபாபுவை மீட்டனர்.
இதைத்தொடர்ந்து, அங்கு மறைந்திருந்த பாபுவின் கூட்டாளிகளான மகேந்திராசிட்டி பகுதியை சேர்ந்த அமல்ராஜ் (34), விஜயகுமார் (33), மற்றும் ராதா (30) ஆகிய 3 பேரையும் கைது செய்து, உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய பாபுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.






