search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "two death"

    மதுராந்தகம் அருகே கார் விபத்தில் 2 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் மீது மோதிய வாகனம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
    மதுராந்தகம்:

    திண்டிவனத்தை சேர்ந்தவர் குமரன். இவர் தனது நண்பருடன் காரில் இன்று காலை சென்னையை நோக்கி வந்து கொண்டு இருந்தார். மதுராந்தகத்தை அடுத்த மேட்டுப்பாளையத்தில் கார் வந்து கொண்டிருந்தது.

    அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்று கார் மீது திடீரென மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.இதில் குமரனின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் கவிழ்ந்து உருண்டது.

    இதில் காரில் இருந்த குமரன் உள்பட 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காரில் இருந்து 2 பேர் உடலையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் மீது மோதிய வாகனம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    குமரன் எதற்காக சென்னை வந்தார் என்பதும் அவருடன் பயணித்த நண்பரின் பெயர் விவரம் தெரியவில்லை. இதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    புதுக்கோட்டை அருகே கஜா புயலால் அறுந்து கிடந்த மின் கம்பியை அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து பெண் உள்பட 2 பேர் பலியாகினர். #Electricattack
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கஜா புயலால் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சாரமின்றி பொதுமக்கள் தவித்தனர்.

    மின் கம்பங்கள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது மாவட்டம் முழுவதும் 95 சதவீதம் அளவுக்கு சீரமைப்பு பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள சில பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மின் சீரமைப்பு பணியின்போது மின்சார ஊழியர்கள் விபத்தில் சிக்கினர். இதில் ஒருவர் பலியானார். மேலும் ஆங்காங்கே அறுந்து கிடந்த மின்கம்பிகளாலும் விபத்துக்கள் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று காலை 2 பேர் மின்சாரம் பாய்ந்து பலியாகினர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரையப்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி மனைவி சுசீலா (வயது 50). அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் சக்தி (25). இவர்கள் இருவரும் இன்று காலை அப்பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக நடந்து சென்றனர். அப்போது வழியில் புயலால் சேதமான மின் வயர்கள் அறுந்து கிடந்தன.

    அந்த வயர்கள் அப்புறப்படுத்தப்படாமல் அங்கேயே கடந்த 25 நாட்களாக கிடந்தது. மின் சப்ளை இல்லாததால் அந்த மின்வயர்களை பொதுமக்கள் அப்புறப்படுத்தி அந்த வழியாக சென்று வந்தனர்.

    அதுபோல் இன்று காலை சுசீலாவும், சக்தியும் மின் வயர்களை அப்புறப்படுத்த முயன்றபோது திடீரென அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஆலங்குடி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அறுந்து கிடந்த மின் வயர்களில் மின்சாரம் பாய்ந்தது எப்படி என்று தெரியவில்லை. அங்கு ஒரு சில பகுதியில் மின் சீரமைப்பு பணிகள் முடிவுற்று மின் சப்ளை செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் அறுந்து கிடந்த மின் வயர்களில் மின்சாரம் பாய்ந்திருக்கும் என தெரிகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சம்பவ இடத்திற்கு மின்வாரிய அதிகாரிகள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் திரண்டு கோரிக்கை விடுத்தனர். #Electricattack


    தேனி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் அடையாளம் தெரியாத வாலிபர் பலியானார்.
    தேனி:

    தேனி அருகே சுக்காங்கால்பட்டி வாசகர் சாலை தெருவை சேர்ந்தவர் ஆண்டவர் (வயது35). இவர் குமுளி-தேனி மெயின் ரோட்டில் வந்துகொண்டி ருந்போது கோட்டூர் அருகே எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி உள்ளார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து கோட்டூர் சீலையம்பட்டி வி.ஏ.ஓ. தங்கமுத்து அளித்த புகாரின் பேரில் ஆண்டவரை போலீசார் கைது செய்தனர்.

    மற்றொரு சம்பவம்...

    ஜெயமங்கலம் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது30). இவர் தனது நண்பர் ராஜபாண்டி (30), இருளப்பன் (29) ஆகியோருடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெரியகுளம் தென்கரை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் நிலைதடுமாறி ஆட்டோ மீது மோதியதில் ராஜபாண்டி, இருளப்பன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து ராஜா தென்கரை போலீசில் அளித்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த கம்பம் கிழக்கு தெருவை சேர்ந்த அஜித்குமார் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    வத்தலக்குண்டு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர்கள் பலியாகினர். இது குறித்து விருவீடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே உள்ள விருவீடு செம்மேட்டுப்பட்டியைச் சேர்ந்த செல்வம் மகன் வெற்றி (வயது 18). அதே பகுதியைச் சேர்ந்த போஸ் மகன் அருண் (17). இவர்கள் 2 பேரும் லாரி கிளீனர் வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று இரவு தங்கள் பகுதியில் நடந்த கோவில் திருவிழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் போதையில் ஒரே மோட்டார் சைக்கிளில் இருவரும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

    அப்போது வத்தலக்குண்டு காந்தி நகரைச் சேர்ந்த பழனிக்குமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். இவர் வத்தலக்குண்டுவில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.

    குடிபோதையில் வந்த வாலிபர்கள் பழனிக்குமார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதினர். இதில் வெற்றி மற்றும் பழனிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த அருண் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் மதுரை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான பழனிக்குமாருக்கு அருணாதேவி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    குடிபோதையில் ஏற்பட்ட விபத்தால் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விருவீடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை அருகே வெவ்வேறு விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் ரஞ்சித் (வயது 25).

    சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவை மதுக்கரை எல்.அன்ட். டி.பைபாஸ் ரோட்டில் சென்றார். அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ரஞ்சித் சம்பவடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த தகவல் கிடைத்ததும் மதுக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த ரஞ்சித்தின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்...

    நீலாம்பூர் அருகே உள்ள கோவை-அவினாசி ரோட்டை 65 வயது மதிக்கத்தக்க முதியவர் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த தகவல் கிடைந்ததும் சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முதியவரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×