search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "different accident"

    தேனி அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த இரு சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கூடலூர்:

    தேனி அருகே கூடலூர் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55). கூலித் தொழிலாளி. கூடலூர் - கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் புதிய பஸ்நிலையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கம்பத்தில் இருந்து காய்கறி ஏற்றி வந்த சரக்கு வாகனம் சீனிவாசன் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் படுகாயமடைந்த அவரை கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான கூடலூர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி அருகே உத்தமபாளையம் ராயப்பன் பட்டியைச் சேர்ந்தவர் ராசு (வயது 57). சம்பவத்தன்று அணைப்பட்டி - ராயப்பன்பட்டி சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த வாகனம் ராசு மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    இதில் படுகாயமடைந்த அவர் தேனி அரசு ஆஸ்பத் திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோவை அருகே வெவ்வேறு விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் ரஞ்சித் (வயது 25).

    சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவை மதுக்கரை எல்.அன்ட். டி.பைபாஸ் ரோட்டில் சென்றார். அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ரஞ்சித் சம்பவடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த தகவல் கிடைத்ததும் மதுக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த ரஞ்சித்தின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்...

    நீலாம்பூர் அருகே உள்ள கோவை-அவினாசி ரோட்டை 65 வயது மதிக்கத்தக்க முதியவர் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த தகவல் கிடைந்ததும் சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முதியவரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×