என் மலர்
அரியலூர்
- கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என நீண்ட ஆண்டுகளாக விவசாயிகளும், பா.ம.க.வும் வலியுறுத்தி வருகிறது.
- மதுவிலக்கு துறை என்பதை மது விற்பனை துறை என பெயர் மாற்றிக்கொள்ளலாம்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் சோழர் கால பாசன திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் 5 லட்சம் கையெழுத்து வாங்கும் இயக்கம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட பொன்னேரி என்கிற சோழகங்கத்தில் நடைபெற்றது. இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரியலூரில் சோழர் கால பாசன திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீர் பாசன துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினேன். இதையடுத்து பொன்னேரியை முழுமையாக தூர்வாரி கரைகளை பலப்படுத்தவும், பூங்கா அமைக்கவும் முதல் கட்டமாக ரூ.622 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்ப்பாசன ஏரிகளையும் தூர்வார முதல் கட்டமாக ரூ.5 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என நீண்ட ஆண்டுகளாக விவசாயிகளும், பா.ம.க.வும் வலியுறுத்தி வருகிறது. 10 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பதே பா.ம.க. நிலைப்பாடாகும். ஆனால் தடுப்பணைகளுக்கு பதிலாக 10 இடங்களில் மண் குவாரிகளை தமிழக அரசு திறந்துள்ளது.
ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்று எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது கூறிய மு.க.ஸ்டாலின் தற்பொழுது முதலமைச்சராக உள்ள நிலையில் அது குறித்து எந்த நிலைப்பாடும் தெரிவிக்காதது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் உள்ள மதுவிலக்கு துறை மது விற்பனையை எவ்வாறு அதிகரிக்கலாம் என பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது. இதனால் மதுவிலக்கு துறை என்பதை மது விற்பனை துறை என பெயர் மாற்றிக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரியலூரில் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது
அரியலூர்,
அரியலூர் தனியார் விடுதியில் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர செய லாளர் தாமஸ் ஏசுதாஸ் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் வேல்முரு கன், மாவட்ட பொருளாளர் சக்திவேல், மாவட்ட துணைசெயலாளர் பாண்டியன், பொறியாளார் அணி துணைசெயலாளர் ராஜாபன்னீர் செல்வம், தலைமைசெயற்குழு உறுப்பினர் ஆனந்தன், இளைஞர் அணி ராஜா, தொழிற்சங்கம் வீரசிங்கம், தொண்டர் அணி கணேசன் உட்பட அனைத்து பிரிவு பொருப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அரியலூரில் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும். ஆகஸ்ட் மாதம் 25ந் தேதி தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டா டப்பட வேண்டும், அனைத்து கிராமங்களிலும் கொடியேற்றுதல், ஏழை, உளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும், அரியலூர் நகரின் அனைத்து பகுதிகளிலும், சாலைகளின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்திடவும், உட்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்ற ப்பட்டன.
கூட்ட முடிவில் ரவிக்குமார் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் தாமஸ்ஏசுதாஸ், மாவட்ட அவைதலைவர் ஜோசப்சத்தியமூர்த்தி, மாவட்டதுணை செ யலாளர்கள் தெய்வசி காமணி எழிலரசன், தங்கஜெயபால், ஒன்றிய செயலாளர்கள் அரியலூர் மணிகண்டன், திருமானூர் கிழக்கு ராஜகுமார், மேற்கு ஜெகதீசன்,தா.பழுர் அறிவழகன், ஆண்டிமடம் குமாரதேவன், செந்துறை செல்வராஜ், ஜெயங்கொண்டம் ஒன்றிய அவை தலைவர் கலைவாணன், நகர அவை தலைவர் ஆனஸ்ட்ராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், சின்னபாண்டு, பொதுக்குழு உறுப்பினர் ஜெயவேல் அரியலூர் ஒன்றியக்குழு துணை தலைவர் சரஸ்வதி ஜெயவேல் , மாவட்ட தொழிற்சங்க நிர்வாகி பாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- சிறுவளூர் அரசு பள்ளி சார்பில் காகித பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
- நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார்.
அரியலூர்,
காகிதப் பை தினத்தையொட்டி, அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் சார்பில் அவ்வூரிலுள்ள கடைகளுக்கு காகித பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னதாக பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். அரியலூர் அரசு கலைக் கல்லூரி சுற்றுச்சூழல் துறை உதவி பேராசிரியர் அறிவொளி, சுற்றுச்சூழல் துறை உதவி பேராசிரியர் அனிதா கலந்து கொண்டு காகிதப் பை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியைத தொடர்ந்து, ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவ,மாணவிகள் அனைவரும் ஒவ்வொரு கடைகளுக்குச் சென்று தயாரிக்கப்பட்ட காகிதப் பைகளை வழங்கினர். நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் அம்பிகா, துணைத் தலைவர் பழனியம்மாள், பள்ளி மேலாண்மை குழு துணைத் தலைவர் ரேவதி, ஆசிரியர்கள் தனலட்சுமி, செவ்வே, தங்கபாண்டி , இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முடிவில் ஆசிரியை செந்தமிழ் செல்வி நன்றி கூறினார்.
- அரியலூர் மாவட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரியலூர்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், ஒப்பந்தபடி ஊதியத்தை வங்கி மூலம் 7-ந் தேதிக்குள் வழங்கிட வேண்டும். ஈஎஸ்ஐ மருத்துவ அட்டை வழங்கிட வேண்டும். பி.எப் பிடித்தம் செய்திட வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட ஆண்டிமடம் குடிநீர் திட்டப் பணியாளர் சுதாகரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கருணாநிதி தலைமை வகித்தார். நிர்வாகிகள் அ.ஞானசேகரன், கே.கணேசன், க.தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலர் எம்.ஆத்மநாதன், திருச்சி மாவட்ட பொதுச் செயலர் ஆர்.மருதைராஜ், சிஐடியு மாவட்டச் செயலர் பி.துரைசாமி, மாவட்ட துணைத் தலைவர்கள் ஆர்.சிற்றம்பலம், எம்.சந்தானம் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
- போட்டித் தேர்வு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
- மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற கைப்பேசி எண்ணை தொடர்புக் கொண்டு பயன்பெறலாம்
அரியலூர்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-1 மற்றும் தொகுதி-2 தேர்விற்கான, கட்டணமில்லா பயிற்சி வகுப்பு 14-ம் தேதி முதல் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டித்தேர்வினை எதிர்கொள்ளும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரக் குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்புக் கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளும் இளைஞர்களுக்கு மாதிரிதேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற கைப்பேசி எண்ணை தொடர்புக் கொண்டு பயன்பெறலாம் என அரியலூர் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
- அரியலூர் அரசு கல்லூரியில் மகளிருக்கான ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
- முகாமுக்கு அக்கல்லூரியின் முதல்வர்(பொ) ஜோ.டோமினிக் அமல்ராஜ் தலைமை வகித்தார்.
அரியலூர்,
அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில், முன்னாள் மாணவர்கள் சங்கம், நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையம் ஆகியவை இணைந்து கல்லூரி மாணவிகளுக்கான மகளிர் நலம் குறித்த ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு அக்கல்லூரியின் முதல்வர்(பொ) ஜோ.டோமினிக் அமல்ராஜ் தலைமை வகித்தார்.அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மைய உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.முத்துக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர், ரத்தசோகை அறிகுறி உள்ள 200 மாணவிகளுக்கு கறிவேப்பிலை பொடி, நெல்லிக்காய் பொடி, முருங்கை இலை பொடி மற்றும் தேன் அடங்கிய இயற்கை நலப்பெட்டகங்களை வழங்கினார். முன்னதாக முன்னாள் மாணவர்கள் சங்கச் செயலாளரும், பேராசிரியருமான வெ.கருணாகரன் அனைவரையும் வரவேற்றார். முடிவில் பொருளாளர் கோ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சங்க பொறுப்பாளர்கள் பெ.ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் த.தண்டபாணி, வை.சிவக்குமார் மற்றும் சங்க உறுப்பினர்கள், பேராசிரியர்கள், யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சையாளர் ச.சரவணன் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.
- லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- அவரிடம் இருந்து வெளிமாநில லாட்டரி சீட்டுகள், செல்போன் மற்றும் ரூ.500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது
அரியலூர் :
அரியலூரில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் அரியலூர் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நீதிமன்றம் அருகே வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டு இருந்த ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் சிட்டிபாபு தெருவை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் (வயது 49) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து வெளிமாநில லாட்டரி சீட்டுகள், செல்போன் மற்றும் ரூ.500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் ேகார்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயங்கொண்டம் சிறையில் அடைக்கப்பட்டார்.
- கல்லூரி விடுதியில் ஜெயங்கொண்டம் மணவி தற்கொலை செய்து கொண்டார்
- செல்போனில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விபரீதம்
ெஜயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தெற்கு வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார். ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் யுவஸ்ரீ (வயது 19). கோவையில் தனியார் என்ஜினியரிங் கல்லூரி விடுதியில் தங்கி ஏரோ நாட்டிக்கல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அன்புமணி (25) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர். தற்போது அன்புமணி சிங்கப்பூரில் தங்கி வேலை செய்து வருகிறார்.இதனால் காதலர்கள் அடிக்கடி செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் செல்போனில் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது இருவருக்கும் இைடயே வாக்குவாதம ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த அன்புமணி தூக்க மாத்திரைகளை அதிகம் தின்று தற்கொலைக்கு முயன்றார். இந்த தகவலை நண்பர்கள் மூலம் அறிந்த யுவஸ்ரீ வேதனை அடைந்தார். தன்னால் காதலன் இறந்து விடுவாரா? என்ற அச்சத்தில் இருந்த மாணவி தனது அறையில் தூக்கிட்டு தற்ெகாலை செய்து கொண்டார். இதனை பார்த்த அவரது ேதாழி ஒருவர் விடுதி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விடுதிக்கு விரைந்து சென்று மாணவி உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரியமணக்குடியில் வடிகால் கட்டுமான பொருட்கள் சேதமடைந்துள்ளது
- இது குறித்து மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், மணக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியமணக்குடி கிராமத்தில், வடிக்கால் கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த கட்டுமானப் பொருள்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில், பெரிய மணக்குடி கிராமத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் நிதியில் இருந்து கழிவுநீர் வடிக்கால் கட்டுவதற்காக, தெருவிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் பிரச்சனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தூண்டுதலின் பேரில், சிலர் கட்டுமானப் பொருள்களை சேதப்படுத்தினர். இதனால் வடிக்கால் கட்டுமானப் பணி தடைபட்டுள்ளது. இது குறித்து மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே புகார் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் நடைபெற்றது
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருந்தது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குறுக்குரோடு பகுதி சுண்டிப்பள்ளத்தில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் செல்லும் பிரதான சாலையில் திண்டிவனம்-கும்பகோணம் சாலை விரிவாக்கத் திட்டத்தின் மூலம் சுரங்கப்பாதை அமைத்து தர கோரியும், கங்கைகொண்டசோழபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மண்மலைக்கும் உலகளந்தசோழனுக்கும் இடையே உள்ள கருவாட்டு ஓடையில் தரைபாலம் அமைத்து தரக்கோரியும், குறுக்குரோடு பகுதியில் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இடமாக உள்ளதால் பொது சுகாதாரம் கருதி கழிப்பறை வசதி செய்து தரக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருந்தது.
இந்நிலையில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி முருகன், தனி வட்டாட்சியர் கலிலூர் ரஹ்மான், பட்டேல் நிறுவனத்தின் பொறியாளர் ஸ்ரீநிதிஷ் உள்ளிட்டோர் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் வாலண்டினா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணிவேல், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட குழு தியாகராஜன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ், ரவீந்திரன், முத்துசாமி, சங்கீதா, கனகவல்லி, சுந்தரமூர்த்தி, ஆட்டோ சங்கர், தலைவர் தமிழரசன், பசுபதி, சொக்கலிங்கம், இதயத்துல்லா மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை அரசு கவனத்திற்கு செலுத்தி நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அணைக்குடம் கிராமத்தைச் சேர்ந்த அம்சவிருத்தன் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து அம்சவிருத்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அம்சவிருத்தனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் அவரின் மனைவி விஜயலட்சுமியின் தந்தை மற்றும் சகோதரரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அம்சவிருத்தனின் உறவினர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து உறவினர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்
அரியலூர்,
பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அங்க ன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுப ட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் 1993-ல் பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களை மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த உதவியாள ர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஊழியர்கள் இல்லாத அங்கன்வாடி மையத்தை மற்றொரு அங்க ன்வாடியுடன் இணைப்பதை கைவிட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஒர் ஆண்டு அளிப்பது போல, சத்துணவு ஊழியர்களுக்கும் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறு த்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதேபோல் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலர் சகுந்தலா தலைமை வகித்தார்.






