என் மலர்tooltip icon

    அரியலூர்

    • ஆத்திரமடைந்த சாமிநாதன் தந்தையை கையால் தாக்கி தள்ளினார்.
    • மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் தா. பழூர் அணை குடம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 70). விவசாயி இவருக்கு சுப்பிரமணியன் (42) சுவாமிநாதன் (40) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் சுப்பிரமணியன் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

    ஆனால் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையான சாமிநாதன் சரியாக வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு ஊர் சுத்தி வந்தார். இதனை அவரின் தந்தை கோபால் கண்டித்தார்.

    இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு சாமிநாதன் மது போதையில் வீட்டுக்கு வந்தார். இதைப் பார்த்ததும் தந்தை கோபால் மகனை திட்டி உள்ளார். ஆத்திரமடைந்த சாமிநாதன் தந்தையை கையால் தாக்கி தள்ளினார். இதில் அவரது தலை வீட்டின் சுவற்றில் மோதி பலத்த காயம் ஏற்பட்டது,

    இதனை பார்த்த அவரது மூத்த மகன் சுப்ரமணியன் தந்தையை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோபால் உயிரிழந்தார். இதுகுறித்து சுப்பிரமணியன் தா பழூர் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மது குடிப்பதை கண்டித்ததால் தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பொறுமை இழந்த சில பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி ரகளை ஈடுபட்ட வாலிபரை கண்டித்தனர்.
    • பேருந்தை முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வாலிபர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பேருந்து பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரம் கல்லாத்தூர் இடையே சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் அந்த பேருந்தை வழி மறித்தார். தனது மோட்டார் சைக்கிளை அந்த பஸ்ஸின் முன்பு குறுக்கே நிறுத்தி அவர் டிரைவரை தகாத வார்த்தைகள் திட்டி ரகளையில் ஈடுபட்டார்.

    இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் செய்வதறியாமல் தவித்தனர். பின்னர் பொறுமை இழந்த சில பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி ரகளை ஈடுபட்ட வாலிபரை கண்டித்தனர். இதனால் அடி விழக்கூடும் எனக் கருதிய அந்த வாலிபர் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த வாலிபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றார். இந்த சம்பவத்தால் அந்த அந்த பேருந்து சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    பேருந்தை முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வாலிபர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பேருந்து பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்ைத அடுத்த கல்லாத்தூர் வடவீக்கம் பஸ் நிறுத்தம், சூரியமணல் பகுதிகளில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தனச்செல்வன், நடேசன் ஆகியோர் அந்தந்த பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வடவீக்கம் பஸ் நிறுத்தம் பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் வடவீக்கம் கைகாட்டி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(55) என்பதும், அவர் பதுக்கி வைத்து மது விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், பாலசுப்பிரமணியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் சூரியமணல் வடக்கு தெருவில் பதுக்கி வைத்து மது விற்ற சின்னதுரையை(55) கைது செய்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • செல்போனை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
    • வீட்டின் முன்பு தூங்கி கொண்டிருந்தார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள ரா.மேட்டு தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 47). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் தனது வீட்டின் முன்புறம் தூங்கி கொண்டிருந்தார். அருகில் செல்போனை வைத்திருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் சேகர் அருகில் இருந்த செல்போனை திருடிக்கொண்டு ஓட முயன்றதாக தெரிகிறது. சத்தம் கேட்டு எழுந்த சேகர், அந்த மர்ம நபரை மடக்கி பிடித்தார். இதுகுறித்து மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் செல்போனை திருடியவர் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ரெட்டியபட்டு மேலத்தெருவை சேர்ந்த சுப்புராஜின் மகன் ராம் பிரசாத் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து ராம் பிரசாத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திராவிடர் கழக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • மத்திய அரசை கண்டித்து நடந்தது

    அரியலூர்

    அரியலூர் அண்ணா சிலை அருகில் திராவிடர் கழக மாவட்ட இளைஞர் அணி சார்பாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞர் அணி செயலாளர் அறிவன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்தி வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம், தலைமைக் கழக அமைப்பாளர் சிந்தனை செல்வன் ஆகியோர் பேசினார்கள். வங்கி பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிப்பதாக மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    • ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்து ரூ.46 லட்சத்துக்கு ஏலம் போனது
    • 336 விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது

    அரியலூர்,

    பெரம்பலூர் விற்பனைக்குழுவிற்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனைக்கூடத்தில் பருத்தி கொள்முதலுக்கான மறைமுக ஏலம் பிரதி வாரம் வியாழக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மறைமுக ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அரியலூர் மாவட்டம் மட்டுமின்றி பெரம்பலூர், விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர், சேலம், திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் நன்கு உலர வைத்து கொண்டு வந்திருந்த பருத்தியை நல்ல விலை கோரி கொள்முதல் செய்தனர். இதில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 657-க்கு விலை போனது. குறைந்த பட்சமாக பருத்தி குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 869-க்கும், சராசரி விலையாக பருத்தி குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 419-க்கும் விலை போனது.

    மறைமுக ஏலத்தில் மொத்தம் 734.92 குவிண்டால் பருத்தி 336 விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. மறைமுக ஏலம் மூலம் ரூ.46 லட்சத்து 17 ஆயிரத்து 629-க்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு, வேளாண்மை துணை இயக்குனர் கண்ணன், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • மாணவிக்கு பாலியல் தொந்தரவு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள அரங்கோட்டையை சேர்ந்தவர் சுந்தரம்(வயது 81). இவர் கடந்த 18.8.2022 அன்று வீட்டில் தனியாக இருந்த மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 15 வயதுடைய பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

    இது குறித்து மாணவியின் தாய் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் ேபாலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் சுந்தரத்தை போக்சோ சட்டத்தின் கீழ் ேபாலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி கர்ணன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றவாளியான சுந்தரத்திற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    மேலும் மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சுந்தரத்தை பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.

    • கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.
    • பின்னர் அந்தமானை கொலையனூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான முந்திரி காட்டில் வனத்துறையினர் பத்திரமாக விட்டனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கொலையனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி ஜோதி (வயது 55). இவருக்கு சொந்தமான நிலம் கொலையனூரில் உள்ள தமிழ்நாடு அரசு முந்திரி காட்டிற்கு அருகே உள்ளது. நேற்று காலை தனது விவசாய நிலத்திற்கு சென்ற ஜோதி அங்குள்ள பாழடைந்த கிணற்றில் புள்ளிமான் ஒன்று உயிருடன் கிடப்பதை கண்டார். பின்னர் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் விழுந்த 3 வயதுள்ள புள்ளிமானை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் அந்தமானை கொலையனூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான முந்திரி காட்டில் வனத்துறையினர் பத்திரமாக விட்டனர்.



    • விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த சம்பவம் குறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 70). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாத நோய் ஏற்பட்டு ஒரு கை மற்றும் ஒரு கால் செயலிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அய்யாசாமி வயலுக்கு அடிப்பதற்காக வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அய்யாசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



    • அரியலூர், உடையார்பாளையம், தேளூரில் நாளை (சனிக்கிழமை)மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது

    அரியலூர் :

    அரியலூர், தேளூர், உடையார்பாளையம், செந்துறை ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அரியலூர் துணைமின் நிலையத்தை சார்ந்த அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும் கயர்லாபாத், ராஜீவ்நகர், விங்கத்தடிமேடு, வாலாஜா நகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளூர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி ஒரு பகுதி, கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கொளப்பாடி, மங்களம், குறுமஞ்சாவடி.தேளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த வி.கைக்காட்டி, தேளூர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, வாழைக்குழி வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாயக்கர்பாளையம். உடையார்பாளையம் துணை மின்நிலையத்தை சார்ந்த உடையார்பாளையம், பரணம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், ஜெ.தத்தனூர், நாச்சியார்பேட்டை, மணகெதி, சோழன்குறிச்சி.செந்துறை துணை மின் நிலையத்தை சார்ந்த ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மருதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன் ஆத்தூர் பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

    • அரியலூரில் பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
    • கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார்

    அரியலூர்,

    அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை, மீண்டும் மஞ்சப்பை, பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாடு குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையேயான விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 150 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுக்கான தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார். 6, 8-ம் வகுப்பு வரை நடைபெற்ற விழிப்புணர்வு ஓவியப்போட்டியில் மாணவி ஹர்ஷா முதல் பரிசையும், மாணவன் ஹரிஷ்குமார் 2-ம் பரிசையும், மாணவன் கபிலன் 3-ம் பரிசையும் பெற்றனர்.

    9, 10-ம் வகுப்பு வரை நடைபெற்ற விழிப்புணர்வு ஓவியப்போட்டியில் மாணவன் ராகுல் முதல் பரிசையும், மாணவன் கிஷோர் 2-ம் பரிசையும், மாணவன் உதயநிதி 3-ம் பரிசையும் பெற்றனர். 11, 12-ம் வகுப்பு வரை நடைபெற்ற ஓவியப்போட்டியில் மாணவி தரனிகா முதல் பரிசையும், மாணவன் திவ்யபாரதி 2-ம் பரிசையும், மாணவன் குணா 3-ம் பரிசையும் பெற்றனர். முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு பெற்ற மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு பெற்ற மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில்குமார், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் அகல்யா மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • முகாமுக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ம.தீபாசங்கரி தலைமை தாங்கினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், காட்டுப் பிரிங்கியம் மற்றும் கீழப்பழுவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசா யிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடை பெற்றது. மேற்கண்ட கூட்டுறவு கடன் சங்கங்களில் நடை பெற்ற முகாமுக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ம.தீபாசங்கரி தலைமை தாங்கி, புதியதாக தயாரி க்கப்பட்ட நுண்ணூ ட்ட மருந்துகள் குறித்து விளக்கி பேசினார். துணைப் பதிவாளர் த.அறப்பளி, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய துணை ப்பதிவாளர் புண்ணிய மூர்த்தி, சார்பதி வாளர் க.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விவசாயி களுக்கு பயிற்சி அளித்தனர். 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    ×