என் மலர்
அரியலூர்
- அரியலூர் தனியார் ஆலைக்கு கொண்டு வரப்பட்ட கரித்தூளில் கலப்படம் செய்த 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
- விசாரணையில் லாரியில் இருந்து ஜிபிஆர்எஸ் கருவியை கழட்டி வைத்து, கலப்படம் செய்தது தெரிய வந்தது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தில் இருக்கும் அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆலைக்கு சென்னை துறை முகத்தில் இருந்து மணி கரி லாரியில் வருவது வழக்கம்.இந்நிலையில் அவ்வாறு ஆலைக்கு வரும் போது அதில் கலப்படம் செய்யப்பட்டதாக ஆலை மேற்பார்வையாளர் நல்லேந்திரனுக்கு தகவல் வந்தது.இதனையடுத்து அந்த லாரி வரும் வழியில் சுமார் ஒரு மணி நேரம் ஒரு இடத்தை கடக்காமல் இருந்ததும் தெரியவந்ததுஇதனையடுத்து ஆலை மேற்பார்வையாளர் நல்லேந்திரன் விக்கிரமங்கலம் பொலீசாரிடம் புகார் தெரிவித்தார்.போலீசார் விசாரணையில் காரில் ஜிபிஆர்ஏஸ் வைத்து லாரியில் வந்த மணி கரியில் ஒரு பகுதியை எடுத்து விட்டு கலப்படம் செய்தது பிறகு மீண்டும் ஜிபிஆர்ஏஸ் லாரியில் வைத்துள்ளனர்.இதனையடுத்து தஞ்சாவூரை சேர்ந்த செந்தில், பிரேம் சங்கர், சதீஷ்குமார், ஹரிஹரன் மற்றும் அரியலூரை சேர்ந்த சுப்ரமணி, குமார், இளையராஜா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
- மாரடைப்பால் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
அரியலூர்,
அரியலூர் மின்நகரில் வசித்து வந்தவர் பூபாலன்(55). இவர், அரியலூர் அடுத்த கயர்லாபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடுகூர் கிராமத்தில் நெஞ்சுவலி வந்துள்ளது. இதையடுத்து, அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை பெற்று, அரியலூர் மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து கயர்லாபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இறந்த பூபாலனுக்கு ஒரு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.
- அரியலூர் நாகல்குழியில் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்
- உடலை பைப்பற்றி போலீசார் விசாரணை
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் நாகல்குழி கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் செல்வராசு. இவர் தனது வீட்டில் மனைவியின் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் அவரது மகள் தந்தையின் வீட்டிற்கு காலை வேலையில் சென்றபோது தனது தந்தை பிணமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கத்தியுள்ளார். அப்போது அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்தபோது செல்வராஜ் உடல் தூக்கில் தொங்கியபடி காலில் ரத்தம் சொட்டியபடி இருந்துள்ளது. இச்சம்பவம் குறித்து உறவினர்கள் இரும்புலிக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து போலீசார் செல்வராசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர் முன்னேற்ற சங்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது
- க்கும் மேற்பட்ட வெல்டிங் பட்டறை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்ட தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர் முன்னேற்ற சங்கத்தின் முப்பெரும் விழா ஜெயங்கொண்டம் தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாகிகள் அடையாள அட்டை வழங்குதல் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்தல் மற்றும் இறுதியில் செயற்குழு கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட கௌரவத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட தலைவர் முரளிதரன் முன்னிலை வகித்து பேசினார். முன்னதாக அரியலூர் மாவட்ட செயலாளர் கொலஞ்சியப்பா வரவேற்று பேசினார்.கூட்டத்தில் மாநிலத் தலைவர் வெங்கடேசன் சங்க செயல்பாடு மற்றும் வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், உடையார்பாளையம், தா.பழூர், மீன்சுருட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் சங்க கொடியினை ஏற்றி வைத்தார். இதில் மாநிலச் செயலாளர் பாலாஜி, மாநில பொருளாளர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு சங்க அடையாள அட்டையை வழங்கினர். கூட்டத்தில் மின் கட்டணம் உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், இரும்பு விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஜெயங்கொண்டம் தா.பழூர், ஆண்டிமடம், உடையார்பாளையம், மீன்சுருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வெல்டிங் பட்டறை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம். ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் சங்க வளர்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கௌரவ தலைவர் சம்மந்தம் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் புஷ்பராஜ், செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக கிளை தலைவர் இளங்கோவன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மதிவாணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் சங்க வளர்ச்சி குறித்து கலந்த ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பாதுகாப்பான முறையில் மின் பணி வேலைகளை செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது. வீடு கட்டும் உரிமையாளர்களுக்கு தரமான மின்சாதன பொருட்களை கொண்டு வயரிங் வேலை செய்ய வலியுறுத்தப்பட்டது. ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் பொது கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும், வாரச்சந்தை நாட்களான திங்கள்கிழமை அன்று ஒரு நாள் மட்டும் ரோடு ஓரங்களில் கடைகள் போடுவதை தவிர்த்து சந்தைக்கு உள்ளேயே கடைகளை வைத்து வியாபாரம் செய்ய வியாபாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயங்கொண்டம் நகர தலைவராக இளங்கோவனும், செயலாளராக ஜெயசீலனும், பொருளாளராக சசிக்குமாரும் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மேலும் சங்கத்திற்கு பல்வேறு நிலை பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட மின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் பொருளாளர் சசிகுமார் நன்றி கூறினார்.
- அரியலூர் உடையார்பாளையத்தில் முந்திரி மரத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சிங்கராயபுரம் தெற்கு தெருவை சேர்ந்த அந்தோணிசாமி(80). இவரது மனைவி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அந்தோணிசாமி மகன் சிமியோன் ராஜ்(49) வீட்டில் வசித்து வந்தார். அந்தோணிசாமி சற்று மனநலம் பாதித்து இருந்த வந்த நிலையில், கடந்த 14-ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். பல்வேறு இடங்களில் அந்தோணிசாமியை தேடி பார்த்து கிடைக்காத நிலையில், சூசைராஜ் என்பவருடைய நிலத்தில் உள்ள முந்திரி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் அந்தோணிசாமி மகன் சிமியோன் ராஜ் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
- அரியலூர் அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது
- முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் பங்கேற்பு
அரியலூர்,
அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமஜெயலிங்கம்மா, மாவட்ட பொருளாளர் அன்பழகன், இளைஞரணிதுணை செயலாளர் தங்கபிச்சமுத்து, மாணவரணி சங்கர், மகளிரணி ஜீவா, இளைஞரணி சிவசங்கர், பால்சொசைட்டி சங்கதலைவர் பாஸ்கர், ஊராட்சி மன்றதலைவர்கள் பிரேம்குமார், செங்கமலை, சிவா, ஒன்றியசெயலாளர் செல்வராசு, பாலு, நகரசெயலாளர், செந்தில் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர். மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநில மாநாடு சிறப்பாக நடத்திட பாடுபடவேண்டும். மேலும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி வரும் 20ம் தேதி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழக பொறுப்பாளர்கள் அனைத்து அணிபொறுப்பாளர்களும், கூட்டுறவு சங்கம், உள்ளாட்சி அமைப்பு மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
- ஆலந்துறையார் கோவிலில் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது.
- மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன
அரியலூர்
அரியலூர் சிவன் கோவில் தெருவில் உள்ள ஆலந்துறையார் அருந்தவ நாயகி கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி நடைபெற்றது. இதையொட்டி மண்டலாபிஷேக விழா நேற்று நடந்தது. காலை சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டு மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சுற்று பிரகாரத்தில் கர்நாடக இசை கச்சேரிகள், பாட்டு, பட்டிமன்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஓம் நமச்சிவாயா அறக்கட்டளை குழுவினர் செய்து இருந்தனர்.
- சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
- சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் சனி மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்தியம்பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரகார பிரதட்சணம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிரதோஷ வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலி கருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்க சகாயேஸ்வரர் கோவில், மதனத்தூர் ராமலிங்கேஸ்வரர் கோவில், அருள்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
- மக்களின் பிரச்சினைகளை எடுத்துக்கூறினர்
அரியலூர்
அரியலூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்செல்வி தலைமை தாங்கினார். துணை தலைவர் சரஸ்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருளப்பன், முத்துக்குமார், மேலாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களது பகுதி மக்களின் பிரச்சினைகளை எடுத்துக்கூறினர். அதனைத்தொடர்ந்து அனைத்து ஊராட்சிகளிலும் சாலை, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
- மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கோவிந்தபுத்தூர் கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்துவதாக கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்விக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அவர் விக்கிரமங்கலம் போலீசாருக்கு புகார் தெரிவித்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த வழியாக சென்ற மாட்டுவண்டியை தடுத்து நிறுத்தினர். விசாரணையில் கொள்ளிடம் ஆற்று படுகை பகுதிகளில் இருந்து முத்துவாஞ்சேரி பகுதிகளுக்கு மணல் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கோவிந்தபுத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது.
- 250-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் ஈடுபட்டனர்
அரியலூர்
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணிஅரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் சென்னையில் இருந்து 250-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் உழவாரப்பணியில் ஈடுபட்டனர். கோவில் பிரகாரங்களில் படிந்திருக்கும் தூசிகள், எண்ணை கரைகள், விபூதி கரைகள் உள்ளிட்டவைகளை தண்ணீர் தொட்டு துணிகளால் துடைத்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கங்கைகொண்ட சோழபுரம் கோவில் செயல் அலுவலர் செந்தமிழ் செல்வி மற்றும் கோவில் நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






